Tamil Marx

கட்டுரைகள் சர்வதேசம்

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (IMEC)காசா மீதான போர் எவ்வாறு முடக்குகிறது – விஜய் பிரசாத்

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (IMEC)காசா மீதான போர் எவ்வாறு முடக்குகிறது – விஜய் பிரசாத்
  • PublishedNovember 28, 2023


2023 செப்டம்பர் 9, அன்று, இந்தீய தலைநகர் புது தில்லியில் நடைபெற்ற G20 கூட்டத்தின் போது,ஒரு ஏழு நாடுகளின் அரசாங்கங்களும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இந்த வழித்தடத்தின் நேரடியாகப் பகுதியாக இருக்கும், இது இந்தியாவில் தொடங்கி வளைகுடா வழியாகச் சென்று கிரீஸில் முடிவடையும் பொருளாதார வழித்தடமாகும்.

ஐரோப்பிய நாடுகள் (பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி) மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்த பொருளாதார பாதையில் இணைந்துள்ளன. ஏனெனில் IMEC என்பது தங்கள் பொருட்கள் இந்தியாவுக்குச் செல்வதற்கும், அவர்கள் இந்தியப் பொருட்களை பெறுவதற்கும் குறைந்த செலவிலான ஒரு வணிகப் பாதையாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
IMEC துவக்கிய நாடான அமெரிக்கா, சீனாவையும் ஈரானையும் தனிமைப்படுத்துவதற்கும், இஸ்ரேல் சவுதி அரேபியாவுக்கு இடையிலான உறவுகளை விரைவுபடுத்துவதற்கும் ஒரு வழிமுறையாக அமெரிக்காவிற்கு இது ஒரு சரியான திட்டமாக இருந்தது. சீனாவையும் ஈரானையும் கைப்பற்றி, இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவை ஒன்றிணைக்கவும் , ரஷ்யா தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் உடன் பட இந்தியா தயக்கம் காட்டியதால் இந்தியாவுடனான உறவுகளை ஆழப்படுத்தவும் இந்த திட்டத்தை அமெரிக்க பயன் படுத்துகிறது.

தற்போது காசாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் போர் இந்த IMEC திட்டத்தை முடக்கியுள்ளது. சவூதி அரேபியாவும்,ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேளுடன் இந்த பொருளாதார பாதை திட்டத்தில் இணைவதை இப்போது நினைத்து கூடப் பார்க்க முடியாது. இஸ்ரேலின் கண்மூடித்தனமான குண்டுவீச்சுகள் மற்றும் பொதுமக்களின் பேரழிவு,இழப்பு ஆகியவற்றில் கொதித்தெழுந்த கோபத்துடன் அரபு உலகில் இஸ்ரேலுக்கு எதிரான நிலை தீவிரமாக உள்ளது. இஸ்ரேலுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட மத்தியகிழக்கு நாடுகளான ஜோர்டான் மற்றும் துருக்கி போன்றவை இஸ்ரேலுக்கு எதிரான தங்கள் கருத்துகளையும் கடுமையாக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே , குறுகிய காலத்தில் IMEC செயல்படுத்தப்படுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

ஆசியாவிற்கு முக்கியத்துவம்
சீனா தனது ‘ஒன் பெல்ட், ஒன் ரோடு’ அல்லது பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை (BRI) தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைக்கவும், அமெரிக்க மற்றும் இந்தியாவிற்கு இடையேயான உறவுகளை பலப்படுத்தவும் தனியார் துறை நிதியுதவி வர்த்தகப் பாதையை அமெரிக்கா ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. . 2011 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், சென்னையில் ஒரு உரை நிகழ்த்திய போது இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாகவும் மத்திய ஆசியாவிற்கும் செல்லும் புதிய பட்டுப்பாதையை உருவாக்குவது பற்றி பேசியுள்ளார். இந்த புதிய ‘சர்வதேச பொருளாதார வலைப்பின்னல் பொருளாதார மற்றும் போக்குவரத்து இணைப்பு வலை என்பது அமெரிக்காவிற்கு ஒரு புதிய அரசுகளுக்கிடையேயான ஒரு ‘சுதந்திர வர்த்தக மண்டலம்’ உருவாக்க ஒரு வழியாக இருக்கும், அதில் அமெரிக்கா உறுப்பினராக இருக்கும் ( அமெரிக்கா ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு APEC போன்றது ).



அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியது போல்,இந்த புதிய படுப்பாதை பரந்த ‘ஆசியாவை நோக்கிய பகுதியாகும். சீனாவின் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை எதிர்க்கவும் ஆசிய நாடுகளுக்கிடையே அதன் செல்வாக்கைத் தடுக்கவும் இந்த முக்கிய திட்டம் வடிவமைக்கப்பட்டது. வெளியுறவுக் கொள்கையில் ஹிலாரி கிளின்டனின் கட்டுரை (‘அமெரிக்காவின் பசிபிக் நூற்றாண்டு’, அக்டோபர் 11, 2011) இந்த புதிய பட்டுப்பாதை சீனாவுக்கு எதிரானது அல்ல என்றும் கூறினார்கள்.

இருப்பினும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நேரடி மோதலைச் சுற்றி வடிவமைக்கப்பட்ட அமெரிக்க இராணுவத்தின் புதிய வான் மற்றும் கடல் போர் கருத்தாக்கத்துடன் இணைந்து வந்தது (1999 ஆம் ஆண்டு பென்டகன் ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘ஆசியா 2025’ இது ஆசியாவில் உள்ள “அச்சுறுத்தல்கள்” என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது). ‘ஆசியா 2025’ அறிக்கை, இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் இராஜதந்திர மற்றும் இராணுவ முயற்சி மிகவும் தீவிரமானது, சீன-இந்திய கூட்டணியைத் தடுப்பதற்கு ஒரு தொடர்பாகும்’ என்றும் குறிப்பிட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பது இந்தியாவின் நலனுக்காக மட்டும் அல்ல, மாறாக சீனாவுக்கு எதிராக ஒரு கூட்டத்தை உருவாக்குவதற்கும், இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே உள்ள பிரச்சனையை ஆழமாக்குவதற்கும் முயற்சியாகும். அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி தக்கவைக்க ஆசியாவின் உறுதித்தன்மையை உடைப்பது இந்த அமெரிக்க திட்டத்தின் அம்சமாகும்.

2013 இல், சீன அரசாங்கம் ‘ஒன் பெல்ட், ஒன் ரோடு’ என்று ஒரு பெரிய உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத் திட்டத்தைக் கட்டுவதாகக் கூறிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இது பின்னர் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (பிஆர்ஐ) என்று அழைக்கப்படும். அடுத்த பத்து ஆண்டுகளில், 2013 முதல் 2023 வரை, BRI முதலீடுகள் மொத்தம் 1.04 டிரில்லியன் டாலர்கள் மதிப்பில் 148 நாடுகளுக்கு (உலகின் முக்கால்வாசி நாடுகள்) விரிவடைந்துள்ளது. இந்த குறுகிய காலத்தில், BRI திட்டம் உலகில் கணிசமான முத்திரையைப் பதித்துள்ளது, குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய ஏழை நாடுகளில், BRI உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறையை உருவாக்க இந்த திட்டத்தின் மூலம் முதலீடுகளை செய்துள்ளது.

BRI இன் வளர்ச்சியால் துரத்தப்பட்ட அமெரிக்கா,லத்தீன் அமெரிக்காவில், தனது ஆதிக்கம் மற்றும் தெற்காசியாவிற்கான மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் என பல்வேறுசெயல்கள் மூலம் அதைத் தடுக்க முயன்றது.இந்த முயற்சிகளில் உள்ள பலவீனம் என்னவென்றால், இருவரும் வளர்ச்சிக்கான முதலீட்டில் ஆர்வமில்லாத தனியார் துறையின் நிதியை நம்பியிருந்தனர்.



IMEC இன் சிக்கல்கள்காசா மீது இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கு முன்பே, IMEC திட்டம் பல கடுமையான சவால்களை எதிர்கொண்டது.
முதலாவதாக, சீனாவைத் தனிமைப்படுத்தும் முயற்சி மாயையானது, இந்த பொருளாதார பாதையில் உள்ள முக்கியமான பைரேயஸில் உள்ள கிரேக்கத் துறைமுகம் – சீனா ஓஷன் ஷிப்பிங் கார்ப்பரேஷனால் நிர்வகிக்கப்படுகிறது, மேலும் துபாய் துறைமுகங்கள் சீனாவின் Ningbo-Zhoushan துறைமுகம் மற்றும் Zhejiang துறைமுகத்திலிருந்து கணிசமான முதலீடுகளைக் கொண்டுள்ளன.சௌதி அரேபியா மற்றும் UAE இப்போது BRICS+ இல் உறுப்பினர்களாக உள்ளன, மேலும் இரு நாடுகளும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பங்கேற்பாளர்களாகவும் உள்ளனர்.

இரண்டாவது , கொண்டுவந்துள்ள செயல்முறையும் தனியார் துறை நிதியை நம்பியுள்ளது. அதானி குழுமம் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்கு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது – ஏற்கனவே முந்த்ரா துறைமுகம் (குஜராத்) மற்றும் ஹைஃபா துறைமுகம் (இஸ்ரேல்) மற்றும் துறைமுகத்தில் பங்கு இருக்கும் நிலையில் பைரேஸ் துறைமுகத்திலும் பங்கு பெற முயல்கிறது. அதானி துறைமுகங்கள் பல கிரேக்க துறைமுகங்களை கையகப்படுத்த முயற்சித்து வருகின்றது.எனவே அந்த நிறுவனம் இந்த திட்டத்தின் மூலம் IMEC யிலிருந்து பயனடையும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிரீஸ் முதல் குஜராத் வரையிலான அதானியின் முதலீடுகளுக்கு IMEC யிலிருந்து புவிசார் அரசியல் பாதுகாப்பை வழங்குகிறது.

மூன்றாவதாக, ஹைஃபா மற்றும் பிரேயஸ் இடையே உள்ள கடல் பாதை துருக்கி மற்றும் கிரீஸ் இடையே பிரச்னைக்குரிய நீர் வழிப்பதையாகும். இந்த நீர்வழித்தடத்தை கிரீஸ் பயன்படுத்த சென்றால் அது துருக்கி அரசிற்கு போர் அச்சுறுத்தலை தூண்டிவிட்டுள்ளது.

நான்காவதாக, முழு திட்டமும் சவூதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நெடுங்கால பிரச்சனையை சார்ந்தது, ஆகஸ்ட் 2020 இல் இஸ்ரேலை அங்கீகரிக்க பஹ்ரைன், மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை ஈர்த்த ஆபிரகாம் உடன்படிக்கையை தொடர்ந்து. ஜூலை 2022 இல், இந்தியா, இஸ்ரேல், அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகியவை I2U2 குழுவை உருவாக்கி கூட்டமைப்பில் உள்ள மற்ற நாடுகளுடன் ‘உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல்’ மற்றும் ‘தனியார் நிறுவன பங்களிப்பு மூலம் கார்பன் வெளியிடும் எரிபொருளுக்கு மாற்றான எரிபொருள் பண்பாட்டை அதிகரிப்பது என இயல்படுவதாக கூறுகிறது.

இந்த திட்டமே IMEC இன் முன்னோடியாக இருந்தது. சவூதி அரேபியாவுடனான ‘இயல்புநிலை’ அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான I2U2 குழுவின் செயல்பாடு இந்த கால சூழலில் சாத்தியமாகவில்லை. காசாவில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு இந்த செயல்முறையை முடக்கியுள்ளது.

செயல்படுத்த குறைந்தபட்சம், சாத்தியமான தகுதியைக் கொண்டிருந்த சர்வதேச வடக்கு-தெற்கு வர்த்தக பாதை (இந்தியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கும் பாதை) மற்றும்இந்தியா மற்றும் ஜப்பான் தலைமையிலான ஆசியா-ஆப்பிரிக்கா வளர்ச்சி பாதை போன்ற முந்தைய இந்திய பங்கேற்ற வர்த்தக பாதை திட்டங்கள் காகிதத்தில் இருந்தனவே தவிர செயல்பாட்டிற்கு செல்லவில்லை. அந்த திட்டங்களில் வந்த நாடுகளில் சில தெற்காசியாவின் பகைமை நாடுகளின் அழுத்தங்கள் மற்றும் புதிய பனிப்போரின் அழுத்தங்களாலும், குறிப்பாக மத்திய ஆசியாவில் ஏற்பட்ட அழுத்தங்களாலும் திட்டம் சிதைக்கப்பட்டது .தற்போது காசா மீது இஸ்ரேலின் போர் காரணமாக பொருளாதாரப் போரில் சீனாவை “தோற்கடிக்க” முடியும் என்ற அமெரிக்காவின் கற்பனை , இந்த பொருளாதார பாதைகளுக்கு ஏற்பட்ட அதே கதியைதான் அமெரிக்காவின் IMEC பொருளாதார திட்டமும் சந்திக்கும்.

தோழர் விஜய் பிரசாத்

People’s democracy

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *