இந்தியாவில் இயங்கும் சுமார் 60 அரசுப் போக்குவரத்து நிறுவனங்களில், தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமே அனைத்துக் கிராமங்களுக்கும், மலைக் கிராமங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது. இழப்பு ஏற்படும் எனத் தெரிந்தே 10,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் மக்கள் சேவைக்காக