இந்திய மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடத்தில் துருக்கியை தவிர்க்க முடியாது என ஏன் கூறுகின்றனர்

துருக்கியின் தலை நகரமான இஸ்தான்புல்லுக்கு மேற்கே 300 கிமீ தொலைவில் உள்ள சானக்கலே (கல்லிபோலி) இல் உள்ள டார்டனெல்லெஸ் நதிக்கரையில் இருந்து ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை ஐரோப்பாவுடன் இணைக்கும் ஒரு பழங்கால பாதை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த டார்டனெல்லெஸ் நதிக்கரை , மர்மாரா கடலை மத்தியதரைக் கடலில் உள்ள ஏஜியன் கடலுடன் இணைக்கும் நீர் வழித்தடமாகும்,மேலும் ஆசியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் இருந்து அலெக்சாண்டர் தி கிரேட் இந்தியாவின் மீது போரிட தனது கப்பல்களில் 50 லட்சம் குதிரை படை மற்றும் 13,000 காலாட்படைகளுடன் இந்த நீர்வழியை தான் கடந்தார் மற்றும் கிமு 334 இல் டார்டனெல்லெஸிலிருந்து கிழக்கே பிகா நதிக்கரையில் தனது முதல் வெற்றியை பெற்றார்.
இந்த திட்டத்தின் மூலம் “ஐரோப்பாவிற்காண இந்தியாவின் நுழைவாயிலாக” இருக்க விருப்பம் தெரிவித்த கிரீஸுக்கு இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கதாக இருப்பினும் , துருக்கிக்கு கவலையை கொடுத்துள்ளது. துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இந்த திட்டத்தை எதிர்க்கும் வகையில் “துருக்கி இல்லாமல் இந்த வணிகப்பாதை இல்லை என நாங்கள் கூறுகிறோம்,” “நாங்கள் ஒரு முக்கியமான உற்பத்தி மற்றும் வர்த்தக மையமாக இருக்கிறோம்.
பாரசீக சாம்ராஜ்ஜியத்தின் இந்த தொடர்ச்சியான வெற்றி , கிமு 326 இல் ஜீலம் நதிக்கரையில் பஞ்சாப் அரசர் போரஸுடன் தனது வாழ்க்கையின் கடைசிப் போர் வரை சென்றது.
21 ஆம் நூற்றாண்டில் போரஸ் மற்றும் கிரீஸை இந்தியாவுடன் இணைத்த சில ஆயிரம் கிலோமீட்டர் பாதை இரண்டு பெரிய சக்தி வாய்ந்த கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய மத்தியதரைக் கடல் நாடுகளுக்கு இடையே ஒரு பதட்டத்தை ஏற்படுத்துகிறது .
புதுதில்லியில் நடைபெற்ற ஜி-20 கூட்டத்தின் நடுவே இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) அறிவிக்கப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி,இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இதற்கு முன்பே தென்னாப்பிரிக்காவில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் ஆகஸ்ட் 25 அன்று ஏதென்ஸுக்கு சென்ற பிரதமர் மோடி கிரேக்கக் அதிகாரி கிரியாகோஸ் மிட்சோடாகிஸுடன் இந்தத் திட்டத்திற்கான துறைமுகங்களைப் பாதுகாப்பதற்காக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்.
இந்த திட்டத்தின் படி , இப்பொருளாதார பாதை மும்பை மற்றும் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இணைக்கும் கப்பல் பாதையையும், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் இஸ்ரேலின் ஹைஃபிபா துறைமுகத்துடன் இணைக்கும் ரயில் பாதையையும் உள்ளடக்கியது.பிறகு ஹைஃபிபா துறைமுகம் மத்தியதரைக் கடலின் வழியாக கிரீஸ் நாட்டின் பைரஸ் வழியே ஐரோப்பாவுடன் இணைக்கப்படுகிறது.
கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மிகவும் வசதியான போக்குவரத்துக்கு பாதை வேண்டும் என்றால் அது துருக்கி வழியாக தான் செல்ல வேண்டும் “என்று அவர் கூறினார்.
பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு மூத்த துருக்கி அதிகாரி, ஃபிரண்ட்லைனிடம், கூறும் போது இதில் துருக்கி புறக்கணிக்கப்பட்ட உணர்வு மட்டுமல்ல, இந்த பொருளாதார வழித்தடத்திற்கு ஹைஃபாவிற்கும் பைரேயஸுக்கும் இடையிலான கடல் பாதை சர்ச்சைக்குரிய நீர் வழி என்றும் கூறினார்.
பிரத்தியேக பொருளாதார மண்டலங்கள் (EEZS) மற்றும் கடல் எல்லைகளை இன்னும் வரையறுக்காததால் கிரீஸ் மற்றும் துருக்கி நாட்டு கப்பல் படைகள் இந்த கடல் பகுதியில் அடிக்கடி மோதிக்கொள்கின்றன.
இதே போல் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் காஷ்மீரின் சர்ச்சைக்குரிய நிலம் வழியாகச் செல்வதை குறித்து இந்தியா இதேபோன்ற கவலைகளை எழுப்பியதை அவர் சுட்டிக்காட்டினார்.

1923 ஆம் ஆண்டு துருக்கி மற்றும் கிரீஸுக்கு இடையேயான நான்கு ஆண்டு காலப் போருக்குப் பிறகு ஏஜியன் கடல் தீவுகள் மற்றும் கடல் எல்லைகளை பற்றி குறிப்பிடாமல் கையெழுத்திடப்பட்ட லொசேன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
மேலும் 1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டை மேற்கோள் காட்டி (UNCLOS), கிரீஸ் மத்தியதரைக் கடலின் பெரும்பகுதியின் மீது இறையாண்மையைக்( உரிமையை ) கோருகிறது.
UNCLOS இன் கீழ்,ஒரு நாட்டின் கடற்கரையிலிருந்து 200 நாட்டிக்கல் கடல் மைல்கள் வரை கடல் வளங்களை ஆய்வு செய்தல் நீர்,காற்றாலை ஆற்றல் உற்பத்திக்கு பயன்படுத்திக்கொள்ளுதல் தொடர்பாக ஒரு இறையாண்மை கொண்ட அரசுக்கு சிறப்பு உரிமைகள் வழங்குகிறது.
இருப்பினும், கடல் மாநாட்டு சட்டத்தின்படி, சிறிய தீவை ஒரு நாடு தன் பிரதான தீவாக நியமித்து அதில் இருந்து பல்வேறு கடல் மண்டலங்களை அளவிடுவதற்கான அடிப்படை தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், ஒன்றுடன் ஒன்று உரிமை கோரிக்கொண்டு 26 நாடுகளின் எல்லையாகவும், முறையற்ற எல்லைகளுடன் பல்வேறு தீவுகளை உள்ளடக்கியுள்ள மத்தியதரைக் கடலில் இந்த பாதையை பொதுவான பயன்படுத்த இயலாது.
கிரீஸ் அதன் கடல் மற்றும் பிரத்யேக பொருளாதார மண்டல எல்லையை அது ஆக்கிரமித்துள்ள தீவுகளிலிருந்து வரைபடமாக்க வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு அமல்படுத்தப்பட்டால் மத்தியதரைக் கடலில் உள்ள ஏஜியன் கடலின் 71.5 சதவீதம் கிரீஸ் எல்லையின் கீழும், 8.7 சதவீதம் மட்டுமே துருக்கி எல்லையின் கீழும் வரும்.அதவாது முதல் உலகப் போரின் முடிவில் ஒட்டோமான் பேரரசு முஸ்தபா கெமல் தலைமையில் போர் நடத்திய டார்டா-நெல்லெஸ் கால்வாயில் உள்ள இரண்டு-கோக்செடா மற்றும் போஸ்காடா-அருகில் உள்ள கானாக்களே தவிர மற்ற அனைத்து தீவுகளும் கிரேக்கத்திற்கு சொந்தமானதாக குறிக்கப்படும்.
தென்மேற்கு துருக்கியில் உள்ள காஸ் என்ற கடலோர நகரமான டார்டநெல்லெஸ் இலிருந்து சுமார் 700 கி.மீ தொலைவில், மெய்ஸ் (காஸ்டெல்லோரிசோ) ஒரு தீவு உள்ளது. இது துருக்கியின் தெற்கு கடற்கரையிலிருந்து 2 கிமீ தொலைவிலும், கிரீஸில் இருந்து 570 கிமீ தொலைவில் உள்ளது. “இந்தக் கடற்கரையிலிருந்து துருக்கி ஐரோப்பாவிற்கும் கிரீஸிற்கும் மிக அருகில் இருக்கிறது.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய இராணுவ சக்தி நாடுகளுள் ஒன்றாக உள்ள துருக்கியை சுற்றி வளைப்தற்கான திட்டம் என்ற அச்சம் துருக்கிக்கு உள்ளது.
இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபின் இது துருக்கியை சுற்றி வளைப்பதை நோக்கமாகக் கொண்டது. “மத்தியதரைக் கடலில் மிகப் பெரிய நாடான துருக்கியை யாரும் சுற்றி வளைக்க முடியாது. எங்கள் குடிமக்கள் மற்றும் வடக்கு சைப்ரஸின் துருக்கிய குடிமக்களின் கடல் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று துருக்கிய அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
துருக்கி ஆன்லைன் செய்தித்தாள் கபேர்த்தேஜ்ர் (haberdeger) இன் தலைமை ஆசிரியரும் நிறுவனருமான அடிஃபை ஒஸ்பெய் (Atıf Ozbey), இந்த திட்டம் கிரீஸுடன் சர்ச்சைக்குரிய நீர் வழியே கடந்து செல்வதால், இத்திட்டத்தை துருக்கி புறக்கணிக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று கூடியுள்ளார். நினைத்து பார்க்கமுடியாதவகையில் துருக்கியின் எல்லை ஆக்கிரமிக்கப்படும் போது துருக்கி கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் என நினைத்துப் பார்க்க முடியாது,” என்றும் அவர் ஃப்ரண்ட்லைனிடம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், ஐரோப்பிய பாராளுமன்றம் துருக்கி உடனான பேச்சுவார்த்தையை இடைநிறுத்த முடிவு செய்தது.
இது ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது. இஸ்ரேலும் அதன் கூட்டாளிகளான ஏகாதிபத்திய நாடுகளும் கிரீஸ் மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடலில் உள்ள தெற்கு கிரீஸ் சைப்ரியாட்களை துருக்கிக்கு எதிராக பயன்படுத்துகின்றன.
மீஸ் (காஸ்டெல்லோரிசோ) தவிர, ஏஜியன் கடல் முழுவதும் துருக்கிய கடற்கரைப் பகுதியில் லெஸ்போஸ், சியோஸ், கோஸ், ரோட்ஸ் மற்றும் சமோஸ் போன்ற தீவுகள் உள்ளன.

இந்த புவியியல் அமைவு துருக்கியை அதன் கடற்கரையிலிருந்து சில கடல் மைல்களுக்கு அப்பால் அதன் செல்வாக்கை விரிவுபடுத்துவதைத் தடுக்கிறது.
தீவுகளில் 200 கடல் மைல்கள் முழு சிறப்பு பொருளாதார மண்டலமாக இருக்க முடியாது என்பது துருக்கியின் நிலைப்பாடு. தீவுகள் நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள மற்றொரு பெரிய நிலத்தின் ஒரு பகுதியாக இருந்தால், 12 கடல் மைல்களுக்கு உட்பட்ட தீவுகளுக்க பொருளாதார மண்டலமாக வழங்கப்பட வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் மண்டலமாக கருதப்படாது என கூறப்படுகிறது.
நெருக்கடி மற்றும் கொள்கை ஆய்வுகளுக்கான துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள ஆலோசனைக் குழு மையத்தின் தலைமை ஆலோசகர் சென்சர் இமர், கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கியின் உரிமைகளைப் பறிக்க கிரீஸ் முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளார். “அவர்கள் [கிரீஸ் மற்றும் அதன் கூட்டாளிகள்] மத்திய தரைக்கடல் பகுதியில் துருக்கியின் இருப்பை தடுக்கவும்,அதில் உள்ள இயற்கை வளத்தைக் கைப்பற்றவும் முயற்சி செய்கின்றனர். இது ஒரு கடற்கொள்ளை இதை துருக்கி ஏற்றுக்கொள்ளாது என அவர் கூறினார்.
கடந்த காலங்களில் துருக்கியை தவிர்த்துவிட்டு இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று முன்னாள் இராணுவ அதிகாரியும், துருக்கியை சேர்ந்த சிந்தனைக் குழுவின் தலைவருமான குராய் அல்பர் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு இஸ்ரேல் மற்றும் சைப்ரஸிலிருந்து எரி வாயுவைக் குழாய் மூலம் கொண்டு செல்லும் ஐரோப்பிய ஒன்றியத் திட்டத்தை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இருப்பினும், வணிக ரீதியாகவும் மற்ற சுற்றுச்சூழல் உள்ளிட்ட மற்ற காரணங்களுக்காகவும் அந்த குழாய் வழியிலான எண்ணெய் திட்டம் தோல்வியடைந்தது. இது போன்ற முக்கிய திட்டங்கள் துருக்கியினுடன் இணையும் போது மட்டுமே சாத்தியம் என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்,” என்றும் அல்பர் கூறினார், இந்த பொருளாதார வழித்தடத்தை உருவாக்கியவர்களும் ஆசிரியர்களும் இதை விரைவில் உணர்ந்து கொள்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாரசீக பைப்லைன் , டிரான்ஸ்-காஸ்பியன் பைப்லைன் , மற்றும் கத்தார் துருக்கி பைப்லைன் – மற்றும் தற்போதுள்ள தெற்கு எரிவாயு பாதை ஆகிய மூன்று திட்டங்கள் துருக்கி வழியாக செல்கிறது. வளைகுடா பிராந்தியத்தை துருக்கி மற்றும் ஐரோப்பாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் ஈராக் துறைமுகங்கள் வழியாக ரயில் பாதை மற்றும் நெடுஞ்சாலை வழியாக இணைக்கும் நோக்கத்தை கொண்ட ஈராக் மேம்பாட்டு சாலை திட்டத்தையும் துருக்கி ஆதரிக்கிறது.
இந்தத் திட்டம் 1700 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் 1,200 கிமீ நெடுஞ்சாலை மற்றும் அதிவேக ரயில் பாதையை கொண்டது. இது கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு ஐரோப்பாவிற்கு இடையிலான பயண நேரத்தை 15 நாட்களாக குறைக்கிறது. மேலும் இதில் வளைகுடா நாடுகளில் இருந்து குழாய்கள் மூலம் எரிசக்தி ஏற்றுமதி செய்யும் திட்டங்களும் உள்ளன.
மேலும் உலக அரசியலில் சீனாவின் வளர்ச்சியை எதிர்க்க இந்தியாவைப் பயன்படுத்த விரும்பும் பெரும் வல்லரசு நாடுகளுக்கிடையிலான பகைமையே இந்த இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் எனவும் அல்பர் விளக்கியுள்ளார். “இந்த திட்டம் வெற்றியடையாது உண்மையில், பிராந்தியத்தில் துருக்கியை புறக்கணிக்க முயற்சிக்கும் எந்தவொரு திட்டமும் ஆபத்தானது. அவர்கள் (வல்லரசு நாடுகள்) ஒருவருக்கொருவர் எதிராக சில நாடுகளின் சக்திகளைப் பயன்படுத்துகின்றனர் என இந்த சர்வதேச அரசியல் விளையாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும், “என்று அவர் மேலும் கூறினார்.

பிரிட்டிஷ் சிந்தனைக் குழுவான சாத்தம் ஹவுஸில் அங்கம் வகிக்கும் அஹ்மத் அபூதாவின் கூற்றுப்படி, இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு கருவியாக அமெரிக்கா இந்தத் திட்டத்தைக் பார்க்கிறது. “ஈரானைக் கட்டுப்படுத்தவும், மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கை தகர்க்கவும் ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக [இரு நாடுகளுக்கு இடையே] உடன்படிக்கைக்கு பைடன் நிர்வாகம் அழுத்தம் கொடுக்கிறது,” என்றும் அவர் கூறினார்.
சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பல ஆண்டுகால பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டிய சீனாவின் பேச்சு வார்த்தை அமெரிக்காவிற்கு மிக பெரும் எச்சரிக்கை மணியாக இருந்தது.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் மூலம் மங்கோலியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் 200க்கும் மேற்பட்ட ரயில்கள், இயங்கி வருகின்றன என வல்லுநர்கள் கூறுகின்றனர். அவர்களின் கூற்றுப்படி, இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான ஆபிரகாம் ஒப்பந்தம் இன்னும் செயல்பாட்டில் இருப்பதால், அமெரிக்கா இந்த புதிய பொருளாதார பாதை திட்டத்தை உருவாக்கியது, இதில் சில கடல் வழிகளைத் தவிர பெரும்பாலானவை ஏற்கனவே உள்ளன.
துருக்கியில் உள்ள அரசாங்க சிந்தனைக் குழுவான SETA இன் வெளியுறவுக் கொள்கை ஆய்வுகளின் இயக்குனர் முராத் யெசில்டாஸ்.
துருக்கிய நலன்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு இந்த பொருளாதார பாதையின் முன் முயற்சியில் துருக்கியை இணைக்க வலியுறுத்த முடியும் என்றார்.
துருக்கியில் மே மாதம் எர்டோகன் மற்றும் கிரீஸ் நாட்டில் மிட்சோடாகிஸ் ஜூன் மாதமும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாதங்களிலேயே பிப்ரவரி மாதம் துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.. நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு நிவாரண மற்றும் மறுவாழ்வு உதவிகளை கிரீஸ் செய்ததைத் தொடர்ந்து “நேர்மறையான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை ” மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டனர்இதனை தொடர்ந்து உருவான இருதரப்பு உறவுகளின் மூலம் ஒரு புதிய தொடக்கத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேலுடன் உறவுகளை துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இயல்பாக்கினார். மத்தியதரைக் கடல் பகுதியில் பெரிய அரசியல் நகர்வுகளின் ஒரு பகுதியாக மாறுவதன் மூலம் இந்த நாடுகள் மீண்டும் தங்களுக்குள் பனிப்போர்களை நடத்த மாட்டார்கள் என துருக்கி அதிகாரிகள் கருதுகின்றனர்.
துருக்கியில் உள்ள இலடிரீம் பெயஜித் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையின் இந்தியப் பேராசிரியரான ஒமைர் அனஸ் மேற்கு ஆசியாவில் உள்ள ஒரே நேட்டோ உறுப்பினரான துருக்கி உட்பட எந்தவொரு நாட்டையும் ஒதுக்கி வைப்பதை இந்த பொருளாதாரப் பாதைத் திட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றதோடு சாலை, ரயில் மற்றும் கடல் வழியாக நாடுகடந்த இணைப்பை விரிவுபடுத்தவும் துருக்கியாகவே முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். எனவே, இந்த பொருளாதார பாதை துருக்கி ஏன் புறக்கணிக்க வேண்டும் அதற்கு எந்த காரணமும் இல்லை.
“இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களுடனான நம்பிக்கையான உறவைக் கருத்தில் கொண்டு, துருக்கியாகவே எதிர்காலத்தில் அதில் சேர முயல வேண்டும். பிரிக்ஸ் (BRICS ) , சாங்காய் ஒத்துழைப்பு (SCO) கூட்டமைப்பு , ஆசியான் (ASIEAN) மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் கூட்டமைப்புகளில் எர்டோகன் தீவிரமாக செயல்படுகிறார் .
இது அவரது நாட்டு வளர்ச்சியின் அடையாளம்-ஆசிய பொருளாதாரங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக மாறுவதில் ஆர்வம் காட்டுங்கள்” என்றும் அனஸ் கூறியுள்ளார்.
இந்நிலை ஒருபுறம் இருக்க இந்த பொருளாதார வழித்தடம் ஹெஜாஸ் இரயில்வேயின் மறுமலர்ச்சியைக் குறிக்கிறது, இது ஒரு காலத்தில் சிரியா வழியாக சவூதி அரேபியாவின் நகரமான மதீனாவுடன் இணைக்கப்பட்டது மற்றும் மத்தியதரைக் கடலில் ஹைஃபாவுக்கு ஒரு கிளைப் பாதையைக் கொண்டிருந்தது.
இந்த வழித்தடம் 1900 ஆம் ஆண்டில் ஒட்டோமான் சுல்தான் அப்துல்ஹமீது II இன் உத்தரவின் பேரில் கட்டப்பட்டது மற்றும் பிரிட்டிஷ் அதிகாரி டி .இ.லாரன்ஸ் (அரேபியாவின் லாரன்ஸ்) தலைமையிலான அரபுப் படைகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான பாதை. 1962-இல் வெளியான டேவிட் லீனின் திரைப்படத்தில் இந்த தாக்குதல்கள் குறித்த பல காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு போட்டியாக இந்த புதிய பொருளாதார வழித்தடம் பார்க்கப்பட்டாலும், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சீன நிறுவனங்கள் அரேபிய ரயில் பாதைகளை புதுப்பிக்க பல ஆண்டுகளாக உழைத்து வருகின்றன. பியான் பாலைவனங்களை , இந்த திட்டத்தால் பயன்படுத்த அவர்கள் ஏற்கனவே சுமார் 536 கிமீ ரயில் பாதையை அமைத்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலின் ஹைஃபா இடையேயான 2,915 கிமீ தூரத்தில், 820 கிமீ ரயில் பாதை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது மற்றும் பல்வேறு கட்டங்களில் அதன் பணிகள் தொடர்கின்றன.
பாகிஸ்தானுடனான பனிப்போரால் மேற்குலக நாடுகளுக்கான சாலை வழித்தடம் தடைபட்டதால்,அமெரிக்க அறிவித்துள்ள இந்த புதிய பொருளாதார வழித்தடம் இந்தியாவிற்கு ஒரு முக்கிய மைல்கல் ஆகும். ஆப்கானிஸ்தானுடனான பொருளாதார நடவடிக்கை கூட, இந்தியா தஜிகிஸ்தான் மற்றும் ஈரான் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியிருந்தது. ஈரானின் சபஹார் துறைமுகத்தை கொண்டு முன்னெடுக்கப்பட்டு வந்த இந்தியா, ஈரான், அஜர்பைஜான், ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே குறைந்தபட்சம் 7,200 கிமீ கொண்ட வடக்கு-தெற்கு போக்குவரத்து பாதையை இந்த புதிய பாதை முடிவுக்கு கொண்டு வரலாம்.
குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகம் ஆகியவை அதானி குழுமத்தின் பன்னாட்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த குழு ஹைஃபா துறைமுகத்தை இந்த ஆண்டின் துவக்கத்தில் 120 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.அதானி குழுமம் கிரீஸ் நாட்டின் பல்வேறு துறைமுகங்களையும், குறிப்பாக ஏதென்ஸில் உள்ள பைரேயஸ் துறைமுகத்தில் உள்ள தளவாட வசதிகளையும் ஏலம் எடுத்துள்ளது (பைரேயஸ் துறைமுகம் ஒரு சீன நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது).
மோடியின் ஏதென்ஸ் பயண முடிவில், அதானி ஐரோப்பிய நாடுகளில் இந்திய ஏற்றுமதிக்கான கிரீஸ் நாட்டின் முக்கிய துறைமுகங்களை கையகப்படுத்த பார்க்கிறார் என கிரீஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.மேலும் கிரீஸ் செய்தி ஊடகங்களின்படி, வடக்கு கிரீஸில் உள்ள கவாலா, வோலோஸ் (ஏதென்ஸிலிருந்து 330 கிமீ), மற்றும் அலெக்ஸாண்ட்ரூபோலி ஆகிய மூன்று துறைமுகங்கள் அதானியின் பட்டியலில் உள்ளன.
இந்தியாவுக்கும் கிரீஸுக்கும் இடையே உருவாகி வரும் வர்த்தகப் பாதை இந்தியப் பெருங்கடல் பகுதி, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் வர்த்தக முறைகளை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. கடந்த தசாப்தத்தில், கிரீஸுடனான இந்தியாவின் இராஜதந்திர உறவுகள் கணிசமாக விரிவடைந்துள்ளன.
ஸ்பெயினின் நவர்ரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் டான்சும், இந்த வளர்ச்சி ஒரு முக்கியமான புவிசார் அரசியல் மறுசீரமைப்பிற்கு வழிவகுக்கும் என்றும் ஐரோப்பிய பொருளாதார நிலப்பரப்பில் இந்தியாவின் பங்கை மறுவடிவமைக்க வழிவகுக்கும் என்று குறிப்பிட்டார்.
வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு மட்டுமல்லாமல், மத்தியதரைக் கடலில் உள்ள பெரும் அரசியலில் பங்கேற்க நாடுகள் ஒன்றிணைவதால் நடந்து ,முடிந்த வரலாறு மீண்டும் நிகழும் போல் தெரிகிறது. துருக்கியில் குழப்பத்தை உருவாக்குவதன் மூலம் அவர்கள் வெற்றி பெறுவார்களா? காலம் தான் பதில் சொல்லும் என்றார்.
ப்ரெண்ட் லைன் மொழிப்பெயர்ப்பு கட்டுரை