Tamil Marx

சர்வதேசம் தொழிலாளர் பிரச்சனைகள்

அதிக வேலை நேரத்தின் காரணமாக 7.44 லட்சம் தொழிலாளர்கள் உயிரிழப்பு சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்

அதிக வேலை நேரத்தின் காரணமாக 7.44 லட்சம் தொழிலாளர்கள் உயிரிழப்பு சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்
  • PublishedNovember 29, 2023

உலகளவில் அதிக வேலை நேரத்தின் காரணமாக 7 லட்சத்து 44 ஆயிரத்து 924 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.பணிபுரியும் இடங்களில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற மோசமான சூழ்நிலையின் காரணமாக ஏற்படும் விபத்துகள் மற்றும் நோய்களால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 30 லட்சம் தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர்.

இதில் 63 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் ஆசிய-பசிபிக் நாடுகளில் ஏற்பட்டுள்ளது என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகப்படியான வேலை சூழல் (வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக) என்பது மிகப்பெரிய “கொலையாளி” ஆகும் என மிக கடுமையாக அந்த அறிக்கையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு விமர்சித்துள்ளது.

2016 ஆண்டு கிட்டத்தட்ட 7.45 லட்சம் அதிக வேலை நேரம் காரணமாக பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதைத் தொடர்ந்து நுண்துகள்கள், வாயுக்கள் மற்றும் புகைகள் ஆகிவற்றின் காரணமாக 4.5 லட்சம் தொழிலாளர்களும், பணியிடங்களில் ஏற்படும் விபத்து காயங்களால் 3.63 லட்சம் தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாநாட்டில் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக “வேலையில் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் உரிமைகள்” என்ற ஐந்து ஆலோசனைகளையும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

அவை,
1 தொழிற்சங்கங்களின் சுதந்திர மற்றும் கூட்டு பேரம் பேசுவதற்கான உரிமையை திறம்பட அங்கீகரிப்பது,

2 அனைத்து வகையான கட்டாய உழைப்பை நீக்குதல்,

3 குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தல்,

4 வேலை மற்றும் தொழில் தொடர்பான பாகுபாட்டை நீக்குதல்,

5 பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை உருது படுத்துவது.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *