மக்கள் பாக்கெட்டை கொள்ளையடிக்கும் டோல் கேட்டுகள்
வசூல் வேட்டை நடத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 Tollgate களை அமைந்துள்ளது பாஜக அரசு. இதன் மூலமாக 2025-2026 நிதியாண்டில் மட்டுமே மக்கள் பாக்கெட்டில் இருந்து சுமார் 67,000 கோடி ரூபாய் பணத்தை பறித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை போலவே டோல்கேட் வசூலும் அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ள நிலையில் நாடு முழுவதும் பல டோல் கேட்டுகளில் கட்டணத்தை உயர்த்தியுள்ளது ஒன்றிய அரசு. மறுபுறம் காலக்கெடு முடிந்த பிறகும் சில டோல் கேட்டுகள் வசூலில் ஈடுபட்டு வருகின்றன..
இந்த சூழலில் தான் பொதுமக்களின் பாக்கெட்டை மேலும் கொள்ளையடிக்க அரசும் தனியார் நிறுவனங்களும் சுங்கச் சாவடிகளை பெரும் வருமானத்தை தரக்கூடிய தொழிலாக மாற்றியுள்ளன.
The mint plain facts தரவுகள் படி 2016-இல் நாடு முழுவதும் 300 சுங்கச்சாவடிகளின் இருந்தது அது 2026, மார்ச் மாதத்தில் 1,160 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 100 சுங்கச்சாவடிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
வட மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளிலும்,அதிகமான வாகனப் போக்குவரத்து உள்ள டெல்லி-NCR, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரப் பகுதிகளிலுமே அதிக சுங்க சாவடிகள் அமைந்துள்ளன.
அதிக சுங்கச்சாவடிகளைக் கொண்ட மாநிலங்கள்
- ராஜஸ்தான்: 159 சுங்கச்சாவடிகள்
- உத்தரப் பிரதேசம்: 136 சுங்கச்சாவடிகள்
- மகாராஷ்டிரா: 96 சுங்கச்சாவடிகள்
(இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமே நாட்டின் மொத்த சுங்கச்சாவடிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான அளவைக் கொண்டுள்ளன).
அதிக வருவாய் ஈட்டும் இடங்கள் (Collection Hotspots)
2025–26 நிதியாண்டில் நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டிய முதல் 15 சுங்கச்சாவடிகளும் தங்க நாற்கரச் சாலை வழித்தடத்திலேயே அமைந்துள்ளன.
இந்த 15 சுங்கச்சாவடிகள் இணைந்து FY26-இல் ₹5,400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளன.இது நாட்டின் மொத்த சுங்க வசூலில் 8%.
இதில் 9 சுங்கச்சாவடிகள் டெல்லி – மும்பை வழித்தடத்தில் மட்டுமே அமைந்துள்ளன. இவை மட்டும் ₹3,200 கோடி வருவாய் ஈட்டியுள்ளன. இது முன்னணி 15 சுங்க சாவடிகளின் மொத்த வசூலில் ~60% ஆகும்.
Pink City Expressway Pvt Ltd இயக்கி வரும் ராஜஸ்தானின் நீம்ரானா பகுதியில் உள்ள ஷாஜஹான்பூர் (Shahjahanpur) சுங்கச்சாவடி தான் #FY26-இல் ₹443 கோடி வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது நாட்டின் ஒரு சுங்கச்சாவடியின் சராசரி வசூலான ₹58 கோடியை விட 8 மடங்கு அதிகம் ஆகும்.
முன்னணி 6 சுங்கச்சாவடிகளின் வருவாய் விவரம் (FY26):
- ஷாஜஹான்பூர் (Shahjahanpur): ₹443 கோடி
- ஜலதுலாகோரி (Jaladhulagori): ₹431 கோடி
- கரோண்டா (Gharonda): ₹425 கோடி
- பராஜோர் (Barajore): ₹389 கோடி
- பக்வாடா (Bhagwada): ₹372 கோடி
- தேவனஹள்ளி (Devanahalli): ₹329 கோடி
இந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி வசூல் செய்யும் அளவு 14% உயர்ந்துள்ளது. அதாவது நாடு முழுவதும் 381 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. அதில் ₹67,400 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 12 சதவீதம் உயர்வாகும்.2025–26 நிதியாண்டின் தரவுகளின்படி மொத்த வசூலில் 50% தனியார் நிறுவனங்கள் இயக்கும் சுங்கச்சாவடிகளில் நடந்துள்ளது. அதேபோல் நாட்டின் மொத்த சுங்கச்சாவடிகளில் 27% தனியார் நிறுவனங்கள் இயக்கி வருகின்றன.
ஒரு தனியார் சுங்கச்சாவடியின் சராசரி வசூலான ₹109 கோடியாகும். அதுவே ரு அரசு (பொது) சுங்கச்சாவடியின் சராசரி வசூல் ₹40 கோடியாக உள்ளது.FY23-இல் தனியார் நிறுவனங்களின் சுங்கச்சாவடி 36% ஆக இருந்தது. இது FY26-இல் 27%-ஆகக் குறைந்துள்ளது. அதிக போக்குவரத்து மற்றும் அதிக வருவாய் ஈட்டும் சாலைகளில் மட்டுமே தனியார் சுங்க சாவடிகள் உள்ளன.
சுங்க சாவடியில் ஆதிக்கம் செலுத்தும் தனியார் நிறுவனங்கள்
FY26-இல் சுமார் 300 தனியார் நிறுவனங்கள் நெடுஞ்சாலைச் சுங்க சலுகைகளைப் பெற்றிருந்தன. இதில் முன்னணி 8 தனியார் நிறுவனங்கள் மட்டுமே நாட்டின் மொத்த சுங்க வசூலில் 20% (ஐந்தில் ஒரு பங்கு) பங்கைக் கொண்டுள்ளன.
முன்னணி 8 தனியார் நிறுவனங்களின் வசூல் விவரம் (FY26):
- IRB Infra Developers – ₹4,063 கோடி
- Larsen and Toubro (L&T) – ₹2,358 கோடி
- Reliance Infrastructure – ₹1,611 கோடி
- Ashoka Buildcon – ₹1,131 கோடி
- Soma Isolux NH One Tollway – ₹889 கோடி
- Pink City Expressway – ₹821 கோடி
- Soma Isolux – ₹647 கோடி
- GMR – ₹640 கோடி
மேற்கூறிய சுங்கச்சாவடி நிறுவனங்களில் பல நில அபகரிப்பு,பண மோசடி, கொலை வழக்குகளிலும் தொடர்புடையவை.
IRB Infrastructure Developers நிறுவனமானது மகாராஷ்டிரா புனே மாவல் பகுதியில் எக்ஸ்பிரஸ்வே சாலை விரிவாக்கத்திற்காக அரசு நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாக IRB தலைவர் வீரேந்திர மைஸ்கர் மற்றும் 17 பேர் மீது சிபிஐ (CBI) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.இந்த நில ஆக்கிரமிப்பு ஊழலை தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளிக்கொண்டுவந்த சமூக ஆர்வலர் சதீஷ் ஷெட்டி 2010-இல் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிஐ நடத்திய தொடர் விசாரணையில் இந்த நில மோசடி வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது.
Reliance Infrastructure மோடியின் நெருங்கிய நண்பர் அனில் அம்பானி நிறுவனம். இவரது நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற பல்லாயிரக்கணக்கான கோடி கடன்களை திருப்பிச் செலுத்தாதது மற்றும் நிதியை மடை மாற்றியது என பல பண மோசடி ஊழல் குற்றச்சாட்டுக்கு பெயர் போனது.
Ashoka Buildcon நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் 2022-இல், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) மூத்த அதிகாரிகளுக்கு ₹5 லட்சம் லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் சிபிஐ கைது செய்துள்ளது.
Pink City Expressway Pvt. Ltd. நிறுவனம் டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கணினித் தரவுகளை மாற்றி அமைத்து (Data Manipulation) உண்மையான சுங்க வசூலை மறைத்தது. இதன் மூலம் அரசுக்கு (NHAI) கோடிக்கணக்கில் நிதி இழப்பு ஏற்படுத்தியது.
Soma Isolux / Soma Isolux NH One Tollway ஜலந்தர் தேசிய நெடுஞ்சாலை (NH-1) அகலப்படுத்தும் திட்டத்தில், பல ஆண்டுகள் தாமதம் ஏற்படுத்தியது மற்றும் வங்கிக் கடன்களை திட்டமிட்டபடி பயன்படுத்தாத குற்றச்சாட்டு உள்ளது. ஸ்பெயின் நாட்டின் நிறுவனமான Isolux Corsan உலகளவில் பல்வேறு நிதி முறைகேடுகள் செய்துள்ளது.
GMR Group கூட்டு நிறுவனத்திற்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் (DIAL) செயல்பாட்டுக்காக, இந்திய விமான நிலைய ஆணையத்தால் (AAI) கூடுதல் நிலம் மிகக் குறைந்த விலையில் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக சிஏஜி (CAG) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.