தென்னாப்பிரிக்கா தீ விபத்திற்கு நவதாராளமய கொள்கையால் உருவான வீட்டுவசதி நெருக்கடியே காரணம்
ஜனவரி மாதம் 26 அன்று இரவு போய்சென்ஸ் என்ற நகரத்தின் புறநகரில் உள்ள பகுதியில் அமைத்துள்ள முறைசாரா குடியிருப்பில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது இதில் 200 தொழிலாளர் குடும்பங்களின் வீடுகள் எரிந்து போய் விட்டது. இதற்கு முன்பு டைப்ஸ்லூட் என்ற சேரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு இளம் பெண் மற்றும் ஒரு கைக்குழந்தை உயிரிழந்தனர். 11 வீடுகள் முற்றிலும் தீயில் எரிந்து அழிந்துவிட்டது.
இந்த தொடர் தீவிபத்துக்களால் தென்னாபிரிக்காவின் தொழிலாளர் வர்க்கமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்த நபர்களாக மாற்றப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்துக்காண காரணங்களை அரசாங்கம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் தெரிவிக்கவில்லை. தொடர் தீ விபத்திற்கு அந்நாட்டு அரசு பின்பற்றும் நவதாராளமய கொள்கையும் அதனால் உருவாக்கப்பட்டுள்ள வீட்டுவசதி நெருக்கடியுமே காரணம் என தென்னாப்பிரிக்காவின் பொது தொழில்துறை தொழிலாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஜனவரி 29 அன்று அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தீ விபத்துகள் தற்செயலானவை அல்ல, தாராளமயக் கொள்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் தென்னாபிரிக்க அரசு “எங்கள் தொழிலாளி வர்க்க சமூகத்தை வேண்டுமென்றே புறக்கணித்து கைவிட்டதன்” நேரடி விளைவு. அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் தொழிலாளி வர்க்கத்தினருக்கு அடிப்படை வசதிகள் கொண்ட சொந்த வீடுகளை வாங்குவதை சாத்தியமற்றதாக்கியுள்ளன. இதன் விளைவாக தொழில்லரி வர்க்கம் தங்கள் சொத்துக்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மலிவு விலையில் வீடுகள் இல்லாததும், அவசரகால பொது வீட்டுவசதித் திட்டம் இல்லாத சூழல் ஆகியவற்றால் தான் எளிமையாக தீப்பற்றக்கூடிய குடிசைகளில் மிக நெருக்கமாக தொழிலாளி வர்க்கம் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்சாரம் இல்லாததால், பெரும்பாலும் அவீட்டில் அவர்கள் மெழுகுவர்த்திகளையே பயன்படுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளது.
மேலும் அச்சங்கம் இந்த குடிசை வீடுகளை தொழிலாளி வர்கத்திற்க்கான “மரணப் பொறிகள்” என்று குறிப்பிடுகின்றது. அந்த நாடு 2023 இல் எடுத்த வீட்டுவசதி சார்ந்த கணக்கெடுப்பின்படி, தென்னாப்பிரிக்காவில் கிட்டத்தட்ட 25 சதவீதமான் மக்கள் விறகு, நிலக்கரி மற்றும் கரி அடுப்புகளில் தான் அசாமியால் செய்கின்றனர்.
இது தென்னாப்ரிக்க தொழிலாளர்களின் குடிசைகளில் தீ விபத்து அபாயத்தை அதிகரிக்கிறது. முறைசாரா குடியிருப்புகளில் ஆபத்தான மற்றும் பெரும்பாலும் சட்டவிரோத மின் இணைப்புகளே அதிகளவு உள்ளது இது தீவிபத்து ஆபத்தை மேலும் அதிகரிக்கின்றது என தெரிய வந்துள்ளது.
பேரிடர் அபாயக் குறைப்புக்கான ஐ.நா அலுவலகம் (UNDRR) வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில் இது போன்ற குடிசைத் தீ விபத்துகளின் பேரழிவுகரமான விளைவுகளை பொது மக்களுக்கு காட்டுகின்றது. அதாவது தென்னாப்பிரிக்காவில் இயற்கைக்கு மாறான மரணத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இத்தகைய குடிசை தீவிபத்துகள் உள்ளது என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துகள் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் அழிப்பது மட்டுமல்லாமல், அரசு உதவி பெற தேவையான அடையாள அட்டைகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற அத்தியாவசிய ஆவணங்களையும் அழிக்கின்றன இது தொழிலாளி வர்க்கத்தை மேலும் மோசமான நெருக்கடியில் தள்ளுகின்றது.
இத்தகைய பல குடியிருப்புகளில் வாழ்பவர்களில் வெளி நாடுகளில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களாகவும் உள்ளனர். இது போன்ற தீவிபத்துகளில் அவரக்ளவுது அடையாள அட்டைகளை இழந்து விட்டால் நாடு கடத்தப்படும் அபாயமும் உருவாகின்றது.
பொது தொழில்துறை தொழிலாளர்கள் சங்கம் குடிசைகளுக்கு மின்சாரம் வழங்குவது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமல்லாமல், சரியான பொது வீட்டுவசதித் திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளது.