Tamil Marx

இந்திய பொருளாதாரம் இந்தியா

முதலாளித்துவ ஏகபோகத்தின் வேட்டைக் காடாகும் இந்தியா-ஆர்.கருமலையான்

முதலாளித்துவ ஏகபோகத்தின் வேட்டைக் காடாகும் இந்தியா-ஆர்.கருமலையான்
  • PublishedDecember 24, 2024

இந்தியாவில் செல்வம் சிலரின் கையில் குவிந்து வருகிறது. பணக்காரர்களின் எண்ணிக்கை உயர்வதையும், அவர்களின் சொத்து மதிப்பு பெருகுவதையும் முதலாளித்துவ ஊடகங்கள் ‘தேசிய பெருமை’ என்று கொண்டாடுகின்றன. ஆனால் உண்மை என்ன? சாதாரண மக்களின் வருமான மும், வாங்கும் சக்தியும் வேகமாக குறைந்து வருகிறது.

மோடியும் அவரது கூட்டாளிகளும் இதை பொரு ளாதார வளர்ச்சி என்று பெருமைப்படுகிறார்கள். தொழிலாளர்கள், விவசாயிகளின் துன்பங்களை ‘வேக மான பொருளாதார வளர்ச்சிக்கான அவசியமான தியாகம்’ என்று சொல்லி சமாளிக்கிறார்கள்.

பெருகும் கோடீஸ்வரர்கள்

2024-இல் என்ன நடக்கிறது? ஒவ்வொரு ஐந்து நாட்க ளுக்கும் ஒரு புதிய பில்லியனர் – மெகா கோடீஸ்வரர் உருவாகிறார். இப்போது இந்தியாவில் 185 பில்லியனர் கள் உள்ளனர் – உலகிலேயே மூன்றாவது அதிக எண்ணிக்கை. 2015-லிருந்து இது 123% அதி கரித்துள்ளது.

சுவிஸ் வங்கியின் பில்லியனர் அறிக்கை என்ன சொல்கிறது? கடந்த ஆண்டில் மட்டும், இந்திய பில்லியனர்களின் சொத்து மதிப்பு 42.1% உயர்ந்து 905.6 பில்லியன் டாலர் ஆகியுள்ளது. இந்த 185 பேரின் சொத்து மதிப்பு 2024 பட்ஜெட் அளவுக்கு சமம். இது ஆங்கிலேயர் ஆட்சியை விட மோசமான நிலை!

ஐந்து பெரும் நிறுவனங்களின் ஆதிக்கம்

ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் டாக்டர் விரால் ஆச்சார்யா தெரிவிக்கிறார்: ஐந்து பெரிய குழுமங்கள் – முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், கௌதம் அதானியின் அதானி குழுமம், டாடா குழுமம், ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் மிட்டல் பாரதி – 40 துறைகளில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துகின்றன.

இதன் விளைவு? 2015-இல் நாம் ₹100 செல வழித்தால், ஏகபோக குழுமங்களுக்கு ₹18 லாபம் கிடைத்தது. 2021-இல் அது ₹36 ஆக உயர்ந்துவிட்டது! இந்த வளரும் ஏகபோகம் நாட்டின் நிலையற்ற பொரு ளாதார வளர்ச்சி, வேலையின்மை நெருக்கடி மற்றும் உயர் பணவீக்கத்துடன் நேரடியாக தொடர்புடையது.

சந்தை குவிப்பு மற்றும் லாப ஆதிக்கம்

மார்செலஸ் என்ற செல்வ மேலாண்மை நிறுவ னத்தின் அறிக்கை என்ன சொல்கிறது? முதல் 20 நிறுவனங்கள் மட்டுமே மொத்த கார்ப்பரேட் லாபத்தில் 80% பங்கை அள்ளுகின்றன. பத்தாண்டு களுக்கு முன்பு இது பாதி அளவுதான். பங்குச் சந்தையில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட செல்வ உயர்வில் 80 சதவீதத்தை 20 நிறுவனங்கள் மட்டுமே அபகரித்துள்ளன.

1992-93இல் முதல் 20 நிறுவனங்கள் மொத்த லாபத்தில் 15% மட்டுமே பெற்றன. இன்று அவை 80% லாபத்தை குவிக்கின்றன. இதுதான் சந்தை ஆதிக்கத்தின் வேகம்!

துறைவாரி ஏகபோக ஆதிக்கம்:

  1. நெஸ்லே: குழந்தை உணவு சந்தையில் 85% பங்கு
  2. ஐடிசி (ITC): சிகரெட் சந்தையில் 77% பங்கு
  3. பிடிலைட்: பசை துறையில் 70% பங்கு
  4. பஜாஜ்: தலை எண்ணெய் சந்தையில் 60% பங்கு
  5. ஆசியன் பெயிண்ட்ஸ்: வண்ண பூச்சு சந்தையில் 40% பங்கு

தொலைத்தொடர்பு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் ஏகபோகம்

அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை மொபைல் டேட்டா மற்றும் தொலை பேசி சேவைகளில் கொண்டுள்ள ஏகபோகத்தின் தீமை களை மக்கள் ஏற்கனவே அனுபவித்து வருகிறார்கள். சில்லரை வர்த்தகம் மற்றும் வங்கி சாரா நிதி துறை யிலும் இதேபோன்ற ஏகபோகம் உருவாகி வருகிறது.

அதானி குழுமம்:

நாட்டின் விமான போக்குவரத்தில் கால் பங்கு;முக்கிய கடல், விமான துறைமுகங்களின் உரிமை; நாட்டின் உணவு தானிய சேமிப்பில் 30% கட்டுப்பாடு – தன்வசம் வைத்துள்ளது.

சிறு தொழில்கள் அழிவும் ஏகபோக வளர்ச்சியும்

பணமதிப்பு நீக்கம் (2016) மற்றும் ஜி.எஸ்.டி (2017) அறிமுகம் பல சிறு மற்றும் குறு நிறுவனங்களின் மூட லுக்கு வழிவகுத்தது. இது ஏகபோக நிறுவனங்கள் தங்க ளின் பரந்த அகில இந்திய விநியோக வலையமைப் பைப் பயன்படுத்தி சந்தை பங்கையும் லாபத்தையும் அதிகரிக்க உதவியது.

நிதித் துறையில் ஏகபோகம்

முன்பு வட்டார அளவில் இருந்த நிதி வழங்கல் துறையில் இப்போது எச்டிஎப்சி (HDFC) போன்ற சில தேசிய ஏகபோகங்கள் உருவாகியுள்ளன. எச்டிஎப்சி மற்றும் எச்டிஎப்சி வங்கி இரண்டுமே கடந்த 10 ஆண்டு களில் அதிக லாபம் ஈட்டும் முதல் 20 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

குறைந்த வட்டியில் கடன் பெறும் வசதி ஏகபோக நிறுவனங்களுக்கு போட்டியை நசுக்கவும், மூல தனத்தை மேலும் குவிக்கவும் உதவுகிறது. ஏகபோக நிறுவனம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது. உலகமயமாக்கல் இவர் களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதம் கொண்ட நாடுக ளில் இருந்து நிதி பெற உதவுகிறது. அதானி குழு மத்தின் ₹2 லட்சம் கோடி கடனில் மூன்றில் இரண்டு பங்கு வெளிநாட்டில் இருந்து பெறப்பட்டது.

லாபமீட்டும் முதல் 20 நிறுவனங்கள்

இந்தியாவின் அதிக லாபம் ஈட்டும் முதல் 20 நிறுவனங்கள் இரண்டு வகையில் அடங்கும்:

1. உலகளவில் மிகக் குறைந்த செலவில் மூலதனம்பெறும் தனியார் ஏகபோகங்கள் (உ.ம்: ரிலையன்ஸ்,டாடா, அதானி, எச்டிஎப்சி குழுமங்கள்)

2. அரசின் உத்தரவாதத்தால் குறைந்த செலவில் மூலதனம் பெறும் பெரிய பொதுத்துறை நிறுவனங்கள்சிறிய நிறுவனங்களுக்கு இந்த இரண்டு வழிகளிலும் மூலதனம் கிடைப்பதில்லை. இதனால் பெரிய ஏகபோகங்களுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்படுகிறது.

புதிய துறைகளில் ஏகபோக முதலீடுகள்

எஸ் அண்டு பி (S&P) குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் என்ன சொல்கிறது? இந்திய பெரு நிறுவனங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் 800 பில்லியன் டாலர் (₹67,23,600 கோடி) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. இது கடந்த பத்தாண்டு முதலீட்டைவிட மும்மடங்கு அதிகம்!

இந்த முதலீட்டில் 40% – பசுமை ஹைட்ரஜன்; தூய்மை எரிசக்தி; விமானத்துறை; செமிகண்டக்டர்; மின்சார வாகனங்கள்; தரவு மையங்கள் எனபுதிய துறைகளில் செய்யப்படவுள்ளது.

வேதாந்தா, டாடா, அதானி, ரிலையன்ஸ், ஜேஎஸ்டிபிள்யு (JSW) ஆகிய குழுமங்கள் மட்டும் அடுத்த 10 ஆண்டுகளில் 350 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளன.

தனியார்மயமாக்கல் மூலம் ஏகபோக வளர்ச்சி

தனியார்மயமாக்கலும் மூலதன குவிப்புக்கு உதவியுள்ளது:

– வேதாந்தா குழுமம் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை வாங்கியபோது துத்தநாக உற்பத்தியில் ஏகபோகம் பெற்றது; அலுமினியத்தில் பால்கோநிறுவனத்தை வாங்கி ஆதிக்கம் பெற்றது; ரிலையன்ஸ்,ஐபிசிஎல் நிறுவனத்தை வாங்கி பெட்ரோகெமிக்கல்ஸில்ஆதிக்கம்; டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்கி விமானத்துறையில் ஆதிக்கம் பெற்றது.

மின்சார துறையில் அதானி, டாடா, ஜிண்டால், டாரன்ட் ஆகியோரின் ஏகபோகமும், தொலைத்தொ டர்பில் அம்பானி, பாரதி மிட்டல், பிர்லா ஆகியோரின் ஏகபோகமும் இத்துறைகள் தனியார்மயமாக்கப்பட்ட தன் விளைவு. விமான நிலையத்துறை தனியார்மய மாக்கப்பட்டதால் அதானி குழுமத்தின் ஏகபோகம் உருவானது.

திவால் சட்டம் மூலம் ஏகபோகங்களின் வளர்ச்சி

திவால் மற்றும் நொடிப்பு சட்டம் (IBC) என்ன செய்தது? வங்கிகள் பெரு முதலாளிகளிடமிருந்து வாராக்கடன்களை மீட்க உதவும் என்று சொல்லப் பட்டது. ஆனால் நடந்தது என்ன?

  1. பெரிய ஏகபோகங்கள் மலிவு விலையில் சொத்துக்களை வாங்க உதவியது.
  2. வங்கிகள் பெரும் இழப்பை ஏற்க நிர்பந்திக்கப்பட்டன.
  3. டாடா குழுமம் பூஷண் ஸ்டீலை வாங்கி எஃகு துறையில் ஆதிக்கம் பெற்றது.
  4. உலகின் மிகப்பெரிய எஃகு ஏகபோகமான ஆர்செலர்மிட்டல், எஸ்ஸார் ஸ்டீலை கைப்பற்றியது.

வரி ஏய்ப்பும் அரசின் சலுகைகளும்

பெருநிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தும், பொதுப் பணத்தை கடன்கள் என்ற பெயரில் கொள்ளைய டித்தும் வருகின்றன. அதற்கு மேலும் பட்ஜெட் மூலம் வரிச்சலுகைகள் பெறுகின்றன.

2024-25 பட்ஜெட் காட்டும் உண்மை:

– தனிநபர் வருமான வரி பங்கு: 19%
– பெருநிறுவனங்கள் செலுத்தும் வரி: வெறும் 17%

மோடியின் முதல் ஆட்சிக் காலத்தில்:

பெருநிறுவனங்களுக்கு ₹4.32 லட்சம் கோடி வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இது – 2014-15இல் ₹65,067 கோடியில் தொடங்கி, 2018-19இல் ₹1.09 லட்சம் கோடியாக உயர்ந்தது. இது, சராசரியாக ஒன்றிய அரசின் நிகர வரி வருவாயில் 7.6% ஆகும். கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் வரிச்சலுகை: ₹8.7 லட்சம் கோடி ஆகும்.

ஏகபோகத்தின் சமூக விளைவுகள்

மூலதனக் குவிப்பு அதிகரிப்பதால் என்ன நடக்கிறது? உற்பத்தி மற்றும் வர்த்தகத்தின் மீதான கட்டுப்பாடு சில பில்லியனர்களின் கையில் குவி கிறது. பெரும்பான்மை உழைக்கும் மக்களின் மீதான சுரண்டல் தீவிரமடைகிறது. நாட்டின் அடிமட்ட மக்கள் தொகையில் பாதிப் பேர், மொத்த செல்வத்தில் வெறும் 3% மட்டுமே வைத்திருக்கின்றனர். 135 கோடி மக்களின் வாழ்க்கையை உலகின் பணக்காரர் பட்டிய லில் இடம்பிடிக்க துடிக்கும் சில லாப வேட்டைக் காரர்கள் தீர்மானிக்கிறார்கள்.

தொழிலாளர்கள் மீதான தாக்கம்

ஏகபோக முதலாளித்துவத்தின் கீழ்:

  1. உழைப்பாளர்களின் உண்மை ஊதியம் உற்பத்தித்திறன் அதிகரிப்புக்கு ஏற்ப உயராது.
  2. உபரி மதிப்பு காலப்போக்கில் அதிகரிக்கும்.
  3. தொடர்ச்சியான தானியங்கி மயமாக்கல் மூலம் உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.
  4. குறைந்த வேலைவாய்ப்பும், குறைந்த உற்பத்தித்திறன் சார்ந்த ஊதியமும் பொதுத்தன்மையாக மாறும்.
  5. இது அனைத்து தொழிலாளர்களின் வருமானத்தையும் பாதிக்கும்.
  6. கூட்டு பேரம்பேசும் சக்தி மேலும் பலவீனப்படுத்தப்படும்.

தீர்வு என்ன?

“உயர் வளர்ச்சி அனைவருக்கும் நன்மை தரும்” என்பது பொய்யாகியுள்ளது. பொருளாதார வளர்ச்சி எவ்வளவு வேகமாக இருந்தாலும், முதலாளித்துவ வளர்ச்சி ஒரு துருவத்தில் சிலருக்கு செல்வத்தையும், மறு துருவத்தில் பெரும்பான்மையோருக்கு வறுமை யையும் தரும். முதலாளித்துவத்தை கடந்து சோசலி சத்திற்கு மாறுவது மட்டுமே பெரும்பான்மை மக்களின் துயரங்களுக்கு முடிவு கட்டும். முதலாளித்துவ அமைப்பின் நிர்வாகத்தில், அதாவது முதலாளித்துவ அரசில் எந்த மாற்றமும் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நிலைமையை மேம்படுத்தாது, அவர்க ளின் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் குறைக் காது. உற்பத்தி சாதனங்களின் சமூக உடைமை மட்டுமே லாபவேட்டைக்கு பதிலாக மனித தேவைக ளை நிறைவேற்றும் சமூக உற்பத்திக்கு வழி வகுக்கும்.

ஆர்.கருமலையான்

சிஐடியு அகில இந்திய செயலாளர்

தமிழில் தொகுப்பு : க.ஆனந்தன்

இக்கட்டுரை முதலில் தீக்கதிர் நாளேட்டில் வெளியானது.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *