Tamil Marx

ஆசிரியர்குழு

முதலாளிகளுக்காக புதிய துறை: அமெ.வை வழிநடத்த முதலாளிகளை நியமித்த டிரம்ப்

முதலாளிகளுக்காக புதிய துறை: அமெ.வை வழிநடத்த முதலாளிகளை நியமித்த டிரம்ப்
  • PublishedNovember 13, 2024

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப் உருவாகியுள்ள செயல்திறன் துறைக்கு (DOGE) எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமியை தலைமையாக நியமித்துள்ளார்.

செயல்திறன் துறை

பொதுவாக ஒரு நாட்டின் செயல்திறன் துறையின் நோக்கம் அந்நாட்டின் திட்டங்களை வடிவமைப்பதாகவும். டிரம்ப் புதிதாக உருவாக்கியுள்ள இந்த துறை மூலம் அரசாங்கத்தின் இயல்பான அதிகாரத்தை அகற்றிவிட்டு நேரடியாக அமெரிக்க அரசில் முதலிகளுக்கான திட்டத்தை வகுக்கும் திட்டக்குழுவாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவின் நோக்கம் அதிகப்படியான விதிமுறைகளை குறைப்பது, வீண் செலவுகளை அகற்றுவது என்ற பெயரில் சமூக நலத்திட்டங்களை வெட்டுவது, கூட்டாட்சி நிறுவனங்களை மறுசீரமைத்து முதலாளின் ஆதிக்கத்தை மேலும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

துறை தலைவர்கள்

உலகின் மிகப்பெரும் முதலாளியும் டிரம்பின் தேர்தல் செலவுகளுக்கு நிதி உதவி செய்தவருமான டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தலைவர் வேட்பாளராக டிரம்புக்கு எதிராக போட்டியிட்டு பிறகு டிரம்புக்கு ஆதரவு தெரிவித்த மருந்து உற்பத்தி நிறுவனத்தின் நிறுவனராக உள்ள கோடீஸ்வரர் விவேக் ராமசாமி ஆகியோரை டிரம்ப் தலைவர்களாக நியமித்துள்ளார்.
இவர்களுடைய பணி 2026 ஆம் ஆண்டு ஜூலை 4 க்குள் முடிவடையும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தம்

தேர்தல் பிரச்சாரத்தின் போது எலான் மஸ்க் ஒவ்வொரு மாதமும் சுமார் 300 கோடி ரூபாய் வரை டிரம்பிற்காக செலவு செய்தார். அப்போதே தான் வேற்றி பெற்றவுடன் எலான் மஸ்கிற்கு தாது நிர்வாகத்தில் முக்கிய பதவி கொடுக்கப்படும் என டிரம்ப் பகிரங்கமாக வாக்குறுதி கொடுத்திருந்தார்.
டிரம்ப் வெற்றிக்கு பிறகு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய எலான் மஸ்க் நிறுவனங்களின் லாபம் பல லட்சம் கோடிகளுக்கு உயர்ந்தது. இந்நிலையில் தான் டிரம்ப் புதிய துறையையே உருவாக்கி எலான் மஸ்கிற்கும், விவேக் ராமசாமிக்கும் புதிய பொறுப்புகளை வழங்கியுள்ளார்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *