Tamil Marx

சர்வதேசம்

தமிழர்களின் நிலம் அவர்களிடமே ஒப்படைக்கப்படும் – இலங்கை ஜனாதிபதி உறுதி

தமிழர்களின் நிலம் அவர்களிடமே ஒப்படைக்கப்படும் – இலங்கை ஜனாதிபதி உறுதி
  • PublishedNovember 11, 2024

தமிழ் மக்களிடம் இருந்து கடந்த காலங்காலங்களில் இலங்கை அரசாங்கம் பறித்துக்கொண்ட நிலங்களை தற்போதைய அரசு மீண்டும் அவர்களிடமே வழங்கும் என இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கையின் ஜனாதிபதியும் இடதுசாரிக் கட்சியான ஜேவிபி கட்சியின் தலைவருமான அனுர குமார திஸாநாயக்கே உறுதி கொடுத்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வாழும் தமிழர்களின் நிலங்களை இலங்கையின் கடந்த கால ஆட்சியாளர்கள் தொல்லியல் துறை, வனத் துறை மூலமாக பலவந்தமாக கையகப்படுத்தியுள்ளனர். இந்த நிலங்களை மீட்பதற்காகப் கடந்த சில வருடங்களாக அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் போராடி வருகின்றனர்.

ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் தனது முதல் பேரணியை திஸாநாயகே நடத்தினார்.  தமிழர்கள் வாழுகிற பகுதியில் அவர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகள் அவர்களது பிரதேசங்களை வழிநடத்தவும், ஆளவும் முடியும் என்பதை தங்கள் ஆட்சி உறுதி செய்யும் என்றார்.எனினும் புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழர்களின் அதிக அதிகாரப் பகிர்வு மற்றும் இனப்பிரச்சனைக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான கோரிக்கை நிவர்த்தி செய்யப்படும் என அவரது தேர்தல் வாக்குறுதி பற்றி அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகள் பெற்றதற்கு நமது திட்டத்தை முறையாக தமிழர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்காததே காரணம். எங்கள் கட்சி சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு பகுதியில் செய்த அளவிற்கு தெற்கு பகுதியில் கடினமாக உழைக்காததும் இதற்குக் காரணம் என்று தெரிவித்தார்.

சுயவிமர்சனம் கொண்ட இப்பேச்சு தமிழர்கள்,சிங்களர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்த இலங்கையை உருவாக்குவதே ஜேவிபியின் நோக்கம் என பேசிய  திஸாநாயக்கவின் வாக்குறுதி சரியான பாதையில் தான் பயணிக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.இது தமிழர்கள் பகுதியில் அவரது கட்சியின் ஆதரவையும், பலத்தையும் அதிகரிக்கும் செயலாகவும் உள்ளது.

இன, மத பேதமின்றி ஒவ்வொரு மனிதனும் சமம் என உணரும் வகையில் இலங்கையை கட்டியெழுப்ப உறுதியளித்த அவர், சிங்களவர்களையும் தமிழர்களையும் ஒருவரையொருவர் எதிர் எதிராக நிறுத்தி வைத்திருந்த கடந்த கால ஆட்சியாளர்களையும் அரசியல்வாதிகளையும் கடுமையாக விமர்சித்தார். 30 வருட கால போருக்குப் பின் , இலங்கையில் கண்ணீரும், குழந்தைகள், கணவர்கள் என அன்புக்குரியவர்களை இழந்தது  என அழிவைத் தவிர வேறொன்றும் மிஞ்சவில்லை.

இதுபோன்ற மற்றொரு போர் உருவாக எந்த காரணமும் இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம். இலங்கையில் உள்ள பல்வேறு சமூக மக்களின் மத்தியில் நாங்கள் நம்பிக்கையை  உருவாக்குவோம். இது உங்களுக்கான அரசாங்கம் என நீங்கள் உணரும் வரை கடினமாக உழைப்போம் என்று பேசிய அவர், நமது நாட்டின் இனவெறி அரசியல் கலாச்சாரத்தை மாற்றும் இந்த முயற்சியில் நீங்கள் அனைவரும் என்னுடன் இணைந்து செயல்பட வேண்டும் என யாழ்ப்பாண மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

விவசாயிகள் மற்றும் மீனவ மக்களுக்கு திஸாநாயக்க அரசு ஆதரவளிக்கும் என்று கூறிய அவர் இந்திய மீனவர்கள் பற்றி பேசிய போது, இந்திய நாட்டின் விசைப்படகுகளை இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் இந்த நடைமுறையானது இலங்கை கடல் சுற்றுச்சூழல் அமைப்பை கடுமையாக பாதிப்பதுடன் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரம் நடத்திய போது அங்கு பெருமளவில் மக்களின் கூட்டம் வரவில்லை. அந்த பிரச்சாரம் ஒரு உள்ளரங்க கூட்டமாகத்தான் நடைபெற்றது.ஆனால் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தமிழர்கள் பகுதியில் இடதுசாரியான ஜேவிபி கட்சியின் தலைவரும் ஜனாதிபதியான திஸாநாயகவேவிற்கு தற்போது போது மிகப்பெரும் அளவில் மக்கள் கூட்டமாக வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றம் ஜேவிபியின் வாக்குறுதிகளின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது எனவும் ஜேவிபி கட்சிக்கு தமிழர்கள் பக்கம் இருந்து ஆதரவு காற்று வீசத் துவங்கியுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த ஆதரவு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகளின் பலம் அதிகாரிக்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியானது இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து The Hindu பத்திரிக்கையாளராக இயங்கிவரும் மீரா சீனிவாசன் எழுதிய செய்தியில் இருந்து எழுதப்பட்டுள்ளது.

Written By
shethu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *