Tamil Marx

தமிழ் நாடு தொழிலாளர் போராட்டங்கள்

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போராட்டம்!

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போராட்டம்!
  • PublishedJune 12, 2024


ஊதிய உயர்வு, வேலை நேர வரையறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு, நேற்று 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தனியார் நிறுவனங்கள் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், இதை மாற்றி மாநில அரசே ஊழியர்களை நியமித்திட வேண்டும். ஏனெனில் தனியார் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் அனைத்து அடிப்படை உரிமைகளையும் இழந்து குறைந்த கூலியில் அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

குறைவான ஓட்டுனர்களால் அதிக வேலைபளுவை  தற்போது உள்ள ஓட்டுனர்கள் எதிர்கொள்கின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான ஓட்டுனர்களே தூரத்தில் உள்ள இடத்திற்கும்  விரைந்து என்று நோயாளிக்கு உதவவேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

இந்நிலையில் மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வுடன்  பணியாற்றும் ஓட்டுனர்களால் அவர்களுக்கு மட்டுமின்றி நோயாளிகளுக்கும் பாதிப்பை உண்டாகக்கூடிய அபாயம் உள்ளது.


எனவே மேலும் புதிதாக சில ஆம்புலன்ஸ்களை புதிதாக வாங்கி, வேலைக்கு கூடுதலாக ஆட்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என போராட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

மேலும் வண்டி நிறுத்தும் இடவசதி எதுவும் அரசால் செய்து தரப்படவில்லை, ஓட்டுனர்கள் ஓய்வறை, கழிப்பறை வசதிகள் இல்லை, எனவே உடனடியாக அரசு இந்த அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என கோரிக்கைகள் வைத்துள்ளனர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்கள்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *