Tamil Marx

சர்வதேசம் வேலையின்மை

தென் கொரியாவின் “Kangaroo tribe” இளைஞர்கள் யார் இவர்கள்?

தென் கொரியாவின் “Kangaroo tribe” இளைஞர்கள் யார் இவர்கள்?
  • PublishedJune 10, 2024

பொருளாதார தேவைகளை தனியாக சமாளிக்க முடியாமல் 25 – 34 வயதுடைய 66% தென் கொரிய இளைஞர்கள் பொருளாதார நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர்.

Yi Whan-woo என்ற தென் கொரிய பத்திரிக்கையாளர்  The korea Times என்ற பத்திரிக்கையில்  இது குறித்து எழுதிய போது இவ்வாறு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இளைஞர்களை “kangaroo tribe” (கங்காரு பழங்குடி) என்ற வார்த்தையில் குறிப்பிடுகிறார்.

அதாவது  ஒரு கங்காரு குட்டி  அதனையுடைய தாயின் வயிற்றில் உள்ள  பையை சார்ந்திருக்கும் வரைதான் அதனால் உயிரோடு இந்த உலகத்தில் இருக்க முடியும். அது போல தான் இன்று தென் கோரிய இளைஞர்கள் உள்ளார்கள் தற்போது தங்களின் பொருளாதார தேவைகளை சாமளிப்பதற்காக தங்களின் பெற்றோரை சார்ந்து இருப்பதை குறிக்கும் வகையில் அந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்.

மேலும் அவர் பேட்டி எடுத்த சில இளைஞர்கள்  தென் கொரியாவில் வேலை தேடுவதும்,வேலை கிடப்பதும் மிக கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டின் வேலைவாய்ப்பு அலுவலக தரவுகளின் படி 2020 ஆம் ஆண்டு 25-34 வயதுடைய 66% இளைஞர்கள் “kangaroo tribe” களாக உள்ளனர்.

2012 ஆம் ஆண்டு அந்நாட்டின் வேலையின்மை விகிதம் 62.8 % ஆக இருந்தது.இது 2016 இல் 66.6% 2018 இல் 68% என தொடர்ந்து உயர்ந்துள்ளது. அதாவது 2012க்கு பிறகு அந்நாட்டில் வேலையின்மை 60%த்தை  விட்டு குறையவில்லை.


2020 இல் “kangaroo tribe” இளைஞர்களில்   73.4% பேர்   டிப்ளோமா கல்வி கூட  இல்லாமல் இருந்தனர். அவர்களில் 69.4%  பேர் அந்நாட்டின் தலைநகரில் வாழ்ந்து வருகிறார்கள்.அதாவது நாட்டின் தலைநகரிலேயே
வேலை வாய்ப்பின்மை தலை விரித்து ஆடுகிறது.

வேலையின்மை காரணமாக இளைஞர்களால் தங்களின் விருப்பப்படியான சொந்த வாழ்க்கையை கூட வாழ முடியவில்லை. அதுமட்டுமல்ல வேலை கிடைத்துள்ள இளைஞர்களாலும் தங்களது சொந்த வாழ்க்கையை வாழ முடியவில்லை அதற்காக தங்களது குடும்பத்தை சார்ந்து இருக்க வேண்டிய சூழலில் உள்ளனர்.


அந்நாட்டில் தற்காலிக வேலைகளில் பணிபுரிபவர்கள்  72.2 சதவீதம் பேர் இவர்களுக்கு  போதிய ஊதியம் கிடைப்பதில்லை  மற்றும் எப்போது வேண்டுமானாலும் வேலை பறிபோகக் கூடிய சூழலில் இருப்பவர்கள்.

வயது கடந்த  பிறகும் கூட பெற்றோருடன் வசிக்கும் பல இளைஞர்கள் தங்களை பாத்து காத்து கொள்ள மேலும் படிப்பதாகவும்,  கட்டாய இராணுவ சேவை பயிர்ச்சிக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலை  “kangaroo tribe” இளைஞர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல அந்நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *