நவயுக நாஜிக்களுக்கு வெளிப்படையாக ஆயுதங்கள் வழங்க அமெரிக்க முடிவு!
உக்ரைனில் உள்ள “அசோவ் படை” என்பது ஹிட்லரின் நாஜி கொள்கைகளை பின்புலமாக கொண்ட ஓர் தீவிர வலது சாரிய ஆயுதப் படையான இவ்வமைப்புக்கு அமெரிக்க நிறுவனங்களின் ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா கடந்த 10 ஆண்டுகளாக தடை விதித்திருந்தது.
காரணம், உக்ரைனில் செயல்படும் அசோவ் ஆயுதப்படை உக்ரைனிய மக்கள் மத்தியில் பிற்போக்கான வலதுசாரிய கொள்கையை நிறுவ செயல்படுகிறது. தேசிய காப்பாளர்களாக தங்களை அடையாள படுத்துக்கொள்ளும் இவ்வமைப்பு பொது மக்கள் அமைதிக்கு எதிரான நாஜி கொள்கையை அடிப்படையாக கொண்டு உக்ரைனில் உள்ள ரஷ்ய மற்றும் ஸ்லாவிக் மொழி போன்ற பிற மொழி பேசும் சிறுபான்மையினர் பலரின் வாழ்வாதாரத்தை சிதைத்து, அவர்களை கொன்றுள்ளது.
நாஜிகளின் ஸ்வஸ்திக் சின்னத்தை கொண்டுள்ள இவ்வமைப்பிற்கு போர் நிறுத்தம் விரும்பத்தக்க ஒன்றல்ல.
இந்நிலையில் தற்போது அமெரிக்க தனது தடையை நீக்கி அமெரிக்க நிறுவனங்கள் தங்களது ஆயுதங்களை அசோவ் ஆயுதப்படைக்கு வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளது.
ஆயுதத் தடை காலத்திலும் கூட மறைமுகமாக அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியது என்ற சந்தேகம் சர்வதேச அளவில் வலுவாக இருந்துவந்தது. ஆனால் தற்போது எவ்வித தயக்கமும் இன்றி வெளிப்படையாக ஆயுதங்களை வழங்க உள்ளது அமெரிக்கா.
இவ்வுலகம் மீண்டும் நாஜிக்களால் படுநாசப்படுத்த விரும்புகிறதா அமெரிக்கா? உக்ரைன் ஆயுதப்படைகளுக்கு அமெரிக்க வழங்கிய ஆயுதங்களை தாண்டி இதுபோன்ற நாஜி ஆயுதப்படைகளுக்கும் ஏன் உதவுகிறது அமெரிக்க? இதனால் அமெரிக்காவிற்கு என்ன லாபம்?
உக்ரைனில் அமைதி மற்றும் ஜனநாயகம் காக்கப்பட வேண்டியா இவ்வாறு செய்கிறது ?
அதற்கான பதில் லின்ட்சே கிரஹாம் என்ற அமெரிக்க செனட் உறுப்பினர் (குடியரசு கட்சியை சேர்ந்தவர்) CBS செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் தெளிவாகவுள்ளது.
அமெரிக்க உக்ரைனுக்கு மற்றும் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை தொடர வேண்டும் என தீர்க்கமாக வாதிடும் ஒரு தீவிர வலதுசாரிதான் இந்த லின்ட்சே கிரஹாம், இவரே நேர்காணலில்,
“உக்ரைன் ரஷ்யா போரில் ரஷ்யாவை வெல்ல விடமாட்டோம் காரணம், உக்ரைனில் $10 முதல் $12 டிரில்லியன் வரை முக்கியமான கனிமங்கள் உள்ளன… நாம் இப்போது உக்ரைனுக்கு உதவி செய்தால், அவர்கள் நாம் கனவு கண்ட சிறந்த வணிகப் பங்காளியாக முடியும், அதாவது $10 முதல் $12 டிரில்லியன் முக்கியமான கனிம சொத்துக்களை உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகள் பயன்படுத்தக்கூடும். புடினுக்கும் சீனாவுக்கும் தரக்கூடாது.” என கூறியுள்ளார்.
எனவே அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான மேற்குலக நாடுகளும் தங்களது லாபத்திற்காக இப்போரை தொடர்ந்து நடத்துகிறார்கள் என்பது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஆனால் இதற்கு முன்பு இவ்வுலகம் இதை சகித்துக்கொண்டதைப்போல இப்போதும் இதை கடந்து செல்லும் போலத்தான் தெரிகிறது.
போருக்கு காரணம் ரஷ்யா, சீனா, ஹமாஸ் என திரும்ப திரும்ப பாடும் கிளிகளாக பொது ஊடகங்கள் உள்ளவரை மக்களை விழிப்புணர்வு கொள்ள செய்து கடினமான ஒரு பணி தான்.
தோழர் பாலா