Tamil Marx

21 ஆம் நூற்றாண்டில் சீன சோசலிசம்

ஜின்ஜியாங் வளர்ச்சி : சிப்பாய்-விவசாயி கோட்பாடு – அ. பாக்கியம்

ஜின்ஜியாங் வளர்ச்சி : சிப்பாய்-விவசாயி கோட்பாடு – அ. பாக்கியம்
  • PublishedMay 20, 2026

1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதற்கு முன்பு ஜின்ஜியாங் மாகாணம் பின்தங்கிய மாகாணமாகவே இருந்தது. அந்த மாகாணத்தில் முக்கியமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு இயற்கை பொருளாதாரமே இருந்து வந்தது. குறைந்த உற்பத்தி திறனும், வளர்ச்சி அடையாத உற்பத்தி முறைகளினாலும் உள்ளூர் வளர்ச்சி என்பது மிகப்பெரும் தேக்கம் அடைந்திருந்தது. அந்த மாகாணத்தில் ஒரு அங்குலம் ரயில் பாதைகள் கூட அதுவரை அமைக்கப்படவில்லை. பரந்து விரிந்த பிரதேசங்களைக் கொண்டிருந்தாலும் பெரிய அளவிலான பண்ணைகளோ வளமான வயல்களோ கிடையாது. தொழில்துறை அடையாளம் என்பதற்கு சில தனியாருக்கு சொந்தமான சிறிய பட்டறைகளே காணப்பட்டன. மக்கள் மிகப் பெரும் அளவிற்கு வறுமையிலும் கஷ்டத்திலும் உழன்று வந்தனர்.

ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான படை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் எல்லை பிரதேசங்களும் அதிக நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய மாகாணமாக இருப்பதினால் இந்த மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒட்டுமொத்தமான வளர்ச்சியுடன் இணைத்து பொதுவான முன்னேற்றத்தை காண்பது கடினமாக இருக்கும். எனவே சீனாவின் மற்றபகுதியிலன் வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுத்துவதற்காக சிறப்பு முயற்சிகளை உருவாக்கினார்கள். அந்த மாகாணத்திலேயெ வடக்குப் பகுதியில் ஏற்பட்டிருந்த வளர்ச்சி தெற்கு பகுதியில் இல்லை என்பதும் எதார்த்தமான நிலைமையாகும்.

ஒருபுறம் ஜின்ஜியாங்கின் தெற்கு வடக்கு வளர்ச்சியை சமப்படுத்துவதும், தேசிய வளர்ச்சியுடன் இணைப்பதும் அடிப்படை தேவையாக இருந்தது. இதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான படை (jinjiang production and construction corporation .XPCC) ஆகும்.

1949-இல் ஜின்ஜியாங் பிரதேசம் அமைதியான முறையில் விடுவிக்கப்பட்ட பிறகு அங்கு நிறுத்தப்பட்டிருந்த மக்கள் விடுதலை படையினர் அதாவது செம்படை உள்ளூர் மக்களுடன் இணைந்து பாலைவனங்களை விளைநிலமாக மாற்றக்கூடிய முயற்சியில் ஈடுபட்டார்கள். இதனை தொடர்ந்து 1954இல் ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான படை XPCC உருவாக்கப்பட்டது. இந்த மாகாணத்தில் இருந்த 1.75 லட்சம் ராணுவ வீரர்கள் தங்கள் ராணுவ பதவிகளை துறந்து பொருளாதார மேம்பாட்டிற்கான பணிகளுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். இந்த அமைப்பு நாட்டின் பாதுகாப்பையும், உற்பத்தியும் இணைத்து செயல்படுத்தக்கூடிய அமைப்பாக உருவாக்கப்பட்டது. சீன வரலாற்றில் குறிப்பாக பண்டைய பேரரசு காலத்தில் சிப்பாய் விவசாயி கொள்கை (Soldier farmer or Tuntian) கொள்கை கடைபிடிக்கப்பட்டது.

இது ராணுவம் மற்றும் பொருளாதார உற்பத்தியுடன் இணைந்த ஒரு உத்தியாகும். இந்தக் கொள்கையின் முக்கிய அம்சங்கள், ராணுவ வீரர்கள் போர்க்காலங்களில் போரிடவேண்டும். அமைதி காலங்களில் எல்லைப் பகுதிகளில் விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட்டது. இந்த முறைகள் படைகளுக்கு தேவையான உணவை அவர்களே உற்பத்தி செய்யவும், அரசுக்கு உணவு பற்றாக்குறையை தவிர்க்கவும் உதவியது. இவர்களுக்கான குடியிருப்புகள் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டதால் நிலங்களை பாதுகாப்பதோடு அந்நிய ஊடுருவல்களை தடுத்து எல்லை பாதுகாப்பை பலப்படுத்தினார்கள்.

இந்தக் கொள்கை சீனாவில் ஒரு சாதாரண சிப்பாயின் வாழ்க்கையை விவசாயத்துடன் இணைத்த து மட்டுமல்ல ராணுவப் படைகளை நிலத்துடன் இணைத்தும் வைத்திருந்தது. இந்த அமைப்பு என்பது சீன வரலாற்றில் ஒரு தனித்துவமான அமைப்பாகும். இந்த அமைப்பு இன்றும் ஜின்ஜியாங் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூக வளர்ச்சியில் முக்கிய பங்கு வைக்கிறது. இந்த அமைப்பு எல்லை பாதுகாப்பு, நிலத்தின் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி போன்றவைகளை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பு கட்சி, அரசு, ராணுவம் என்ற மூன்று தளங்களில் ஆரம்ப காலத்திலும், அதன் பிறகு தொழில் துறையும் இணைத்து நான்கு தளங்களில் செயல்படுகிறது. இது சீன சமூகத்தில் ஒரு சிறப்பு சமூக அமைப்பு ஆகும்.

ஜின்ஜிசயாங் போன்ற புவிசார் அரசியலின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில், பல்வேறு இன மக்கள் வாழக்கூடிய இடங்களில் பொருளாதார வளர்ச்சியும், அவர்களின் வாழ்க்கை மேம்பாடும்தான் ஒன்றுபட்ட சீனத்தை பலப்படுத்தும் என்பதை அறிந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு சிறப்பு அமைப்பின் மூலம் செயல்பட்டது. இந்த கட்டமைப்பு இராணுவப் பாணியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் இராணுவ அமைப்பு அல்ல. இந்தப் பெயர்கள் அதன் வரலாற்றுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளன

இந்த அமைப்பு உழைப்பின் உன்னதத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியது. தக்லமாகன் படுகையிலும், கர்பன்டுங்கட் பாலைவனங்களின் ஓரங்களில் சவால்கள் நிறைந்த நீர்ப்பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. காடுகளையும் பெரும் விளைநிலங்களையும் உருவாக்கினர். விவசாயத்திலிருந்து தொடங்கி, ஜவுளி, எஃகு, நிலக்கரி, மின்சாரம், இயந்திரங்கள் போன்ற பல்துறைத் தொழில் அமைப்பை நிறுவினார்க. ஜின்ஜியாங் மாகாணத்தில் 37 இன மக்கள் வாழ்கின்றனர். இந்த அமைப்பின் முயற்சியால், கூட்டு உழைப்பால் அனைத்து இனங்களும் பெரும் குடும்பமாக வளர்ந்தது . முதல் கட்டமாக 1949 முதல் 1978 வரையிலான பொருளாதார வளர்ச்சி என்பது மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. நான் இங்கு இந்த மாகாணத்தின் வளர்ச்சியை இரண்டு கட்டமாக எழுதுகிறேன் 1949 முதல் 1978 வரை முதல் கட்டமாகும் 1978 க்கு பிறகு சீர்திருத்த காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் பிரித்து எழுதுகிறேன். புள்ளி விவரங்கள் தான் கூடுதலாக இருந்தாலும் பொய்களை முறியடிப்பதற்கு எதார்த்தமான வாழ்க்கையும் வெளிப்படுத்துவதற்கும் இது ஆதாரமாக அமைகிறது.

1949-1978 சோதனை காலங்களில் சாதனை

இந்த காலகட்டம் என்பது மிகவும் நெருக்கடி மிகுந்தது. முதலாவதாக புரட்சி நடந்து முடிந்து பின்தங்கிய நிலைமையை சமாளிப்பது. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், பெரும் முன்னேற்றப் பாய்ச்சல் (1958-1961) மற்றும் கலாச்சாரப் புரட்சி (1966-1976) ஆகியவை ஜின்ஜியாங்கின் வளர்ச்சியில் சிக்கலான மற்றும் மறைமுகமான விளைவுகளை ஏற்படுத்தின. இந்த தேசியப் பிரச்சாரங்கள் குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்கிய போதிலும், ஜின்ஜியாங்கின் தனித்துவமான சூழ்நிலைகள் பின்னர் நகரத்தின் வெற்றியை வரையறுத்த வேர்களை வளர்க்க உதவியது.

இக்காலகட்டத்தின் 28 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் இந்த பதட்டமான அரசியல் மாற்றங்களில் சிக்கித் தவித்த பொழுதும் ஜிஞ்சியான் மாகாணத்தில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான படை சாதித்து காட்டியது. அதற்கு கீழே குறிப்பிட்டுள்ள புறச்சூழலை முழுமையாக பயன்படுத்திக் கொண்டனர்.

“வீட்டு பட்டறைகளின்” ஒரு சிறிய ஆனால் வலுவான அடித்தளம் ஏற்கனவே ஜின்ஜியாங்கில் உருவாகியிருந்தது. 1978 ஆம் ஆண்டில், கிராம அளவு மற்றும் அதற்குக் கீழ்நிலை தொழில்களின் உற்பத்தி மதிப்பு 31.28 மில்லியன் யுவான் ஆக இருந்தது. இது மாவட்டத்தின் மொத்த தொழில்துறை உற்பத்தியில் 34% ஆகும். குடும்பம் நடத்தும், கைவினைப் பட்டறைகளின் இந்த ஆரம்பகால நடைமுறையே “ஜின்ஜியாங் மாதிரியின்” முன்மாதிரியாக இருந்தது. இந்த மாதிரியானது, குடும்பத்திற்குச் சொந்தமான வணிகங்களை நம்பியிருப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. ஜின்ஜியாங்கின் கதை, உள்ளூர் பின்னடைவும் வலுவான வணிக கலாச்சாரமும் இந்த கடினமான கலாச்சார புரட்சி காலங்களைத் தப்பிப்பிழைக்க மட்டுமல்லாமல், அதன் எதிர்கால பொருளாதார அதிசயத்தின் விதைகளை ஏற்கனவே நட்டுச் செல்லவும் எவ்வாறு அனுமதித்தது என்பதைக் காட்டுகிறது.

உழைப்பின் பலன் செல்வஉருவாக்கத்தில் இருக்கும்.செல்வ உருவாக்கத்தின் வெளிப்பாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரதிபலிக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 1952-ல் 7.91 கோடி யுவானாக இருந்தது, 1978-ல் 39.07 கோடி யுவானாக உயர்ந்தது. வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு சராசரியாக 5.9% வளர்ச்சியைப் பதிவுசெய்தது. பொருளாதாரக் கட்டமைப்பு 1955-ல் 50%க்கும் அதிகமாக இருந்த விவசாயப் பங்கு, 1978-ல் குறைந்து, தொழில்துறையின் பங்கு கணிசமாக உயர்ந்தது. விரல்விட்டு எண்ணக்கூடிய சில தனியார் தொழில்துறை மட்டுமே அடையாளமாக இருந்த நிலையை மாற்றி புதிய தொழிற்துறைக்கான அடித்தளத்தை அமைத்தனர்.

தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 1949-ல் 363 மட்டுமே; 1978-ல் 3,731 ஆக உயர்ந்தது (10 மடங்கு வளர்ச்சி) மொத்த தொழில்உற்பத்தி மதிப்பு 1952-ஐ விட 16.7 மடங்கு உயர்ந்து, 1978-ல் 33.9 கோடி யுவானை எட்டியது. புதிய தொழில்கள் இரும்பு, எஃகு, நிலக்கரி, மின்சாரம், பெட்ரோலியம், இயந்திரங்கள், ஜவுளி, கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட நவீன தொழில்கள் உருவாக்கப்பட்டன. விடுதலைப் படை மற்றும் சின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமானப் படையின் (XPCC) வீரர்கள், தங்கள் ஊதியத்தைச் சேமித்து, முதல் நவீன தொழிற்சாலைகளைக் கட்டுவதில் முன்னணியில் இருந்தனர்.

தானிய உற்பத்தி 1949-ல் 8.48 லட்சம் டன்னிலிருந்து 1978-ல் 37.00 லட்சம் டன்னாக உயர்ந்தது (3.4 மடங்கு வளர்ச்சி) நீர்ப்பாசன வசதிகள் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் பசுமைப் பாலைவன வேளாண்மை (Oasis agriculture) விரிவுபடுத்தப்பட்டது. இருப்புப்பாதை 1962-ல் லான்ஜோ-சின்ஜியாங் இருப்புப்பாதை உரும்கியை வந்தடைந்தது. இது சின்ஜியாங்கின் வரலாற்றில் முதல் இருப்புப்பாதை ஆகும். தொடர்ந்து, தெற்கு சின்ஜியாங் இருப்புப்பாதையின் (துர்பான்-கோர்லா பகுதி) கட்டுமானம் தொடங்கியது.

சாலைப் போக்குவரத்து நீளம் 1949-ல் 3,361 கிமீ-லிருந்து 1978-ல் பல மடங்கு விரிவடைந்து, உரும்கியை மையமாகக் கொண்ட நவீன சாலை அமைப்பு உருவானது. நகர்ப்புற குடும்பத்தலைமைக்கான (Per Capita) வருமானம்1978-ல் ஆண்டுக்கு 319 யுவான் கிராமப்புற குடும்பத்தலைமைக்கான நிகர வருமானம் 1978-ல் ஆண்டுக்கு 119 யுவான் (1949-ல், பெரும்பாலான விவசாயிகள் பட்டினியின் விளிம்பில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது). ஒரு நபருக்கான சராசரி தானிய அளவு 1949-ல் 195.62 கிலோவிலிருந்து 1978-ல் 300.09 கிலோவாகவும், ஒரு நபருக்கான சராசரி பருத்தி அளவு 1949-ல் 1.18 கிலோவிலிருந்து 1978-ல் 4.46 கிலோவாக உயர்ந்துஒரு நபருக்கான சராசரி இறைச்சி அளவு 1949-ல் 11.68 கிலோவாகவும், 1978-ல் 7.83 கிலோவாகவும் இருந்து, 1978 ஆம் ஆண்டு இந்த முப்பது ஆண்டுக் கால முன்னேற்றத்தின் உச்சக்கட்டம் மட்டுமல்ல, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிப்படையான கொள்கைகளின் தொடக்கப் புள்ளியும் ஆகும். அதன்பிறகு, சின்ஜியாங்கின் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமெடுத்தது.

– அ.பாக்கியம்

அடுத்த தொடர் மே 27 புதனன்று வெளியாகும்

Written By
Bakkiam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *