எண்ணூர் எண்ணெய் கசிவு:- ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிவாரணம் இல்லை
கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜம் புயல் வெள்ளத்தின் போது சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூரை சேர்ந்த 4 மாற்று 6 ஆம் வார்டுகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு பரிசீலிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளதாக newslaundryhttps://www.newslaundry.com/2024/01/08/chennai-oil-spill-despite-promises-no-compensation-for-thousands-of-families-allege-residents இணைய செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
வருவாய்த்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இழப்பீடு மதிப்பீட்டில், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக வார்டு கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
வெள்ள நீர் மற்றும் எண்ணெய் கசிவு ஆகிற இறந்து பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள எண்ணூரில் உள்ள 1,4,6 மற்றும் 7 ஆகிய நான்கு வார்டுகளில் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு, 7,500 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று டிசம்பர் 23 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில் ஆறாவது வார்டு கவுன்சிலர் எம் சாமுவேல் திரவியம், தனது வார்டில் சுமார் 8,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வருவாய்த் துறை அதிகாரிகள் 2,850 குடும்பங்களை மட்டுமே இழப்பீட்டுத் தொகை பெற தகுயான குடும்பங்கள் உள்ளதாக கண்டறிந்துள்ளனர் என்று The News Minute செய்தி தளத்திடம் குற்றம் சாட்டி உள்ளதை அந்த செய்தித்தளம் சுட்டி காட்டியுள்ளது.