Tamil Marx

சுற்றுச்சூழல்

சூழலின் வர்க்கம்

சூழலின் வர்க்கம்
  • PublishedJanuary 9, 2024



எண்ணூர் ஒரு மானுடவியல் சுற்றுச்சூல் பேரழிவின் சாட்சியம். எண்ணூரில் வாழும் மக்கள் அங்குள்ள கோரமண்டல் தொழிற்சாலை, அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் மூலம் நித்தம் சூழலியல் அநீதிகளுக்கு ஆளாகி வருறார்கள்.



எண்ணூரில் மூன்று துறைமுகங்களும் 38க்கும் மேற்பட்ட அதிக ஆபத்து விளைவிக்கும் சிவப்பு தொழிற்சாலைகளும் (Red Alert Industries) 5 ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளும் இங்கு செயல்பட்டு வருகின்றன. உழைத்து களைத்த மக்களுக்கு தூக்கத்தில் தான் சிறிது நிம்மதி. ஆனால் தூக்கமும் வடசென்னை மக்களுக்கு அச்சத்தை மட்டுமே தருகிறது.

தூங்கும் போது தொழிற்சாலை விபத்துக்குள்ளாகினால் என்ன செய்வது என்ற பயம் அவர்களை தொற்றியுள்ளது. அப்படித்தான் கடந்த (26/12/2023) ஆண்டு செவ்வாய்க்கிழமையும் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.



திடீரென தூக்கத்தில் இருந்த மக்களுக்கு தோல் மற்றும் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செய்வதறியாது எழுந்து வீடுகளை விட்டு வெளியே வந்தனர். தொழிற்சாலையிலிருந்து ஏதோ புகை வெளியாகிறது என்பதை உணர்ந்தனர். மக்களை மீட்க அரசு பேருந்துகள் செல்ல அந்த இரவு ஒரே பதற்ற நிலை.

கோரமண்டல உரத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் நச்சி தன்மை வாய்ந்த அமோனியா புகையாக காற்றில் கலந்ததால் இப்பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. உரத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் அமோனியா, கடல் நீரில் புதைக்கப்பட்ட குழாய்கள் வழியாக தொழிற்சாலை பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததால் வீடுகளிலிருந்து மக்கள் தெருக்களுக்கு ஓடினார்கள்.

எண்ணூரில் நடப்பது என்ன? மக்கள் சொல்வதை காண க்ளிக் செய்யவும் https://youtu.be/TIZaf5jIffo?si=eglZZVXTDxfIOOqM


சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புதன்கிழமை காலை எண்ணூரில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிறுவனம் நிறுவப்பட்டதிலிருந்தே கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதால் கோரமண்டல ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் போராடி வருகின்றனர்.

எண்ணூர் கொசஸ்தலை ஆறு வங்காள விரிகுடா, புலிகட் குளம் இணையும் கழிமுகப்பகுதி இருப்பதால் எண்ணூர் சுற்றுச்சூழல் உணர்திறன் நிறைந்த பகுதியாகும் (Bio Hotspot ), நூற்றுக்கணக்கான
கடல் உயிரினங்கள், தாயகமாக இருந்த எண்ணூர் கடல் பகுதி மற்றும் சதுப்பு நிலங்களின் சூழ்நிலை மாறி உள்ளது.

எண்ணூரில் உள்ள ஏராளமான சிற்றோடை மற்றும் குளம், கடல், அலைகள் இருந்த சூழ்நிலை மாறி ரசாயன தொழிற்சாலைகளும் பாதுகாப்பற்ற ஆபத்தான தொழிற்சாலைகளும் மாறியதால் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாற்றப்பட்டது.கடந்த 50 ஆண்டுகளாக எண்ணூர் மக்கள், வர்க்க ஏற்றத்தாழ்வுடன் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் உள்ளாகின்றனர்.



பெரிதளவான குப்பைகளையும்,தொழிற்சலைக் கழிவுகளையும் பெசண்ட் நகர், அடையார் போன்ற பணக்காரர்கள் வசிக்கும் இடத்தில் நம்மால் பார்க்க முடியாது. எண்ணூரில் வாழும் பெரும்பாலான மக்கள் தினக்கூலிகளும் மீனவர்களும் தான்.

அவர்களின் வாழ்வாதாரமும் ஆரோக்கியமும் தான் தொடர்ந்து கேள்விக்குள்ளாகிறது.
எண்ணூர் வள்ளுவர் நகரைச் சேர்ந்த திரு.சரத் கூறுகையில்,தொழிற்சாலைகளிலிருந்து தினமும் வெளிவரும் நச்சு வாயுக்களால் நிலத்தடி நீர்,நிலம், காற்று மாசுபடுகிறது. இதனால் மக்களுக்கு நுரையீரல் பாதிப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. புற்றுநோய், சுவாச நோய்கள், சிறுநீரக கற்கள் மலட்டுத்தன்மை மற்றும் பல கடுமையான உயிருக்கு ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகளால் மக்கள் அவதியுறுகின்றனர்.




தொழிற்சாலைகளுக்கு அருகில் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாடத்தை கவனிக்கமுடியாமல் நச்சுக்காற்றால் அடிக்கடி மயக்கம் அடைகின்றனர். குழந்தைகள் தெருக்களில் விளையாடும்போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதனை வெறும் உடல்நலப்பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது.

தொழிற்சாலைகளின் அலட்சியத்தால் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் ஆரோக்கியமற்றுள்ளது. எண்ணூரில் இயங்கும் தொழிற்சாலைக்கு சில கட்டுப்பாடுகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) விதித்துள்ளது ஆனால் எந்த விதிமுறைகளையும் தொழிற்சாலை கடைபிடிக்கவில்லை. இப்படி இயங்கும் தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வாரியமும் கடைப்பிடிக்குவதில்லை, கண்டுகொள்வதும் இல்லை (__). கோரமண்டல தொழிற்சாலைக்கும் சில கட்டுப்பாடுகளை TNPCB விதித்தது.



இத்தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் காற்றில் உள்ள அம்மோனியாவின் அளவு ஒரு கன மீட்டருக்கு 400 மைக்ரோகிராம்/m3 ஆக இருக்க வேண்டும்.ஆனால் அதற்கு மாறாக 2090 மைக்ரோகிaராம் இருந்துள்ளது. கடலில், 5 மி.கி./லி. என்ற விதிக்கு எதிராக, ஒரு லிட்டருக்கு 49 மில்லிகிராம் (மி.கி./லி) இருந்ததாக விபத்திற்கு பின் தொழிற்சாலையை ஆய்வு செய்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் தனது

அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது டிசம்பர் மாதத்தில் நடந்த இரண்டாவது தொழிற்சாலை விபத்து.
இந்த மாத தொடக்கத்திலேயே (டிசம்பர் 4) சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) லிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோனதுடன், மக்களின் சுகாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.



எண்ணூரின் பிரச்சனைகளை தொடர்ந்து வெளியுலகுக்கு எடுத்து வரும் சென்னை காலநிலை நடவடிக்கை குழு தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு கீழ் கேட்ட கேள்விக்கு ,” 2020- ம் ஆண்டில் 50%க்கும் அதிகமான நச்சு உமிழ்வு கண்காணிப்பு விதிமுறைகளை மீறிய நடவடிக்கைகள் குறித்து தெரிய வந்துள்ளது.
அனல்மின் நிலையங்கள் வெளியேற்றும் சாம்பல்களால் செம்பாக்கம் கிராமத்திற்கு அருகில் உள்ள குளம் நிரம்பி சாம்பல் குளமாக ( Ash pond ) ஆக மாறியுள்ளது.


இதனால் அங்குள்ள வீடுகளின் உள்ளும் வெளியிலும் , தண்ணீர் போன்றவற்றில் சாம்பல் படலங்கள் படிந்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளை இன்னும் அடிக்கிக் கொண்டே போகலாம். உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் எண்ணூர் பகுதி முழுவதும் தற்போது கார்ப்பரேட்டுகளின் சுற்றுச்சூழல் விதி மீறல்களுக்கும் சுரண்டகளுக்கும் ஆட்பட்டு உள்ளது.

கட்டுரையாளர் :- காரல் சே, இளங்கலை உயிரியல் மாணவி

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *