Tamil Marx

கட்டுரைகள்

இன்றைய இந்தியாவும் விடுதலை போராட்டமும்

இன்றைய இந்தியாவும் விடுதலை போராட்டமும்
  • PublishedAugust 15, 2022

🖋️-:) தௌ.சம்சீர் அகமது (SFI State Vice President, Tamil Nadu)

இன்றைக்கு சிலர் திடீரென தேசப்பற்று குறித்து போதனை செய்கின்றனர். தேசத்துரோகி என சான்றிதழ் வழங்குகின்றனர் பாரத் மாதகி ஜே என ஜெய் ஸ்ரீராம் என கோசம் போடச் சொல்லி அடித்து கொலை செய்கின்றனர். சிறுபான்மை மக்களிடம் தேசபற்று இல்லை என்று பாகிஸ்தான் போ என்றும் கூறுகின்றனர்.கம்யூனிஸ்டுகளை சீனக்கைகூலிகள் என்றும் கூறிகின்றனர். ஒட்டுமொத்த தேசத்திற்கும் இவர்கள்தான் அத்தாட்சி என இருமாப்பு கொள்கின்றனர் உண்மை இதுதானா ?

இந்திய விடுதலை போராட்டம் என்பது வெறும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தது மட்டும்தானா?

சரியாக 338 ஆண்டுகள் அடிமை பட்டு கிடந்த இந்தியாவில் விடுதலையின் தேவை என்ன?

பிரிட்டிஷ் வருகைக்கு முன் ஒன்றுபட்ட இந்தியா என்பது கிடையாது. அப்படியானால் சுதேசி அரசுகள் தங்கள் பகுதிகளை பிரிட்டிஷ் இடம் இருந்து மீட்பதே விடுதலை போராட்டம். அப்படி முதலில் துவங்கியது வேலூர் கலகம். திப்புசுல்தானின் வாரிசுகளால் 1806 ஜூலை 10 நடத்தப்பட்டது. அதற்கு பிறகு பல்வேறு சுதேசி அரசுகள் பிரிட்டிஷ்க்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.

இப்படி இந்திய விடுதலை போராட்டத்தை துவங்கி வைத்தவர்கள் இஸ்லாமியர்கள் அதன் தொடர்ச்சியாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற மக்களை இன்று அந்நியபடுத்துவது அநியாயம்.

கிலாபத் மாப்ளா இயக்கம் ஆங்கிலம் கற்பது ஹராம் உள்ளிட்டவை அவர்களின் போராட்டத்தின் பல்வேறு வடிவங்கள் ஆகும் . வேலூர் கலகம் துவங்கி 1857ல் நடந்த முதல் இந்திய சுதந்திரபோர் (சிப்பாய் புரட்சி) இறுதியாக கப்பற்படை புரட்சி வரை விடுதலை போராட்டங்கள் நடந்தன.

1920ல் உருவான கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவிற்கு முழுச் சுதந்திரம் தான் வேண்டும் என முழங்கியது பிரிட்டிஷ் இந்தியாவில் போட்ப்பட்ட சதி வழக்குகளில் 90 சதவீதம் கம்யூனிஸ்டுகள் மீதானது பொஷாவர்,கான்பூர்,மீரட்,பம்பாய்,சென்னை,மதுரை,நெல்லை என ஏராள சதி வழக்குகள் பிரிட்டிஷை எதிர்ப்பது மட்டுமே விடுதலை போராட்டம் என்று காங்கிரஸ் கூறி வந்தபோது சுதேசி அரசுகளின் பண்ணையடிமை முறையையும் ஒரே நேரத்தில் எதிர்த்து களமாடியவர்கள் கம்யூனிஸ்டுகள். அதன் தொடர்ச்சியாக தெலுங்கானா புரட்சி புன்னபுரா வயலாறு தேவ்பாக போராட்டம் என ஏராளம் அதே நேரத்தில் 1925 உருவான RSS இந்திய விடுதலை போரட்டத்தில் பங்கேற்பது இல்லை என்று பகிரங்கமாக அறிவித்தது. சாவர்க்கர் இந்திய விடுதலை போரட்டத்தில் அந்தமான் சிறையில் மன்னிப்பு கடிதம் எழுதி சரணாகதி அடைந்த போது பல்வேறு கம்யூனிஸ்டுகள் அந்தமான் சிறையில் மடிந்துபோனார்கள். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் விடுதலை போராட்ட வீரர்களை காட்டி கொடுத்த வாஜ்பாய் பிரதமாரானார். இப்படி விடுதலை போரட்டத்தில்

துரோகமும் சரனாகதியும் அடைந்தவர்கள் எங்கே? தீரமுடன் எதிர்கொண்ட இஸ்லாமியர்களும் கம்யூனிஸ்ட்களும் எங்கே? யார் உண்மையில் தேசத்துரோகிகள்?

இந்தியாவின் விடுதலை போராட்டம் இரத்த சரித்திரங்கள் நிறைந்தது.அதில் பெரும்பகுதி கம்யூனிஸ்ட்களுடையது இன்றும் வாழும் வரலாறு தோழர் என்.சங்கரைய்யா மதுரை சதி வழக்கின் குற்றம் சாட்டப்பட்டு 1947 ஆகஸ்ட் 14 இரவில் தான் விடுதலை செய்யபட்டவர். துரோகிகள் இந்திய தேர்தல் குளறுபடிகளை பயன்படுத்தி ஒற்றுமையை சீர்குலைத்து ஆட்சிக்கு வந்து உன்மை தேசபக்தர்களுக்கு துரோகிபட்டம் வழங்கிவருகிறார்கள்.

இதில் அதிசியம் என்ன வென்றால் 2001 வரை சங்கி கூடாரங்கள் (Rss)தேசிய கொடியை ஏற்கவில்லை.

இவர்கள் தான் இன்று காஷ்மீரில் ஒரே கொடிதான் அது தேசிய கொடிதான் என கூக்குரல் இடுகிறார்கள்.இந்திய விடுதலை இயக்கத்தில் எப்படி ஒன்றுபட்டு போராடினோமே அப்படி போராடி இந்த துரோகிகளிடமிருந்து நாட்டை காப்போம்.

இன்குலாப் ஜிந்தாபாத்!

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *