86% இந்தியர்கள் பணியிடங்களில் துன்பப்படுகின்றனர் – Gallup Report
86% இந்திய ஊழியர்கள் பணியிடங்களில் கஷ்டப்படுவதாக கூறியுள்ளனர், இது உலக சராசரியை விட அதிகம் என Gallup workplace report தெரிவித்துள்ளது.
அமெரிக்க பகுப்பாய்வு நிறுவனமான Gallup பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ‘வாழ்க்கை மதிப்பீட்டு குறியீட்டை’ கணக்கெடுத்தது. இது ஊழியர்களை மூன்று குழுக்களாக வகைப்படுத்துகிறது: செழிப்பாக (அ) வெற்றியுடன் இருத்தல், போராடுதல் மற்றும் துன்பத்தை எதிர்கொள்ளுதல்.
2024 ஆம் ஆண்டு உலகளவில் தொழிலாளர்களின் நல்வாழ்வு 34 சதவீதமாக குறைந்துள்ளது.இது கடந்த ஆண்டு 35 சதவீதமாக இருந்து. இதில் 35 வயதிற்குட்பட்ட இளைய தொழிலாளர்களே அதிகம்.
உலகளவில் 20 சதவீத தொழிலாளர்கள் தினமும் தனிமையை அனுபவிப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. ( வீட்டில் இருந்து தொலைவில் வேலை செய்பவர்களில் இது அதிகம்)
தெற்காசியாவில் இரண்டாவது பெரிய “வளர்ச்சியடைந்த” உழைக்கும் மக்கள்தொகை அதிகமுள்ள உள்ள இந்தியாவில், 86% இந்தியர்கள் தங்களுடைய பணியிடங்களில் போராடுவதாகவோ அல்லது கஷ்டப்படுவதாகவோ உணர்ந்துள்ளனர்.
இது உலக சராசரியை விட அதிகமாக இருப்பதாக 2024 Gallup State of the Global Workplace அறிக்கை கூறுகிறது.
இந்திய தொழிலாளர்களில் 14% மட்டுமே தாங்கள் செழித்து (அ) வெற்றிகரமாக வருவதாக உணர்ந்துள்ளனர். இது உலகளாவிய சராசரியான 34% ஐ விட குறைவு என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக தெற்காசியாவில் 15% தொழிலாளர்கள் மட்டுமே செழிப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மாறாக, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள 60% ஊழியர்கள் தாங்கள் செழித்து வருவதாக உணர்ந்தனர்.
பணியிட சிக்கல்கள் :
தெற்காசியாவின் சராசரியான 56% உடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் 48% தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
உலக சராசரியான 23%-ஐ விட அதிகமாக இந்திய தொழிலாளர்களில் 32% பேர் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அதில் 20% பேர் வேலையில் முழுமையாக ஈடுபடுத்தப்படவில்லை .
தொழிலாளர்களின் பணி ஈடுபாடு என்பது பணியிடத்தில் உற்பத்தித்திறன் மற்றும் தொழிலாளர்களின் வேலை செய்யும் திருப்தியை அதிகரிப்பதன் மூலம் தொழிலாளர்கள் தாங்கள் செய்த பணிகளில் உணரும் அர்ப்பணிப்பு மற்றும் உந்துதல் ஆகியவற்றைக் குறிக்கிறது.
தொழிலாளர்களுக்கு தங்கள் பணியில் அதிருப்தி மற்றும் விசுவாசமற்றவர்கள் என்ற உணர்வு சில நேரங்களில் உருவாகிறது. ஏனெனில் தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் தேவைகளை பூர்த்தி செய்யப்படவில்லை. இதற்கு தொழிலாளர்கள் தங்கள் முதலாளியின் இலக்குகளை தீவிரமாக எதிர்க்கின்றனர் என்றும் அறிக்கை கூறுகிறது.
மனநல சவால்கள் :
தொழிலாளர் நல்வாழ்வைப் பொறுத்தவரை, இந்திய தொழிலாளர்கள் தென்காசியாவின் சராசரியைப் போலவே அதிக அளவு எதிர்மறை உணர்ச்சிகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். தெற்காசியாவில், 29% தொழிலாளர்கள் தனிமையாகவும், 34% பேர் கோபமாகவும், 42% பேர் சோகமாகவும் இருக்கின்றனர். வீட்டை விட்டு தொலைதூரத்தில் பணியாற்றும் போது இந்த உணர்வுகள் உருவாகும்.16% ஆன்-சைட் தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது 25% தொலைதூர பணியாளர்கள் தனிமையை உணர்கின்றனர்.
“இந்த சதவீதம் 35 வயதிற்குட்பட்ட ஊழியர்களுக்கு அதிகமாகவும், 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு குறைவாகவும் உள்ளது” என்றும் அறிக்கை கூறுகிறது.
வேலை தேடும் இளைஞர்கள்
வேலை தேடும் இந்திய தொழிலாளர்களில் 57% பேர் வேலை வாய்ப்புச் சந்தை சாதகமாக இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த பதில் கூறியவர்கள் எண்ணிக்கை 2% ஆக குறைந்துள்ளது. இது தெற்காசிய சராசரியான 48% ஐ விட அதிகமாகும்.
எவ்வாறாயினும், இந்தியாவில் ஏற்கனவே பணியில் உள்ள 52% தொழிலாளர்கள் புதிய வேலைகளைத் தேடுகிறார்கள். இது தெற்காசிய சராசரியை விட குறைவாக உள்ளது, ஆனால் நிறுவனங்கள், முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.
” தற்போது அதிக தொழிலாளர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேற நினைக்கிறார்கள்.இந்த சூழல் முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களை மிகவும் திறம்பட ஆதரிக்க வேண்டிய முக்கியமான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வருமானத்தை குறைக்கவும் விரும்பினால் தொழிலாளர்களின் பணி-வாழ்க்கை இரண்டுக்கும் முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.” என்று Gallup இன் உலகளாவிய ஆராய்ச்சி இயக்குனர் ராஜேஷ் சீனிவாசன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்
பணியாளர் நலன் :
நல்ல உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர் குழுவை உருவாக்குவதில் முதலாளிகள் கவனம் செலுத்த வேண்டும் அதனுடன் தொழிலாளர் நல்வாழ்வை ஆதரிக்க அவர்களுக்கு சில நல திட்டங்களை கொடுக்க வேண்டும், நெகிழ்வுத்தன்மையை வழங்க வேண்டும்.
தங்கள் வேலை பிடிக்காத தொழிலாளர்கள் தினசரி மன அழுத்தம் மற்றும் கவலை உள்ளிட்ட எல்லா எதிர்மறை உணர்ச்சிகளையும் அதிகமாக கொண்டுள்ளனர் என்று ராஜேஷ் சீனிவாசன் கூறியுள்ளார்.
தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் உருவாகும் அதிருப்தியை நிவர்த்தி செய்வது அவர்களுடைய மன அழுத்தம் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகளைக் குறைக்கும் அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த பணியாளர்களின் திருப்தி மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தும்.
தொழிலாளர்களின் வாழ்க்கை மதிப்பீட்டில் அவர்களை ஊக்குவிப்பதை புறக்கணிக்காமல் தொழிலாளர்கள் நல்வாழ்வை ஆதரிக்க முதலாளிகள் பொருத்தமான நல திட்ட உதவிகளையும், நெகிழ்வுத்தன்மையை வழங்க வேண்டும். மேலும் நல்ல உற்பத்தி செய்யக்கூடிய உயர் செயல்திறன் கொண்ட தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதும் அவசியமாகும்.
தோழர் பாலா