சீனா தனது HRE (Heavy rare Earth Element) எனப்படும் அரிய வகை கனிம ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீண்டும் விரிவுபடுத்தியுள்ளது.
உலகின் அரிய வகை கனிம உற்பத்தில் 90 % சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. மின்சார வாகனங்கள் முதல் விமான இயந்திரங்கள் மற்றும் இராணுவ ரேடார்கள் வரையிலான தயாரிப்புகளில் 17 அரிய வகை கனிமங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் காந்தங்கள் முக்கிய கச்சா பொருளாக பயன்படுத்த படுகிறது. இதில் 8 வகை கனிம ஏற்றுமதிக்கு ஏற்கனவே சீனா தடை விதித்திருந்தது. தற்போது ஹோல்மியம், எர்பியம், துலியம், யூரோபியம் மற்றும் யெட்டர்பியம் ஆகிய ஐந்து பொருட்களை அமைச்சகம் சேர்த்த பிறகு அது 12 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவிற்கு எலக்ட்ரானிக்ஸ் சிப் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை செவ்வாயன்று அமெரிக்கா அழைத்து புதிய ஏற்றுமதி தடைகளை பற்றி விவாதித்து இருந்தது. இதற்க்கு பதிலடியாகவும் அடுத்த மாதம் கொரியாவில் நடைபெறும் டிரம்ப் – ஜி ஜிங் பின் சந்திப்பின் முன்னேற்பாடாக இந்த தடையை சீனா அறிவித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனா விதித்த தடையை தொடந்து அரியவகை கனிம உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபடும் China Northern Rare Earth Group, China Rare Earth Resources and Technology மற்றும் Shenghen Resources பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. அதே நேரத்தில் நியூயார்க்கை தளமாகக் கொண்ட அரியவகை கனிம உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபடும் Critical Metals Corp, Energy Fuels, MP Materials மற்றும் USA Rare Earth பங்குகள் விலை உயர்ந்தன.
அமெரிக்க நிறுனவங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் உற்பத்தி மற்றும் சந்தையை விரிவுபடுத்தும் வேலையில் இறங்கியிருக்கின்றன. ஆனால் 90% உற்பத்தியை சீன நிறுவனங்கள் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதால் அமெரிக்க நிறுவனங்களின் சந்தை விரிவாக்கத்திக்கான பாதை மிக நீண்டதாக இருக்கும்.
இந்திய ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் ஏற்கனவே இந்த தடையினால் மிகவும் பாதிக்கட்டிருந்தன. முக்கியமாக EV துறையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. EV துறையில் பயன்படுத்தப் படும் காந்தங்களுக்கு இந்தியாவை சார்ந்த நிறுவனங்கள் முற்றிலுமாக சீன நிறுவனங்களை சார்ந்தே இருந்தது.
சமீபத்தில் இந்தியா ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரில் Kachin Independence Army (KIA) உடன் அரியவகை கனிம உற்பத்திக்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த அரியவகை கனிமங்கள் உற்பத்தி மற்றும் கச்சா பொருட்கள் தயாரிப்பில் இந்தியா உலக அரங்கில் மிகவும் பின்தங்கி இருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.
-ஹம்முராபி