Tamil Marx

சர்வதேசம்

உலகின் தேவைக்கும் அதிகமான உணவு உற்பத்தி நடந்துள்ளது ஆனால் மக்கள் கொடும் வறுமையில் உள்ளனர் ஏன்?

உலகின் தேவைக்கும் அதிகமான உணவு உற்பத்தி நடந்துள்ளது ஆனால் மக்கள் கொடும் வறுமையில் உள்ளனர் ஏன்?
  • PublishedJune 6, 2025

உலகளவில் பசியால் துன்பப்படும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.

இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உணவின் அளவு கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது.

உலகில் உள்ள மொத்த மக்களுக்கும் உணவளிக்க போதுமான உணவை விடவும் அதிகமான உணவு உள்ளது.

அப்படி இருந்தும் மக்கள் ஏன் பசியால் அவதிப்படுகிறார்கள் என்பதை நாம் எவ்வாறு விளக்குவது?

தரவுகளை பார்க்கலாம்.

ஒன்று : உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), உலக உணவு திட்டம், உலக சுகாதார அமைப்பு, சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் ஆய்வுகளின்படி, 2023 இல் 733 மில்லியன் மக்கள் நாள்பட்ட பசியை எதிர்கொண்டனர்.

இரண்டு : உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிக்கையின்படி, உலகளவில் விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிற உற்பத்தியாளர்கள் 2022 இல் 11 பில்லியன் மெட்ரிக் டன் உணவை (இறைச்சி, மீன் உட்பட மற்றும் 9.6 பில்லியன் மெட்ரிக் டன் முதன்மை பயிர்கள் – சோளம், அரிசி, கோதுமை போன்றவை) உற்பத்தி செய்தனர்.

மூன்று : ஒரு நபர் ஆண்டுக்கு ஒரு டன் அல்லது 1,000 கிலோகிராம் உணவு உண்கிறார் (உலகளாவிய சராசரி உணவு நுகர்வுக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரநிலை படி ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2,800 கிலோகலோரிகள் தேவை).

ஒரு நபருக்கு ஒரு டன் உணவு தேவைப்படுகிறது, இதே நேரத்தில் 1 பில்லியன் டன் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. இது பதினொரு பில்லியன் மக்களுக்கு போதுமானதாக உள்ளது.

தற்போது பூமியில் எட்டு பில்லியன் மக்கள் உள்ளனர். எனவே, அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு உள்ளது. அதே நேரத்தில் கூடுதலாக மூன்று பில்லியன் மக்களுக்கும் சேர்த்து உணவளிக்கும் அளவிற்கு உபரி உணவும் உள்ளது.

நான்கு : இப்படி உபரி உணவு உற்பத்தி இருந்தும் மக்கள் ஏன் பசியால் துன்பப்படுகிறார்கள் என்பதை நாம் எவ்வாறு விளக்குவது?

இந்த கொடுமையான பசிக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் இந்த துனப்திர்க்கு மக்கள்தொகை வளர்ச்சியால் ஏற்படும் உணவு பற்றாக்குறை தான் காரணம் என கூற முடியாது. மால்தூசியன் பொருளாதாரவாதிகள் நம்புவது போல மக்கள்தொகை வளர்ச்சி உணவு உற்பத்தியை விட அதிகமாக உள்ளது என அவர்கள் நம்புவார்கள். உலகின் பல பகுதிகளில் பஞ்சம் நீடிப்பதற்கு குறைந்தபட்சம் மூன்று காரணங்கள் உள்ளன.

1. போர்கள் விவசாய மற்றும் உணவு விநியோக முறைகளை அழிக்கின்றன

இது தீவிரமான வறுமைக்கும் பசிக்கும் மிக வெளிப்படையான காரணமாகும். சூடானில் பஞ்சம் நிலவுவதற்கு இதுவே காரணமாகும். ஆப்பிரிக்கா நாடுகளிலேயே விவசாயம் செய்ய அதிக நிலம் கொண்ட நாடாக சூடான் உள்ளது. உள்நாட்டுப் போர் இல்லை என்றால் ஆப்பிரிக்காவின் தானிய களஞ்சியமாக திகலக்கூடிய நாடு தான் சூடான். போர் நடக்கும் போதிலும், நிலக்கடலை, எள், சோயாபீன், சூரியகாந்தி சூடான் எண்ணெய் விதைகளின் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. உலகின் 80 பசை அரபிக் சூடானின் கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் உள்நாட்டு போரின் காரணமாக இந்த விவசாயத்தை பராமரிக்க முடியவில்லை, பல விவசாயிகள் போரின் காரணமாக நிலத்தை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று அல்லது துப்பாக்கி எடுத்துக்கொண்டு போரில் ஈடுபட வேண்டியதாயிற்று.

2. வீணாக்கப்படும் உணவுகள் 

மொத்த உணவில் ஐந்தில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது அல்லது வீணாக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பில்லியன் அளவுக்கு உணவுகள் வீணாக்கப்படுகின்றது. சாப்பிடும் போது வீணாக்கப்படும் உணவில் மூன்றில் இரண்டு பங்கு பணக்கார நாடுகளில் நடக்கிறது. உலகளவில் உணவை வீனக்குவதில் 60 சதவீதம் வீடுகளில் நடைபெறுகிறது.

பணக்கார நாடுகளில், பெரும்பாலான உணவு வீணாக்கம் சில்லறை விற்பனை உணவு நிலையங்களிலும் நுகர்வோரிடமும் நடக்கிறது. முக்கியமாக உணவு பதப்படுத்துதல், பேக்கேஜிங், வீடுகள் மற்றும் உணவகங்களில் தட்டில் மிஞ்சும் உணவு என அதிக உணவுகள் வீணாக்கப்படுகின்றது. ஏழை நாடுகளில், உற்பத்தி நிலையிலேயே பெரும்பாலான உணவுகள் வீணாகிவிடுகின்றன. உதாரணமாக மோசமான வானிலை, பூச்சிகள் மற்றும் நோய் காரணமாக விவசாய நிலங்ககளில் உணவு பயிர்கள் பாதிக்கப்படுவது.

போதுமான குளிர்சாதன வசதி இல்லாத போதிய வசதிகள் இல்லாத சேமிப்புக்கிடங்குகள் மற்றும் திறமையற்ற போக்குவரத்து அமைப்புகளால் உணவு பொருட்கள வீணாகின்றது.

3. மக்கள் உண்ணாததற்கான காரணம் அவர்களிடம் காசில்லை 

இதை வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், சமத்துவமின்மை. இதுவே பசியை தூண்டும் இயந்திரமாக உள்ளது.

உலகில் 70 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு 183 ரூபாய்க்கும் (2.15 டாலர்கள் ) குறைவான பணத்தில் வாழ்கின்றனர். இவர்களால் போதிய சத்தான உணவை வாங்க முடியவில்லை.

100 கோடிக்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு 459 ரூபாய்க்கும் ($5.50) குறைவான சம்பளத்திலேயே வாழ்கின்றனர். இந்த குறைந்த ஊதியம் அம்மக்கள் ஆரோகியமான உணவை சாப்பிட முடியாத நிலையை உருவாக்குகிறது.

2023 இல், உலகின் மொத்த செல்வம் சுமார் 432 டிரில்லியன் டாலர். இதில், உலக மக்கள் தொகையின் முதல் 1 சதவீதத்தினர் மொத்தமாகவே உலகின் மொத்த செல்வத்தில் 47.5 சதவீதம் அல்லது 213.8 டிரில்லியன் டாலர்கள் அதாவது சராசரியாக ஒரு நபருக்கு 2.7 மில்லியன் டாலர்கள் வைத்திருந்தனர். கீழே உள்ள 50 சதவீதத்தினர் அல்லது 400 கோடி மக்கள் ஒட்டுமொத்த உலக செல்வத்தில் 1 சதவீதத்துக்கும் குறைவான 4.5 டிரில்லியன் டாலர்கள் மட்டுமே வைத்திருந்தனர். இத்தகைய செல்வ சமத்துவமின்மையின் பெரிய இடைவெளி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறைந்த வருமானம் உள்ளவர்கள் உணவு மற்றும் எரிபொருள் விலை பணவீக்கம் அவர்களின் ஊதியத்தை விழுங்குவதால் போதிய சத்தான உணவை சாப்பிட முடியவில்லை.

பெண்களிடையே பட்டினி விகிதங்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளன, ஏனெனில் வீட்டில் உணவு குறைவாக இருக்கும்போது, பெண்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். மேலும் பெண்கள் தலைமையில் இயங்கும் குடும்பங்களில் பட்டினி விகிதங்கள் அதிகமாக உள்ளன.

பழங்குடி மக்கள் உலக மக்கள்தொகையில் 5 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தாலும், தீவிர வறுமையை எதிர்கொள்ளும் மக்களில் அவர்கள் சுமார் 15 சதவீதம் உள்ளார்கள். அது மட்டுமல்ல பிற சமூகத்தை விட பழங்குடி மக்கள் அதிக வறுமை விகிதங்களை அனுபவிக்கின்றனர்.

‘உலகளவில் உணவு பாதுகாப்பின்மைக்கு வறுமை முக்கிய காரணமாக உள்ளது என 2021 இல் உணவு மற்றும் விவசாய அமைப்பு கூறியது. ஏனெனில் மக்களிடம் போதுமான உணவு கிடைக்கும்போது கூட அதை அணுக அவர்களிடம் பொருளாதாரம் இல்லை’.

பசியை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானால், வறுமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 2021 இல், சீன மக்கள் தங்கள் நாட்டில் முழுமையான தீவிர வறுமையை முடிவுக்கு கொண்டுவந்தனர். நவம்பர் 2025க்குள், இந்தியாவின் கேரள இடதுசாரி அரசு மக்களிடையே உள்ள தீவிர வறுமையை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்கள். வியட்நாம் வறுமையை முழுமையாக ஒழிக்கும் பாதையில் உள்ளது.

இது புர்கினா பாசோவின் ஜனாதிபதியாக இருந்த தாமஸ் சங்காராவின் லட்சியமாகவும் இருந்தது. தற்போது அந்நாட்டின் புதிய தலைவர் கேப்டன் இப்ராஹிம் தரோரின் தலைமையில் தீவிர வறுமை ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது தொண்டு நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு உதவி மூலம் அல்ல சுய நம்பிக்கை, நாட்டின் சொந்த வளர்ச்சியின் மூலம் ஒழிப்பது. 1986 ஏப்ரல் 4 அன்று புரட்சி பாதுகாப்பு குழுக்களின் தேசிய மாநாட்டில் தாமஸ் சங்காரா “நாம் உற்பத்தியை அதிகரிப்பதில் வெற்றிபெற வேண்டும். அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். ஏனெனில் உங்களுக்கு உணவளிப்பவர் தனது விருப்பத்தையும் திணிப்பது இயற்கையானது” என அறிவித்தார்.

தாமஸ் சங்கராவின் உணர்ச்சி மிக்க ஆன்மாவையும், அவரது இலட்சியத்தையும் தட்டி எழுப்பி 2023 இல் இப்ராஹிம் தரோர் பேசினார்,

எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு ஒரு பாடம் கற்பித்துள்ளனர், தன்னுடைய கிளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத அடிமைக்கு இரக்கம் காட்ட வேண்டியதில்லை. நாங்கள் எங்களுக்காக வருத்தப்படவில்லை, எங்களுக்காக இரக்கம் கட்டுங்கள் என யாரையும் கேட்கவில்லை. புர்கினா பாசோ மக்கள் போராட முடிவு செய்துள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடி, தங்கள் வளர்ச்சியை மீண்டும் தொடங்குவதற்கான போராட்டம்!”

“ஆப்பிரிக்காவில் இவ்வளவு செல்வம் இருக்கிறது, இயற்கை கருணை காட்டும், தண்ணீர், சூரிய ஒளி வெயில் எல்லாம் நிறைய இருக்கிறது. ஆனாலும் ஏன் இன்றும் ஆப்பிரிக்கா ஏழ்மையான கண்டமாக இருக்கிறது? ஆப்பிரிக்கா ஏன் வறுமை நிறைந்த கண்டமாக உள்ளது. உலகம் முழுவதும் ஏன் ஆப்பிரிக்க தலைவர்கள் பிச்சை எடுக்கிறார்கள்? இதுதான் ஆப்பிரிக்க மக்கள் கேட்கும் கேள்விகள். ஆனால் இதுவரை எங்களுக்கு பதில்கள் கிடைக்கவில்லை”

ஆனால் விரைவில் அவர்களுக்கு பதில்கள் கிடைக்கும். பதில்கள் கிடைத்தவுடன், புதிய கேள்விகளை மக்கள் எழுப்புவார்கள். அப்போது வரலாறு முன்னேறும்.

விஜய் பிரசாத்

 

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *