Tamil Marx

சர்வதேச அமைப்புகள்

வங்கதேச ஆட்சிக்கவிழ்ப்பில் அமெரிக்காவின் சதி வேலைகள் ?

வங்கதேச ஆட்சிக்கவிழ்ப்பில் அமெரிக்காவின் சதி வேலைகள் ?
  • PublishedAugust 11, 2024

வங்கதேசத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகளில் ( intellectuals) ஒரு பிரிவினர், வங்கதேச போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் சிலர் அமெரிக்காவைச் சேர்ந்த சில குழுக்களின் வழிகாட்டுதலில் செயல்படும் அமைப்புகள் மூலம் நாட்டில் சீர்குலைவை ஏற்படுத்த தீவீரப் பயிற்சியும், செயல்முறையையும் பெற்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்தை எப்படி ஏற்படுத்துவது என்பதற்கும் அவர்கள் அமெரிக்க குழுக்களிடம் பயிற்சி பெற்றதாக புதிய – அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களில் நடந் தவை அனைத்தும், ஆட்சி மாற்றத்துக்காக நீண்ட நாட்களாக திட்டம் தீட்டி வந்த அமெரிக்காவின் உதவியுடன் செயல் முறைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளே ஆகும். நாங்கள் அதனை ‘வங்காள வசந்தம்’ எனக் கூறு கிறோம். இதன் மூலம் மாணவர்கள் தீவிர சீர்குலைவு இலக்குகளைக் கொண்ட குழுக்களுடன் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். வாசகர் வட்டங்கள் மூலம் ஆட்சிமாற்றம் பற்றிய பயிற்சி அவர்கள் பெற்றனர்” என பேராசிரியர் நசுமுல் ஆஷான் கலிமுல்லா கூறியுள்ளார்.

இப்படி ஒரு சூழல் உருவாகிறது என்பதை இந்தியாவால் கணிக்க முடியவில்லை. எனவே இந்தியாவும் ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்பார்க்கவில்லை.

இந்த குழு நடவடிக்கைகளின் பின்னால் ஜமாயத்-இ-இஸ்லாமி மற்றும் பங்களாதேஷ் தேசிய கட்சியின் ஊழியர்கள் இருந்தனர். , வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்துக்காக பல செயல்களை அமெரிக்கா அரங்கேற்றியது.

இதற்காக ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்த மனித உரிமை மீறல் பிரச்சனைகளைப்பற்றி அமெரிக்கா தொடர்ந்து பேசியது; வங்கதேசத்தில் இருந்து வரும் மக்களுக்கு விசா கொடுப்பதை அமெரிக்கா குறைத்தது; கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஏராளமான அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் வங்கதேசத்திற்கு வந்துள்ளனர்.

“இஸ்லாமிய சாத்ரா ஷிபீர் மற்றும் ஜமாயத்-இ- இஸ்லாமி ஆகிய அமைப்புகள் சீர்குலைவு சதி வேலைகளை செய்கின்றன என் ஷேக் ஹசீனா அரசு அவ்வமைப்புகளை தடை செய்தது. இந்தத் தடைகள் எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்த செய்தன. பல எதிர்க்கட்சிகளின் மாணவர் அமைப்புகள், எதிர்ப்பு இயக்கத்துக்கு ஆதரவளித்தன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரதமரின் இல்லத்தை முற்றுகையிட்ட பொழுது ராணுவத்தின் உதவி இல்லாததால் ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்று பேராசிரியர் கலிமுல்லா தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமாகும் வகையில் ராணுவம் செயல்பட்டது. உலகின் பல பகுதிகளில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்சிகளை சீர்குலைத்து மாற்றுவதில் நிபுணத்துவம் பெற்ற டொனால்டு லூ எனும் தூதரக அதிகாரி அடிக்கடி வங்கதேசத்திற்கு வந்தார். ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் என இரு தரப்பினரையும் சந்தித்தார். தனது கடந்த பயணத்தின் பொழுது மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பு தலைவர்களையும் அவர் சந்தித்து இந்த சீர்குலைவு கலகத்திற்கு அவர் வித்திட்டார் என இன்னொரு பேராசிரியர் கூறியுள்ளார்.

“இப்படி ஒரு அரசியல் புயல் உருவாகி வருகிறது என்பதை இந்தியாவால் கணிக்க இயலவில்லை. ஏனெனில் இந்திய நிர்வாகம் ஷேக் ஹசீனா வின் அவாமி லீக் கட்சியின் மதிப்பீடை மட்டுமே சார்ந்திருந்தது.அதை தானடி என்ன நடக்கிறது என்பதை அவர்கள் கவனிக்கவில்லை.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ (ISI) அமைப்பும் இந்தியாவுக்கு எதிராக பின்னணியில் செயல்பட்டு கொண்டிருந்தது. ஹிசபுர்-தாஹி ரிர் எனும் அடிப்படைவாத அமைப்பின் செல்வாக்கு ராணுவத்தினரிடையே ஆழமாக இருந்தது. ராணுவ முதன்மை அதிகாரி, ஆட்சி மாற்றம் குறித்து பேட்டி கொடுத்தபோது இந்த அமைப்பின் பெயரையே முதலில் கூறினார்” என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் பேராசிரியர் கலிமுல்லா.

கிட்டத்தட்ட இடைக்கால அரசின் உறுப்பினர்கள் அனைவருமே அமெரிக்காவுடன் நேரடி தொடர்பில் உள்ள னர். இந்த அரசில் இணைய அழைப்பு விடுக்கப்பட்ட ஒரே இந்து- பிதாய் ரஞ்சன் ரே! ஆனால் இவர் பதவியேற்பின் பொழுது கலந்துகொள்ளவில்லை. அவர் அமைச்சரவையில் பங்கேற்பாரா என்பதும் உறுதியாக தெரியவில்லை.

கலவரத்தில் சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. சில இடங்களில் சிறைகளுக்குள்ளே கலகம் நடந்துள்ளது. சிட்ட காங்க் சிறையில் நடந்த கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியுள்ளார். தற்சமயம் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் அவரது அரசியல் இலக்கு இன்னும் உயிரோடு உள்ளது.

பாரம்பரியமாக வங்கதேசம் மதச்சார்பின்மை அரசியலமைப்பை கொண்டுள்ளது. இந்தக் கோட்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. பன்முகத் தன்மையை வங்கதேசம் ஊக்குவித்துள்ளது. ஆனால் இடைக்கால அரசின் பதவியேற்பு விழா இதனை பிரதிபலிப்பதாக இல்லை.

ஆனால், “பதவியேற்பை வைத்து, பன்முகத்தன்மை இனி இருக்காது என்ற அச்சம் தேவையில்லை. பன்முகத்தன்மை தொடரும் என்றே நம்புகிறோம்” என ஒரு கல்வியாளர் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசில் மாணவர் பிரதிநிதிகள் இணைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இடைக்கால அரசு சரியான திசை வழியில் செல்வதை மாணவ பிரதிநிதிகள் உத்தரவாதம் செய்வார்கள் என நம்புவதாகவும், மாணவர்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகளுக்கான எல்லைக்குள் புதிய அரசு இருப்பதை மாணவர்கள் உறுதி செய்வார்கள் என நம்புவதாகவும் அந்த கல்வியாளர் தெரிவித்துள்ளார்.

புதிய இடைக்கால அரசில் உள்ள பலரும் அரசு நிர்வாக அனுபவம் இல்லாத துறைகளிலிருந்து வந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு பொருத்தமான தேவையான திறமைகள் தேவைப்படுகின்றன. தேசத்தை சீர்திருத்தம் செய்ய ஏராளமான பணிகள் செய்ய வேண்டியுள்ளது எனப்து குறிப்பித்தக்கது.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *