Tamil Marx

தென் அமெரிக்கா

இடதுசாரி தலைமையிலான வெனிசுலாவை திட்டமிட்டு மறைக்கும்  ஊடகங்கள்

இடதுசாரி தலைமையிலான வெனிசுலாவை திட்டமிட்டு மறைக்கும்  ஊடகங்கள்
  • PublishedJuly 24, 2024

இடதுசாரி ஜனாதிபதி மதுரோ வழிநடத்தும் வெனிசுலா நாட்டின் உண்மை நிலையை உலகிற்கு சொல்லாமல் ஊடகங்கள் மூடி மறைத்து வருகின்றன. இதனை மதுரோவே வெளிப்படையாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார்.

வெனிசுலா ஜனாதிபதி தேர்தல் ஜூலை 28 அன்று நடைபெற உள்ள நிலையில் தற்போது அர்ஜெண்டினாவில் அமெரிக்க அடிவருடியான ஜேவியர் மிலேயை ஆட்சியில் அமர வைத்தது போல வெனிசுலாவில் இடதுசாரி ஜனாதிபதி மதுராவை வீழ்த்திவிட்டு  வலதுசாரிகளை ஆட்சியில் அமர வைக்க அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.

அந்நாட்டின் தச்சிரா என்ற மாநிலத்தில் நடைபெற்ற  வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தின் போது இதனை மதுரோ குறிப்பிட்டுள்ளார்.


நம்மை பற்றி யாருக்கும் தெரியக்கூடாது எனவும் நம்மை உலகின் கண் முன் இருந்து மூடி மறைக்கவும் ஆயிரம் முறை முதலாளித்துவ ஊடகங்கள் முயன்றிருக்கிறன. இப்போதும் கூட மூடி மறைப்பு வேலைகளை செய்வதுடன் பொய்களை அள்ளி வீசும்  கூலிப்படையாகவும் அவை செயல் படுகின்றன.


இஎப்இ ( EFE ) என்ற ஸ்பெயின் செய்தி நிறுவனம், ஏஃப்பி (AFP ) என்ற பிரான்ஸ் செய்தி நிறுவனம்,  ஏபி ( AP ) செய்தி நிறுவனம், அமெரிக்காவின் சிஎன்என் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ளன. ஆனால் அவர்கள் நம்முடைய எதார்தத்தை காட்டுவது இல்லை.

இத்தகைய செய்தி நிறுவனங்களின் நோக்கம் என்ன என்பது வெனிசுலா அரசுக்கு தெரியும். அவர்கள் நோக்கம் என்னவாக இருந்தாலும் இறுதியில் வெற்றி பெறப் போவது வெனிசுலா மக்களும், குடிமை-சமூகமும்தான்.

நாம் சிறந்த அமைப்பாக ஒன்றிணைவோம் .நமது  தேர்தல் நடைமுறையில் யாரும் தவறு செய்ய மாட்டார்கள். அவ்வாறு தவறு செய்ய முயன்றாலும் அவர்களை நான் அனுமதிக்க மாட்டேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அர்ஜெண்டினாவின் ஆட்சியை மாற்றி வலது சாரி அடிவருடியான ஜேவியர் மிலேயை ஜனாதிபதியாக மாற்றி அவர் மூலமாக மக்கள் நல திட்டங்களுக்கும் பொது முதலீடுகளுக்குமான  நிதி ஒதுக்கீடுகளை வெட்டிக்கொண்டே தற்போது இந்த முதலாளித்துவ அடிவருடிகள் வெனிசுலாவையும் அவ்வாறு மாற்ற திட்டமிடுகிறார்கள்.

ஜேவியர் மிலேயின் கொள்கை அந்நாட்டின் பல்வேறு அரசுத் துறைகளை தனியார்மயமாக்கியுள்ளது. அந்த தீவிர வலதுசாரி ஜனாதிபதி செய்தது போல், வெளிநாட்டு மூலதனத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) நமது வெனிசுலாவின் பொருளாதாரத்தை விட்டுக்கொடுக்க விரும்புகிறீர்களா ?  வெனிசுலா மக்களின் உரிமையை பாதுகாக்க எனக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

வலதுசாரிக் கொள்கை என்பது “ஐஎம்எஃப்-க்கு அடிபணிந்து மண்டியிடுவது. ஒரு ஆதிக்க சக்தியிடம் மண்டியிட்டு  காலனியாக மாறுவதுதான் வெனிசுலாவின் நோக்கமா? என மக்களிடம் கேள்விகள் எழுப்பிய அவர்.
வெனிசுலாவில் ஒரு உள்நாட்டுப் போரை  தவிர்த்துள்ளதையும் குறிப்பிட்டார்.

ஏகாதிபத்தியவாதிகள்  என்னை 100 முறை கொலை செய்ய  முயன்றனர்.நமது  நாட்டிற்கு எதிராக 930 தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.ஆனாலும் நாம்  வரலாற்றின்ஸ் சரியான  பக்கத்தில் நிற்கிறோம் என பேசியுள்ளார்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *