Tamil Marx

தமிழ் நாடு

காலை உணவு திட்டத்தை ஒரே வருடத்தில் தனியார் மயமாகியது திமுக அரசு

காலை உணவு திட்டத்தை ஒரே வருடத்தில் தனியார் மயமாகியது திமுக அரசு
  • PublishedNovember 29, 2023

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது திமுக தலைமையிலான சென்னை மாநகராட்சி.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி காலை உணவு சிற்றுண்டி திட்டமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செய்லபடுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக ஆண்டுக்கு சுமார் 33.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

417 மாநகராட்சி பள்ளிகள், 163 நகராட்சி பள்ளிகள், 728 ஊராட்சி பள்ளிகள், 237 மலைவாழ் பகுதி அரசு பள்ளிகள் என மொத்தமாக சுமார் 1 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பலனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட பகுதியில் 328 அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்ட இந்த திட்டத்தை தற்போது சென்னையில் மட்டும் தனியார் வசம் செல்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது திமுக அரசு.

இனி இந்த திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் தனியார்மயம் செய்யப்பட மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும் ஆர்எஸ்எஸ் பாஜக தொடர்புடைய அட்சய பாத்திரம் உள்ளிட்ட பல தொண்டு நிறுவனங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கான உணவுத் திட்டத்தின் மூலம் கல்வி நிலையங்களுக்குள் புகுந்து வருகின்றன.

புதுச்சேரியில் மதிய உணவுத் திட்டத்தில் இந்த அட்சய பாத்திரம் கொண்டு நிறுவனம் இணைந்தது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக அரசு எடுத்துள்ள இந்த முடிவிற்கு இடதுசாரி அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


இந்த தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *