Tamil Marx

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் சர்வதேசம்

சமூக ஊடக பிரபலங்களுக்கு பணம் கொடுக்கும் இஸ்ரேல்

  • PublishedOctober 27, 2023


ஹமாஸ் உடனான போர் துவங்கியதில் இருந்து இஸ்ரே லின் போர்க்குற்றங்களை மறைத்து பாலஸ்தீனத்திற்கு எதிராக போலிச் செய்தி களை சமூக ஊடகத்தில் பரப்பிட, சமூக ஊடக பிரபலங்களுக்கு இஸ்ரேலின் ‘டிஜிட்டல் ஆர்மி’ பணம் கொடுத்து வருவது அம்பலமாகியுள்ளது.

இதற்காக சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்தி வரும் (Media Influencers ) கணக்குகளுக்கு இஸ்ரேல் சார்பில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் மற்றும் மெசேஜ்களின் ஸ்கிரீன் ஷாட் (screen shot) வெளியிட்டு பலர் இஸ்ரேலின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி யுள்ளனர். ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவம் போர் அறிவித்து, காசா பகுதியை முற்றுகையிட்டு பாலஸ்தீனர்களின் வீடுகள், அவர்கள் பாதுகாப்பு தேடி தஞ்சம் புகுந்த மருத்துவமனைகள், தேவாலயங்கள், மசூதிகள், ஆம்புலன்ஸ் என அனைத்து பகுதிகளிலும் குண்டுகளை வீசி அழித்து வருகிறது. மேலும் பாலஸ்தீனர்களுக்கு அத்தியா வசியமான மின்சாரம், எரிபொருள், உணவு, குடிநீர், மருத்துவப் பொருட் களை தடுத்து சர்வதேச மனிதாபிமான மரபு களை மீறி, கொடூரமான போர்க்குற்றங் களில் ஈடுபட்டு வருகிறது

இஸ்ரேல். உலகிற்கு கதை சொல்லும் போர் இந்த போர் குற்றங்களை மறைத்து இஸ்ரேலின் பக்கம் உலக மக்களின் அனு தாபங்களைத் திருப்ப வேண்டும் என்பதற் காகவும் இஸ்ரேல் செய்து வரும் அனைத்து போர்க்குற்றங்களை நியாயப் படுத்தவும் போலி பிரச்சாரங்களை மேற் கொள்வதற்காக, உலகளவில் சமூக ஊடகத்தில் அதிக செல்வாக்கு செலுத்தி வரும் நபர்களை அணுகி அவர்கள் மூலம் பல போலி செய்திகளை பரப்பிவருகிறது.

அப்படி போலிப் பிரச்சாரத்திற்காக அணுகும் நோக்குடன் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில் ஒன்று கசிந்துள்ளது. கசிந்த அந்த மின்னஞ்சலை அம்பலப் படுத்தியவர்கள், “உங்களுக்குத் தெரியும், இஸ்ரேல் மக்கள் தற்போது உள்நாட்டில் ஹமாஸ்க்கு எதிரான போரை மட்டுமல்ல, உலகிற்கு கதை சொல்லும் போரையும் நடத்துகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் போலிப் பிரச்சாரக் குழு #HAMASisISIS மற்றும் #StandWithIsrael என்ற ஹேஷ்டேக்குகளுடன் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் எனவும் கிம் கர்தாஷியன், மடோனா, கேல் கடோட், கேசி நீஸ்டாட் மற்றும் பல பிரபலங்கள் ஏற்கனவே சேர்ந்துள்ள னர் எனத் தெரிய வந்துள்ளது. ஹமாஸை பயங்கரவாதிகளாகவும், இஸ்ரேலில் 40 குழந்தைகளின் தலையை கொய்து ஹமாஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளனர் என்றும் போர் துவங்கிய போது பொய் பிரச்சாரத்தை பரப்பியது இவர்கள்தான்.

பிரபலங்களின் குற்றச்சாட்டு இந்நிலையில் சில சமூக ஊடகப் பிர பலங்கள், இஸ்ரேலை அம்பலப்படுத்தியும் உள்ளனர். சாரா வாட்சன் என்பவர்,

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தனது டிக் டாக் (TikTok) பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என இஸ்ரேலிய அரசு தன்னை அணுகி வற்புறுத்திய தாகவும், அதற்காக லஞ்சம் கொடுக்க முன் வந்ததாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “நீங்கள் நினைப்பது நடக்காது, என் ஒழுக்கத்தை உங்களால் விலைக்கு வாங்க முடியாது” என அவர் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் இன்ஸ்டாகிராமில் பாலஸ்தீன மக்க ளுக்கு ஆதரவாகப் பதிவிட்ட பதிவை நீக்கு மாறும் கூறப்பட்டுள்ளது. அதற்காகவும் ஒரு பெரிய தொகையை பேரம் பேசியதாகவும் அதையும் தான் மறுத்துவிட்டதாகவும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சுலைமான் அகமது என்ற மற்றொரு சமூக ஊடக பிரபலம், இஸ்ரேல் அரசு சமூக ஊடகத்தில் செல்வாக்கு செலுத்து பவர்களுக்கு ஒவ்வொரு வீடியோவிற்கும் கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் ($ 1,000) செலுத்துகிறது என்பதை வெளிப்படுத்தி யுள்ளார். “இது தகவல்களை கட்டுப்படுத்தி உண்மைகளை திரிப்பதாகும்; அமெரிக்கா வைப் போலவே உலகில் உள்ள மக்களுக்கு நீங்கள் செய்யும் கொடூரமான விஷயங்களை நியாயப்படுத்துவது” என்று அவர் இஸ்ரேலின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நன்றி

தீக்கதிர்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *