Tamil Marx

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் சர்வதேசம்

பாலஸ்தீன் மீதான போர்; அமெரிக்காவின் திட்டம் தான்

  • PublishedOctober 16, 2023


வர்க்கங்களுக்கு இடையேயும் நாடுகளுக்கு இடையேயும் நடைபெறும் போர்களை பொருளாதாரப் பின்னணியில் நாம் பார்க்க வேண்டும் என மார்க்சிய தத்துவம் கூறுகிறது.

இதன் அடிப்படையில் இஸ்ரேல் பாலஸ்தீன போர் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனியுங்கள் இஸ்ரேல் காசாவை தொடர்ந்து லெபனான் சிரியா என தன் அண்டை நாடுகளின் மீது தடை செய்யப்பட்டு குண்டுகளை விசி தாக்குதல் நடத்துகிறது.

அரபு நாடுகளில் அமைதியை குழைத்து போர் பதட்டத்தை உருவாக்குகிறது.இதற்கு உறுதுணையாக அமெரிக்கா,இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிற்கின்றன.

மறுபுறத்தில் சீனா ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தையை தீவிர படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
அமெரிக்காவின் ஒட்டுமொத்த அரசியலும் பெட்ரோல் மற்றும் ஆயுத விற்பனையை மட்டுமே சார்ந்தது.

சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க டாலரை ஓரம் கட்ட எண்ணெய் வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக யுவான் அல்லது சொந்த கரன்சிகளை பயன்படுத்தும் இடத்திற்கு இந்த நாடுகள் சென்று ரஷ்யா சீனாவின் அணிகளில் நெருக்கமாகி வருகின்றன.

இந்த புதிய கூட்டணி உலக அரசியலில் புதிய வளர்ச்சி திருப்பத்தை உருவாக்கியது. அதாவது வளர்ந்து வரும் அல்லது மேற்குலக நாடுகளால் சுரண்ட பட்ட நாடுகளை ஓரணியில் திரட்டி சர்வதேச அரங்குகளில் தங்களின் உரிமையை நிலைநாட்ட கூட்டி செல்கிறது.

குறிப்பாக ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் மாற்றத்தை இந்த புதிய கூட்டணி வலியுறுத்துகின்றது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ பவர் கொண்ட நாடுகள் ஒரு தலைப்பட்சமாக சுரண்டலுக்கு மட்டுமே தங்கள் அதிகாரங்களை பயன்படுத்தி வருகின்றன.

இந்த அதிகாரம் வளரும் நாடுகளை காலம் காலமாக முடக்கி வருகிறது. இறுதியாக நடைபெற்ற ஜீ 20,பிரிக்ஸ் உள்ளிட்ட மாநாடுகளில் அரபு நாடுகள்,ஆப்பிரிக்க யூனியன், லத்தின் அமெரிக்க நாடுகள், சீனா,ரஷ்யா இந்தியா என அனைத்து நாடுகளும் ஒருமித்த குரலாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

சர்வதேச அமைப்புகளின் ஒருதலை பட்ச நடவடிக்கையை கைவிட்டு சர்வதேச அரங்கில் அனைத்து நாடுகளுக்குமான இடத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தின.

இதற்கு முன்பும் இந்த நாடுகள் மாற்றத்தை கோரி இருந்தாலும் ,ரஷ்யா உக்ரைன் போர், மற்றும் ஆப்பிரிக்க யூனியன், லத்தின் அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆட்சிகள் அமைந்த பிறகு இந்த கோரிக்கையின் வலு அதிகரித்துள்ளது.

சில ஆண்டுக்களாகவே அமெரிக்க பொருளாதாரம் மோசமான நிலைக்கு செல்கிறது மேலும் அவர்களின் கடன் பல மடங்கு அதிகரித்துள்ளது.எனவே இந்த பொருளாதாரப் பிரச்சினைகளை சமாளிக்கும் பொருட்டு, அமெரிக்கா ஒரு போரை தூண்டிவிட தீவிரமாக திட்டமிட்டது.

அதற்காக உக்ரைனை பயன்படுத்தி ரஷ்யா மீது போர் துவங்கினார்கள். ஆனால் அமெரிக்காவின் திட்டம் அங்கு செல்லுபடியாகவில்லை இப்போது அவர்கள் மத்திய கிழக்கில் காசா மீதான இஸ்ரேலின் போரை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மிக கச்சிதமாக பயன்படுத்துகின்றன.

போர் துவங்கிய சில நாட்களிலேயே எகிப்து இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு முன்னெச்சரிக்கை தந்ததாகவும் இஸ்ரேல் அதை உதாசீனம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதே போல் அண்டை நாடுகளான சிரியா லெபனான் மீதும் குண்டுகளை வீசி போருக்கு வா என அழைக்கிறது.

இவை அனைத்தும் மீண்டும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை அரபுநாடுகளில் மீது திணித்து உலக அரசியலில் தன்னை நிலைநாட்டிக் கொள்ள அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *