Tamil Marx

கட்டுரைகள்

டிஜிட்டல் டிமிக்கியும் எய்ம்ஸ் மருத்துவமனை கடத்தலும்

டிஜிட்டல் டிமிக்கியும் எய்ம்ஸ் மருத்துவமனை கடத்தலும்
  • PublishedDecember 8, 2022

குழந்தைகள் கடத்தல், ஆள் கடத்தல், விமானம் கடத்தல், கப்பல் கடத்தல், கஞ்சா கடத்தல் கேள்விப்பட்டிருக்கிறோம். இது புது மாதிரி ஹாஸ்பிடலையே கடத்துவது. இதோ மேலும் படியுங்கள்

இந்தியாவை கணினி மயமாக்குவது பற்றியும் டிஜிட்டல் பற்றியும் அதிகமாக மோடியும், மோடின் அமைச்சர்களும் பேசி வருகிறார்கள்.

இவையெல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உதவி செய்யக்கூடிய முறையிலும், ஏழைகளை சுரண்டுவதற்கும் அதிகமாக பயன்படுகிறது.

சமீபத்தில் வலைதள ஹேக்கர்கள் (Hackers) டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் கணினிகளை ஹேக் செய்து கொண்டு 6 நாட்கள் செயல்படாது செய்து விட்டனர். பி.டி.ஐ செய்தி நிறுவனத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.ஒரு நாள் இரண்டு நாள் அல்ல தொடர்ந்து ஆறு நாட்கள்.

அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், பரிசோதனை கூடம், என அனைத்துமே மேனுவலாக செயல்படுத்தப்பட்டது.

அவர்கள் ஹேக் செய்தது மட்டுமல்ல 200 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி மூலம் பணம் கொடுத்தால்தான் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று தெரிவித்து விட்டனர் பிறகு என்ன நடந்தது என்று வெளி உலகத்திற்கு தெரியாது.

இந்தியாவின் இணையதளத்தின் கட்டமைப்புக்குள் தொடர்ந்து பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் அரசு சார்ந்த மின் அஞ்சல்களை ஒன்றிய அமைச்சக துறை சார்ந்த அதிகாரிகள் பிரச்சார நோக்கத்திற்கு பயன்படுத்துவது ஒரு காரணம் என்று 2021 பிப்ரவரி மாதம் இந்துஸ்தான் டைம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இது போன்ற நேரங்களில் செயல்படுவதற்கு கணினி அவசர பாதுகாப்பு குழு (CERT-computer emergency response team) என்ற அமைப்பு ஒன்றிய அரசின் கீழ் செயல்படுகிறது. அது என்ன செய்கிறது என்று யாருக்கும் தெரியாது. மேடைதோறும் மோடியும் மோடியும் அமைச்சர்களும் டிஜிட்டல் பற்றி முழங்கி வருகிறார்.

உலகம் கணினி மயமாகிற பொழுது இணையப்போர்(Cyber Warefare) என்ற புதிய களத்தை நாம் சந்திக்க வேண்டி உள்ளது.

மோடி ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகும், இணைய போரில் பாதுகாப்பு தொடர்பாக மிக மிக பின்தங்கிய நிலைமை நீடிக்கிறது.

சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன், ஏன் வடகொரியா கூட இந்தியாவிற்கு முன்னாள் இருக்கிறது.

இணையப்போரை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வளர்ச்சியும் கட்டமைப்பும் அவசியமானது. இந்தியாவின் நிதி ஆயோக் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

சீனா தற்போது 4 லட்சம் காப்புரிமைரிமைகளை செயற்கை நுண்ணறிவு பிரிவில் பதிவு செய்துள்ளது. இந்தியா 5000 காப்புரிமைகளை மட்டுமே பதிவு செய்ய முடிந்துள்ளது.

சீனா செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை பெருக்குவதற்காக 2.1 பில்லியன் டாலர்களை ஒதுக்கி அமல்படுத்தி வருகிறது . பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு பாடத்திட்டமாக செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி விஞ்ஞானிகளை உருவாக்கி வருகிறது.
500 ஆசிரியர்களும் 5000 மாணவர்களும் இதில பணிபுரிகின்றனர். இங்கிலாந்தில் 2025 ஆம் ஆண்டு 1000 பிஎச்டி அறிஞர்களை செயற்கை நுண்ணறிவு பிரிவில் உருவாக்கி வெளியே கொண்டு வருகிறது.

சீனா ஏற்கனவே இணையதள யுத்தத்தை தடுப்பதற்கு ஏற்ற வகையிலும், தாக்குவதற்கு ஏற்ற வகையிலும் மின் வெளி(Cyber space) கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளது. மூலோபாய ஆதரவு படை(SSF-Strategic Support Force) என்ற துறை மூலம் இவற்றை கண்காணித்து வருகிறது.

இந்தியாவில் முன்னேற்றம் ஒன்றிய அரசின் பேச்சுக்களில் மட்டுமே உள்ளது.

கட்டுரையாளர்: அ.பாக்கியம்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *