Tamil Marx

கட்டுரைகள்

மனிதகுல வரலாற்றின் முக்கிய திருப்புமுனை நவம்பர் புரட்சி

மனிதகுல வரலாற்றின் முக்கிய திருப்புமுனை நவம்பர் புரட்சி
  • PublishedNovember 7, 2022

-என்.குணசேகரன்

உலகில் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள், புரட்சிகள் 1917-க்கு முன் நிகழ்ந்துள்ளன. இவை அனைத்தும் சிறுபான்மையினராக, ஆளுகிற, உடைமை வர்க்கங்களுக்கான மாற்றங்கள்.
முதன்முறையாக பெரும்பான்மையினரான உழைக்கும் வர்க்கங்கள் ஒன்று சேர்ந்து நிகழ்த்திய வெற்றிகரமான புரட்சி, நவம்பர் புரட்சி – 20ம் நூற்றாண்டின் இணையற்ற மாற்றம்.

அதற்கு முன்பு தொழிலாளி வர்க்கம் நிகழ்த்திய புரட்சிகர மாற்றம் பாரீஸ் கம்யூன் (1871)-ஆனால் 72 நாட்கள் மட்டுமே நீடித்தது வெற்றிபெறவில்லை. காரணம் விவசாயி வர்க்கத்தை அணி திரட்டாமல், அதன் பங்கேற்பின்றி நிகழ்த்தப்பட்டதால், பாரீஸ் கம்யூன் நீடிக்கவில்லை. எதிர்ப்புரட்சி வெற்றி பெற்றது. பாரீஸ் கம்யூன் படிப்பினையை லெனினும், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும் கிரகித்து, தொழிலாளி – விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அடித்தளமாக அமைத்து, வெற்றிகரமான சோஷலிஸ்ட் புரட்சியை நிகழ்த்தினர்.

ஜார் மன்னனுக்கு எதிராக நீண்ட நெடிய போராட்டங்கள் நடத்தப்பட்டு 1917 பிப்ரவரி புரட்சி மூலம் மன்னராட்சிக்கு முடிவுகட்டப்பட்டது. முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் கெரன்ஸ்கி என்பவர் தலைமையில் முதலாளித்துவ அரசை நிறுவினர்.
சோவியத்துக்கள் எனப்படும் ஸ்தல ஆட்சி அமைப்புக்களில் விவசாயிகள், தொழிலாளர்கள் பிரதிநிதிகளான சும்யூனிஸ்டுகள் பொறுப்பு வகித்தனர்.

இரட்டை அரசாங்கம் நிலவியது.
முதல் உலகப்போரினால் ரஷ்ய ஏகாதிபத்தியம் பலவீனமடைந்த சூழலில் ராணுவத்தில் பெரும்பகுதி கம்யூனிஸ்டுகளிடம் வந்த நிலையில் புரட்சி நிகழ்ந்தது.
நிலைமைகளை துல்லியமாக கணக்கெடுத்து சரியாகத்திட்டமிட்டு கம்யூனிஸ்டுகள் லெனின் தலைமையில் செயல்பட்டனர். பாட்டாளி வர்க்கப் புரட்சி, அன்றைய தற்காலிக முதலாளித்துவ அரசாங்கத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சர்வதேச சூழலையும், தேசிய நிலைமைகளையும் ஆய்வு செய்த லெனின், முதலாளித்துவம் ஏகாதிபத்திய கட்டமாக மாறியதை கண்டறிந்தார்.

ஏகாதிபத்திய சங்கிலியில் பலகீனமாக இருக்கும் கண்ணியை உடைத்தெறிந்து புரட்சியை நிகழ்த்தலாம் என்ற அரிய தத்துவார்த்தப் பங்களிப்பு லெனின் மார்க்சியத்தை மாறிய சூழலில் பொருத்திப் பார்த்து வந்தடைந்த இந்த முடிவு ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது. பாட்டாளி வர்க்கப்புரட்சியின் அச்சக தொழிலாளி – விவசாயி வர்க்கங்களின் உறுதியான அணி அமைக்கப்பட்டது. தொழிலாளி வர்க்கம் தன்னை புரட்சியின் முன்னணிப் படையாக உயர்த்திக் கொண்டதால்தான் புரட்சி சாத்தியமானது. சுரண்டல் அமைப்பைத் தகர்த்து கரண்டலற்ற சோசலிச அமைப்பை உருவாக்க வேண்டுமென்ற புரட்சிகர தத்துவார்த்த உணர்வு தொழிலாளி வர்க்கத்திற்கு ஏற்படுத்த வேண்டும்.

ஸ்தாபனப்பூர்வமாக தொழிலாளி வர்க்கத்தை திரட்டிடல் வேண்டும்.
விவசாயிகள் உள்ளிட்ட இதர வர்க்கங்களின் நலன்களுக்காகவும் போராடுகிற வர்க்கமாக தொழிலாளி வர்க்கம் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதன் மூலமே புரட்சிப்படையின் தலைமைப் படையாக தொழிலாளி வர்க்கம் திகழ்ந்திட இயலும். ரஷ்யப் புரட்சியின் அனுபவம் இதுவே.
வலுவான கம்யூனிஸ்டு கட்சியை லெனின் உருவாக்கியதால்தான் புரட்சி சாத்தியமாயிற்று.
அதற்கு முந்தைய காலக் கட்டங்களில் புரட்சிகர நடவடிக்கைகள், முதலாளித்துவத்திற்கு எதிராக ஜெர்மனி போன்ற நாடுகளில் நடைபெற்ற போதும், அவை பாட்டாளி வர்க்க அரசு அமைவதற்கு வித்திடவில்லை. காரணம் புரட்சிகர கட்சி இல்லாததுதான்,
கட்சிக்கோட்பாடுகளை லெனின் மகத்தான சித்தாந்தப்போராட்டத்தின் மூலம் உருவாக்கினார்.

ஜனநாயக மத்தியத்துவம், கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒரு வெகுஜன அமைப்பில் பணியாற்றுவது உள்ளிட்ட பல கோட்பாடுகளை உருவாக்கினார். உருக்கு போன்ற உறுதியான கடசி. ஸ்தாபனக் கோட்பாடுகள் அடிப்படையில் செயலாற்றிடும் கட்சியே புரட்சியை வழி நடத்திடும் என்பதே ரஷ்யப் புரட்சியின் அனுபவம். 1917- நவம்பர் 7ல் நிறுவப்பட்ட புரட்சி அரசாங்கம் மாபெரும் சோதனைகளை சந்தித்தது. 14 நாடுகள் சுற்றி வளைத்து அரசை வீழ்த்த முற்றுகையிட்டன. ஏகாதிபத்திய நாடுகள் முதல் சோசலிச அரசுக்கு தொடர்ச்சியாக தடைகற்களையும் இன்னல்களையும் ஏற்படுத்தினர். இந்த தாக்குதலை முறியடித்து சோவியத் யூனியன் முன்னேறியது.
உழைப்பாளி வர்க்கத்தின் சொந்தக் காலில் நின்று ரஷ்யா முன்னேறியது.

லெனின் பிறப்பித்த ஆணை உழுபவனுக்கு நிலத்தை சொந்தமாக்கியது. பின்னாளில் கூட்டுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டு, விவசாய உற்பத்தி பல மடங்கு பெருகியது.
புரட்சிக்கு முன் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பிய கோஷம் “சமாதானம், உணவு, நிலம்” என்பது-இவை அனைத்தும் சோவியத் மக்களுக்கு சில வருடங்களுக்கு உள்ளாகவே சாத்தியமாயிற்று. முதல் 5-ஆண்டு திட்டத்தின்போது மக்களின் வருமானம் 4 மடங்கு உயர்ந்தது. உற்பத்தி 15 சதவிகிதம் பெருகியது. மின்சாரம், எஃகு உற்பத்தியில் சாதனை. நவீன தொழில்கள் உருவாக்கப்பட்டது. வேலை, கல்வி அடிப்படை உரிமைகளாக்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போர் மூண்ட போது, பாசிசத்தை அழிக்க சோவியத் அரசு முன்னணிப் பங்கு வகித்தது. பாசிச ராணுவத்தை எதிர்த்து சோவியத் ராணுவம் மட்டுமல்ல, சோவியத் மக்களும் வீரஞ்செறிந்த போராட்டத்தை நிகழ்த்தினர். பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் தெருக்களில் எதிரிகளின் தாக்குதல் வரக்கூடும் என்பதால் ‘வீட்டிற்குள் இருந்து பூட்டிக்கொள்ளுங்கள்’ என்று ரேடியோவில் அறிவிக்கிறார். ஆனால் ஸ்டாலின் ஆங்காங்கே. மக்கள் கொரில்லாக் கமிட்டிகளை அமைத்து பாசிச சக்திகளை வீழ்த்துங்கள் என்று அறைகூவல் விடுக்கிறார்.

சொந்த நாட்டின் மீதான தேசப்பற்று மட்டுமல்ல, உலக மக்களை பாசிச பிடியிலிருந்து மீட்க வேண்டுமென்ற ஒப்பற்ற சர்வதேச உணர்வும் சோவியத் மக்களிடம் இருந்தது.

2 கோடி மக்கள் உயிர்த் தியாகம் செய்து பாசிசத்தை வீழ்த்தியது. மனிதகுல வரலாற்றில் மறக்க முடியாத முத்திரை பதித்த நிகழ்வு: –

  • உலகப்போருக்குப் பிறகு சிதலமடைந்த பொருளாதாரத்தை புனர் நிர்மாணம் செய்து மீண்டும் அசுர வேகத்தில் ரஷ்யா முன்னேறியது.
  • போரினால் இதர முதலாளித்துவ நாடுகள் மீளமுடியாத நெருக்கடியில் தேக்கமடைந்த நிலையில், ரஷ்யா பல துறைகளில் முன்னேறியது.
  • மக்களுக்கு கல்வி, வேலை, சுகாதாரம் அனைத்தும் உத்திரவாதமாக்கப்பட்டது.
    சோவியத் யூனியன் மக்களுக்கு செய்து வந்த சமூக நல நடவடிக்கைகள் மற்ற முதலாளித்துவ நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • அவர்களும் தங்கள் நாட்டு உழைப்பாளி மக்களுக்கு சில சமுக நல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
  • சோவியத்தின் தாக்கம் உலகம் முழுவதும் ஏற்பட்டது.
    இரண்டாம் உலகப்போருக்குப் பின் பாசிசம் வீழ்ந்ததால் இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளில் விடுதலை கிடைத்தது.
  • சோவியத் சாதனைகளினால் ஈர்க்கப்பட்டவர்கள் இந்தியாவில் கம்யூனிஸ் கட்சியை நிர்மாணித்தனர், இதுபோன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாகிடவும், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் புரட்சி ஏற்படவும் சோவியத் புரட்சி வழிகாட்டியாக அமைந்தது.

இந்த சாதனைகள் நிகழ்த்திய அரசு 1991ல் வீழ்ச்சி கண்டது. காரணங்கள் CPI(M)ன் 14-வது கட்சி காங்கிரசில் ஆராயப்பட்டு சில நிர்ணயிப்புக்களுக்கு வந்துள்ளோம். (கட்சி திட்டத்திலும் சில அம்சங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுருக்கமாக விவரிப்பது நல்லது.)

70 ஆண்டுக்காலம் சோவியத் அரசு இருந்தது. பல நூற்றாண்டுகளாக முதலாளித்துவம் அதுவரை நிகழ்த்தாத பல சாதனைகளை அது நிகழ்த்திய போதிலும், பல தவறுகள் இழைக்கப்பட்டதால் பின்னடைவு ஏற்பட்டது.

இதனால் சோசலிச தத்துவத்திற்கும், மார்க்சிய தததுவத்திற்கும் தோல்வி ஏற்படவில்லை. சோசலிசம் தான் உண்மையான மாற்று என்பதையும், முதலாளித்துவத்தால் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்திட இயலாது என்பதையும் கடந்த 10 ஆண்டு அனுபவங்கள் நிரூபித்துள்ளன.
ஏகாதிபத்தியங்கள் வலியுறுத்தும் தாராளமயமாக்கல் கொள்கை உலகம் முழுவதும் வறுமையை அதிகரிக்கச் செய்துள்ளது. பணக்கார நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடைவெளி அதிகரித்து வருகின்றது.

உலகமயமாக்கல், தாரளமயமாக்கலை எதிர்த்து இந்தியா உள்ளிட்ட மூன்றாவது உலகநாடுகளில் மக்கள் இயக்கம் உருவாகி வருகிறது. அமெரிக்காவிற்கு சாதகமான ஒருதலைபட்சமான உலகம் (Unipolor World) என்ற நிலைமைக்கு எதிர்ப்பு உருவாகி வருகிறது.

மார்க்சியம்-லெனினியம் ஒரு விஞ்ஞானம். விஞ்ஞானம் தவறாகாது. நடைமுறைப்படுத்துவதில்தான் தவறுகள் ஏற்பட்டன.
மனிதகுலம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் உள்ளிட்ட பல சமூக அமைப்புக்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடந்து வந்துள்ளது. வரலாற்றில் குறுகிய கால பரிசோதனையாக சோசலிச அனுபவம் நேரிட்டது. வீழ்ச்சி ஏற்ப்டட போதிலும் இது தற்காலிகமானது. மீண்டும் தொடரும், தவறுகளிலிருந்து படிப்பினை பெற்று புரட்சிகர இயக்கம் மேலும் முன்னேறும்.
எனவே, நவம்பர் புரட்சிகர அனுபவத்திலிருந்து படிப்பினைகளை பெற்றிடுவோம்.

“தொழிலாளி, விவசாயி வர்க்கங்களை விரிவாகத் திரட்டி அணி சேர்த்திடுவோம்.
புரட்சிகர வெகுஜன கட்சியாக நமது கட்சியினை வலுவாக கட்டிடுவோம்.
ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் மக்கள் விரோதத் தன்மைகனை வெகுஜனப் போராட்டங்கள் மூலம அம்பலப்படுத்திடுவோம்.
மார்ச்சிய-லெனினிய தத்துவத்தை தொடர்ந்து பயின்றிடுவோம். மாறி வரும் குழ்நிலைமைகளை துல்லியமாக ஆய்வு செய்து நமது நடைமுறைப் பணிகளை மேற்கொள்வோம்.”

நவம்பர் புரட்சியின் மகத்துவம் நீடுழி வாழட்டும்!

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *