Tamil Marx

சர்வதேச பொருளாதாரம்

உற்பத்தியை குறைத்து தொழிலாளர்களை சுரண்டும் முதலாளிகள்.

உற்பத்தியை குறைத்து தொழிலாளர்களை சுரண்டும் முதலாளிகள்.
  • PublishedNovember 9, 2021

சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக் குமார் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி யிருப்பதாவது: ஆட்டோமொபைல், எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் உட்பட அனைத்து தொழில்களை யும் ஒரு நிச்சயமற்ற தொழில் நிலைமையை உரு வாக்கியுள்ள ஒரு பொருள் சிப்பு. சிலிக்கான் மூலப் பொருளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் செமி கண்டக்டர் தட்டுகளில் இருந்துதான் தேவைக்கு ஏற்ப சிறிய அளவிலான சிப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. ஸ்மார்ட் போன், தொலைக்காட்சி, லேப்டாப் முதல் மிகப் பெரிய இயந்திரங்கள் வரை இந்த சிறிய அளவிலான சிப்புகள் தான் இந்த பொருட்களை இயக்குவதற்கான கட்டளை களை இடுகின்றன. கார், ஸ்கூட்டர் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களும் முழுமை யாக வடிவமைக்கப்பட்டாலும் அவை இயங்கு வதற்கான புரோக்ராம் இந்த சிப்பு களில்தான் அடங்கியுள்ளன . இந்த சிப்புகள் தேவைக்கும் குறைவாக தற்போது தயாரிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு உருவான கொரோனா முதல் அலை உலகத்தின் எல்லா தொழில்களையும் முடக்கிப்போட்டது. அதன் ஒரு பகுதியாக சிப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் முடங்கியது. தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் சிப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதே காலத்தில் வீடுகளி லிருந்து பணியாற்றுங்கள் (வொர்க் ப்ரம் ஹோம்) என்கிற வேலை முறை கொரோனா காலத்தில் உருவானது.

அதன் காரணமாக லேப்டாப் பயன்பாடு கூடு தலானது. ஸ்மார்ட்போன், மருத்துவ, எலக்ட்ரானி க்பொருட்கள், வீட்டுக்குள்ளேயே இருந்த குழந்தைகள் விளையாடுவதற்கான எலெக்ட்ரிக் பொருட்கள் என மக்கள் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் பொருள் தேவையும் அதிகரித்தது இந்த காலத்தில்தன். இதன் காரணமாக சிப்பு தேவை வழக்கத்தை விட கூடுதலானது. ஒரு பக்கம், உற்பத்தி யின்மை. இன்னொருபக்கம் சிப்பின் தேவை அதிகரிப்பு. வழக்கமாக மோட்டார் வாகனங் களுக்கு வழங்கப்பட்டு வந்த சிப்புகள் குறைக்கப்பட்டன. மோட்டார் வாகன உற்பத்தி பாதிப்பு இப்படி சிப்பு பற்றாக்குறையால் உலக அளவில் அதிகமாக பாதித்திருக்கும் பிரிவு மோட்டார் வாகன உற்பத்தி தொழில்களாகும். சிப்புகளின் பற்றாக்குறை தொழிலாளர்களு டைய மாதச் சம்பளத்தையும் அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பெறக்கூடிய போனஸ் தொகையும் குறையப் போவது என்கிற அச்ச மூட்டும் செய்திகள் தொழிலாளர்களை கலக்க மடைய செய்துள்ளன. சிப்புக்கும் தொழிலாளி யின் போனஸ் மற்றும் சம்பளத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றும். கொரோனா, முதலாளித்துவம் ,உலகமயம், இந்த மூன்றும் இணைந்து தாக்கிவரும் முக்கிய பகுதி உழைப்பாளி மக்களைத்தான் . உற்பத்தி, வர்த்தகம், மூலதனம் இவை முழு வதும் உலகமயமான பிறகு குறிப்பிட்ட கார் அல்லது எலக்ட்ரானிக் பொருள் அல்லது மருந்து உற்பத்தி எதுவாக இருந்தாலும் இதற்கான உற்பத்தி நிறுவனங்கள் இங்கே இருக்கலாம். தொழிலாளிகள்- நிலம்- நீர் உள்ளிட்டவை சென்னையை மையமாக வைத்திருந்தாலும் இதற்கான மூலதனமும் கண்ணுக்கு தெரியாத முதலாளிகளும் உலகில் வேறு எங்கோ இருக்கிறான். அனைத்து கொள்கை முடிவு களும் வெளிநாடுகளில் இருந்துதான் பிறப்பிக்கப்படுகின்றன.

வடிவமைப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்தும் எல்லைகளற்ற உலகம் தழுவி யதாக இப்போது இருக்கிறது. உலகில் எங்கோ ஒரு பகுதியில் உருவான வைரஸ் உலகின் அனைத்து மக்களின் வாழ்க்கையையும் தலை குப்புற மாற்றிவிட்டது. தொழில் முடக்கம், வாழ்க்கை முறையில் மாற்றம், இதில் அதிகம் பாதித்தது உழைப்பாளி மக்கள்தான். விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட்டுகள் இக்காலத்தில் பல மடங்கு தங்கள் வருவாயை, சொத்துக்களை குவித்து கொண்டனர்.அவர்களை கொரோனா பாதிக்கவில்லை. முதல் கொரோனா காலத்தில் ஆலைகள் மூடியதால் செமி கண்டக்டர் உற்பத்தி கடுமை யாக பாதித்தது. இந்த செமிகண்டக்டர் உற்பத்தி யில் ஆசிய நாடுகளின் பங்கு அதிகம். டிஎஸ்எம்சி என்ற தைவான் நாட்டு நிறுவனம்தான் செமிகண்டக்டர் மொத்த உற்பத்தியில் 56 சத வீதம் பங்கு வகிக்கின்றன .ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இவர்களிடமிருந்து தான் தனக்கான செமிகண்டக்டர்களை பெறு கின்றன. இன்டெல், சாம்சங் போன்ற நிறுவனங்கள் சொந்தமாகவே தங்களுக்கான செமிகண்ட க்டர்களை உற்பத்தி செய்து கொள்கின்றன. தென்கொரியா மற்றும் சீனாவிலும் இதற்கான உற்பத்தி நிறுவனங்களும் இருக்கின்றன. சிப்புகளின் தேவை அதிகரிப்பு பி எஸ் 6- விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு சிப்பின் தேவை முன்பைவிட அவசியமானதாக மாறியுள்ளதாக ஆட்டோமொபைல் உற்பத்தி யாளர் அமைப்பான எஸ்ஐஏஎம் கூறுகிறது. கார், இன்ஜின், ஹெட்லைட், டிரைவிங் அசிஸ்ட், இவைகளைக் கட்டுப்படுத்துவது சிப்புகளே. ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற காரின் உள்ளும் வெளியுமான பாதுகாப்பு வசதிகளை உறுதிப்படுத்துவது சிப்புகள் தான். கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு நோக்கி ஆட்டோமொபைல் உலகம் செல்ல துவங்கி யுள்ள சூழ்நிலையில் தற்போது உள்ளதை விட மூன்று மடங்கு சிப்புகள் தேவை கூடுதலாகிறது. அமெரிக்கா ,சீனா, கொரிய நாடுகள் இதற்கான உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன . டி எஸ் எம் சி நிறுவனம் 100 பில்லியன் டாலரும் சாம்சங் நிறுவனம் 116 பில்லியன் டாலரும் அடுத்த மூன்று ஆண்டு களுக்கான தங்களின் உற்பத்தி முதலீடாக அறிவித்துள்ளன.

சிப்புகளின் பற்றாக்குறை 2023 வரை நீடிக்கும் என்று இது குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பற்றாக்குறை காரணமாக மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையும் 41 சதவீதம் குறைந்துவிட்டதாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் அமைப்பு சமீபத்தில் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்திய கார்கள் சந்தையில் 47 சதவீதம் இடம்பிடித்துள்ள மாருதி சுசுகி தனது கார் உற்பத்தியை சரிபாதியாக குறைக்க விட்டது. உதாரணமாக 2020 செப்டம்பரில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 86 கார் உற்பத்தி செய்த நிலை யில் 2011இல் 81 ஆயிரத்து 278 கார்களை உற்பத்தி செய்துள்ளது வெறும் வர்த்தகப் பிரச்சனையல்ல… ஹோண்டா, பிஎம்டபிள்யூ, போர்டு உள்ளிட்ட வாகன நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை குறைக்க துவங்கியுள்ளன. வாகன உற்பத்தி குறைப்பதும் விற்பனை குறைவதும் வெறும் வர்த்தக பிரச்சனை மட்டுமல்ல தொழிலாளர் களின் வாழ்க்கை பிரச்சனையோடு சம்பந்தப் பட்டது. பொருள் உற்பத்திக்கான பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறபோது தங்கள் வர்த்தக நட்டத்தை காப்பாற்றிக்கொள்ள முதலாளித்து வம் எடுக்கும் இந்த முடிவுகள் தொழிலாளர் களை கடுமையாக பாதிக்கின்றன. மாருதி 47 சதவீதம் கார் உற்பத்தி குறைப்பு என்பது தொழிலாளர்களின் 47 சதமானம் வேலை யின்மையை ஏற்படுத்துகிறது. இவை சம்பள குறைப்பாகவும் இதன் தொடர்ச்சி போனஸ் குறைந்தும் அடுத்தடுத்த விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதன் அடுத்த விளைவு கள், சந்தையில் பணப்புழக்கம் பெரும் அளவில் இல்லாமல் ஆகின்றன.

இந்த நிறுவனங்கள் ஊதிய உயர்வு வழங்க முடியாதது மட்டுமல்ல ஒப்புக்கொண்ட சமூக பாதுகாப்பு நலத் திட்டங்களை கூட தொழி லாளர்களுக்கு வழங்குவதற்கு நிறுவனங்கள் மறுக்கின்றன. அதே நேரத்தில் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து தங்கள் மூலதனத்தை தற்காத்து கொள்கின்றன. மேற்கண்ட இந்த புதிய சூழல் சென்னையில் அனைத்து மோட்டார் வாகன நிறுவனங்களிலும் கடுமையாக பிரதிபலிக்க துவங்கியுள்ளன . மாதத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் உற்பத்தி யற்ற நாட்களாக அறிவிக்கப்படுகின்றன. இந்த உற்பத்தியற்ற நாட்களுக்கு இனிமேல் சம்பளம் பாதியாக குறைக்கப்படும் என்று நிறுவனங்கள் அச்சுறுத்துகின்றன கொரோனாவின் தாக்குதல் தீவிரம் குறைந்தாலும் அவை உருவாக்கியுள்ள வேலை யின்மை, சம்பளம் குறைப்பு, போனஸ் குறைப்பு, ஆலை மூடல் என்கிற அடுத்தடுத்த தாக்கு தல்கள் தீவிரமாகியுள்ளன. இந்த பொருளாதார நெருக்கடிகள் தீவிர மானால் தொழிலாளர்களுக்கான நிவாரணங் களை பெறவும் வேலைவாய்ப்பை தற்காத்து கொள்ளும் போராட்டங்களும் தவிர்க்க முடியாத ஒன்றே. சிப்பு சிறியதுதான் அவை உருவாக்கும் செயல் பெரியது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

-இ.முத்துக்குமார்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *