Tamil Marx

சர்வதேசம்

ரஷ்யாவிற்கு எதிராக காய் நகர்த்தும் அமெரிக்கா?

  • PublishedOctober 3, 2023

நாகோர்னோ கராபாக் குடியரசை அஜர்பைஜான் கைப்பற்றிய பின் ரஷ்யாவை தனிமைப்படுத்த அமெரிக்கா காய் நகர்த்தி வருகிறது

அஜர்பைஜான் அர்மீனிய எல்லையில் இருந்த நாகோர்னோ கராபாக், அஜர்பைஜானின் பகுதியாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது அர்மீனிய இனத்தவர்கள் அதிகம் வாழும் இந்தப் பகுதியை அர்மீனிய ஆயுதப்படைகளின் ஆதரவுடன் நாகோர்னோ கராபாக் தன்னை தனி குடியரசாக அறிவித்து ஆட்சி நடத்தி வந்தது.


பல ஆண்டுகள் சண்டைக்குப் பிறகு அப்பகுதியை போரின் மூலம் கடந்த வாரம் அஜர்பைஜான் கைப்பற்றியது இதை தொடர்ந்து அனைத்து அர்மீனிய அரசு அமைப்புகளும் 2024க்குள் அகற்றப்படும் என நாகோர்னோ தலைவரான சாம்வெல் செப்டம்பர் 28 அன்று வெளியிட்ட ஆணையில் உறுதியளித்துள்ளார்.

வெளியேறும் அர்மீனியர்கள்


இந்தப் போருக்கு பிறகு 65,000 க்கும் மேற்பட்ட மக்கள் நாகோர்னோ கராபாக்கிலிருந்து அர்மீனியா வந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.மேலும் அப்பகுதியில் வாழ்ந்துவரும் 150,000 மக்களில், ஏறக்குறைய 120,000 பேர் அர்மீனியர்கள் எனவும் இவர்கள் அனைவரும் அர்மீனியாவிற்கு திரும்புவார்கள் எனவும் அர்மீனியப் பிரதமர் நிகோல் பஷினியன் கூறியுள்ளார்.


பாதுகாப்பு கூட்டமைப்பு


முன்னாள் சோவியத் நாடுகளான ரஷ்யா, ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் மூன்று மத்திய ஆசியக் குடியரசுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் தஜிகிஸ்தான் ஆகியவற்றுடன் அமைதியான உறவை பேணுவதற்கு 2002 இல் ஒரு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு CSTO) உருவாக்கப்பட்டது.


முன்னாள் சோவியத் ஒன்றியம் பிளவுபட்ட பிறகு 1988 முதல் நாகோர்னோ பகுதியை இணைத்துக்கொள்ள அஜர்பைஜான் ஆயுதத் தலையீடு செய்து வந்தது. இதனால் 1994 வரை போர் நீடித்து வந்தது.பின் ரஷ்யாவின் அமைதி பேச்சுவார்த்தையின் காரணமாக போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட போதிலும் 2000 ஆவது ஆண்டு போரிட்டு அஜர்பைஜான் சில பகுதிகளை கைப்பற்றியது.


அஜர்பைஜானின் இந்த போர் நடவடிக்கைக்கு ரஷ்ய அமைதி காக்கும் படைகளின் தோல்வியே காரணம்.உக்ரைன் போரில் ஈடுபட்டதால் இந்த அமைப்பில் கவனம் செலுத்தி நாடுகளுக்குள் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தவறியதாக அர்மீனிய ஜனாதிபதி பாஷினியன் குற்றம் சாட்டினார்.


ரஷ்யாவிற்கு எதிராக காய் நகர்த்தும் அமெரிக்கா


இந்த குற்றச்சாட்டிற்கு முன்பிருந்தே அமெரிக்காவுடன் கூட்டு ராணுவப் பயிற்சி உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் அர்மீனியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை பேணத் துவங்கியது. மேலும் இந்நாடுகளுடன் அதிக ஒத்துழைப்புக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது. எனவே தற்போது அவர்களை திருப்திப்படுத்தவே இவ்வாறான குற்றச்சாட்டை அர்மீனிய ஜனாதிபதி முன் வைக்கிறார் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டிற்கு பதில் கூறியுள்ளது.


மேலும், நாகோர்னோ கராபாக் தொடர்பாக அஜர்பைஜானுடன் சமாதான நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்தி வந்த போதிலும் அர்மீனியா இந்த ஆண்டின் துவக்கத்தில் பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சமாதான நடவடிக்கையில் பங்கேற்று மேற்குலக நாடுகளை பிராந்திய மோதலுக்குள் கொண்டு வந்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியது.


பாஷினின் குற்றம் சாட்டிய சில மணி நேரங்களில் அமெரிக்காவின் இரு உயர்மட்ட அதிகாரிகள், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க அமைப்பின் தலைவர் சமந்தா, ஐரோப்பா மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான துணை வெளியுறவுத்துறை செயலாளர் யூரி கிம் ஆகியோர் அர்மீனியாவிற்கு சென்று ரஷ்யயாவின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினர்.


சர்வதேச உறவில் குறிப்பாக பாஷினின் தலைமையிலான ஆட்சியில் ரஷ்யா-அர்மீனிய உறவு மிக மோசமாக இருக்கும் சூழலில் அமெரிக்கா அர்மீனியாவுடனான உறவை பலப்படுத்தி ரஷ்யாவை தனிமைப்படுத்தும் வேளையில் இறங்கியுள்ளது. தற்போது இந்த போர் நடவடிக்கையைப் பயன்படுத்தி உலக அரசியலில் ரஷ்யாவை அதன் பிராந்தியத்திற்குள் தனிமைப்படுத்த காய் நகர்த்தி வருகிறது.
இந்நிலையில் வரலாற்று ரீதியாக, புவியியல் ரீதியாக, புவிசார் அரசியல் ரீதியாக ரஷ்யாவை முற்றிலும் புறக்கணிக்கும் எந்தச் செயலையும் அனுமதிக்க முடியாது என ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *