Tamil Marx

கட்டுரைகள்

முதலீடுகளை ஈர்க்க முடியாமல் தத்தளிக்கும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! – தோழர் பாலமுருகன்

முதலீடுகளை ஈர்க்க முடியாமல் தத்தளிக்கும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! – தோழர் பாலமுருகன்
  • PublishedSeptember 5, 2023

Venture Intelligence என்ற நிதி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி 2023 ஆண்டின் முதல் பாதியில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வெறும் $.3.9 பில்லியன்களை மட்டுமே முதலீடுகளாக ஈர்த்துள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் பாதியில் ஈர்த்த முதலீடுகளை ஒப்பிடுகையில் 78% குறைவாகும்.

இந்த வேகத்தில் சென்றால் இந்தாண்டு இறுதியில் மொத்தமே $10 பில்லியனுக்கு குறைவாகவே ஸ்டார்ட் ஆப்களால் முதலீடுகளை ஈர்க்க முடியும் என கண்ணித்துள்ளது Venture intelligence. ஆனால் கடந்த 2021ல் $30 பில்லியனும், 2022ல் $20 பில்லியனும் ஸ்டார்ட் அப்கள் ஈர்த்துள்ளன.

மேலும் கடந்த ஆண்டு முதல் பாதியில் 730 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலையில் இந்தாண்டின் முதல் பாதியில் 308 நிறுவனங்கள் என 50% மேலான நிறுவனங்கள் இயங்காமல் நின்றுவிட்டன.

2021 நவம்பர் மாதத்தில் Paytm பங்குகளில் முதலீடுகள் குறையத் தொடுங்கியது பின் இந்தாண்டின் தொடக்கத்திலிருந்து Zomato, Delhivery, Naykaa ஆகிய நிறுவனங்களின் IPO பங்குகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல சர்வதேச முதலீட்டு நிறுவனங்களும் இந்திய ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களில் செய்த முதலீட்டு மதிப்புகளை சுருக்கியுள்ளது. உதாரணமாக, நெதர்லாந்தை சேர்ந்த Prosus நிறுவனம் Byju’s மீதான தனது முதலீட்டில் $5.1 பில்லியன் மதிப்பை குறைத்துள்ளது. அட்லாண்டாவை தளமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமான இன்வெஸ்கோ, ஸ்விக்கியின் மதிப்பை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்து $5.5 பில்லியனாகக் குறைத்தது. ஜப்பானின் சாப்ட்பேங்க் கடந்த 15 முதல் 16 மாதங்களில் இந்தியாவில் ஒரு புதிய முதலீடு கூட செய்யவில்லை. டைகர் குளோபல், ஒரு காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த நிலையில், தற்போது முதலீடு செய்வதை நிறுத்திவிட்டது.

Inc42 இன் படி, 74 யூனிகார்ன்களில் 55 (74 சதவீதம்) FY22 இல் $5.9 பில்லியன் ஒட்டுமொத்த இயக்க இழப்பைச் சந்தித்தன.


இதற்கு காரணமாக, இந்திய உள்நாட்டு மக்களின் நுகர்வு கணிசமான குறைந்துள்ளதை கூறுகின்றனர், Blume Ventures ஏப்ரல் அறிக்கை ஒன்றில், முதல் 30 மில்லியன் இந்தியக் குடும்பங்களுக்கு வெளியே நுகர்வு வெகுவாகக் குறைந்துள்ளது என்கிறது. அடுத்ததாக உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தமும் காரணமாக சொல்லப்படுகிறது குறிப்பாக US ன் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்யப்படாத நடவடிக்கை இங்கும் எதிரொலிக்கிறது என்கிறனர் நிபுணர்கள்

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன என்று மார்தட்டிக்கொள்ளும் மோடி தலைமை பாஜக அரசு தற்போத ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மோசமான நிலையை அகற்ற எந்த திட்டமும் இல்லாமல் வீண் பெருமை பேசிவருகிறது.

மேலும் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எல்லாம் வெளிநாட்டு நிதி மூலதன நிறுவனங்களின் தளத்திற்கு ஆடக்கூடியவை என்பது இந்நிகழ்வுகள் மூலம் மீண்டும் அம்பலப்பட்டுள்ளது. வெளிநாட்டு மூலதனங்கள் தங்களின் லாப வெறிக்கு ஏற்ப மூலதனத்தை கட்டுபடுத்தும் போது இங்குள்ள ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களில் பணிசெய்யும் ஊழியர்களும் அதை சார்ந்து இயங்குவோரும் பாதிக்கப்படுகின்றனர்

அதாவது, Moneycontrol இன் பணிநீக்க கண்காணிப்பாளரின் கூற்றுப்படி, ஜனவரி 2022 முதல் ஜூன் 2023 வரை 94 ஸ்டார்ட்அப்களில் 25,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உண்மையில், பல நிறுவனங்கள் இப்போது அமைதியாக பணிநீக்கங்களை நாடுவதால், பணிநீக்கங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் Cost cut என்று பிற நிறுவனங்களிடமிருந்து பெறும் சேவைகளையும் ரத்து செய்கின்றன (உதாரணமாக Cloud சேவை) இதனால் சேவை வழங்கி வந்த நிறுவனங்களின் ஊழியர்களும் வேலையிழக்கும் நிலைமை ஏற்படுகிறது. இவ்வாறான நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலையிழப்புகள் நடந்துவருகிறது.


ஆக அந்நிய நிதி மூலதனம் தன்னை பெருக்கிக் கொள்ள ஒரு சில துறைகளை, ஒரு சில நாடுகளை நோக்கி குவிகிறது. அதற்காக உழைப்புகளை விலைக்கு வாங்குகிறது. பின் வேறு மாற்று முதலீடு தளம் கிடைத்ததும் தன் மூலதனப் பெருக்கத்திற்கு அடிப்படையாய் இருந்த உழைப்பாளர்களை அப்படியே கைகழுவி விட்டுவிட்டு, புதிய துறைக்கு தாவுகிறது. இப்போது இதற்கென புதிய திறன் படைத்த உழைப்பாளர்களையோ அல்லது தற்போதய முதலீடு க்கு தேவையான உழைப்பு திறன்களையோ பயன்படுத்தி கொள்கிறது. உழைப்பை மட்டுமே நம்பி வாழும் பெரும் திரளான மக்களின் நிலைமை, வேலைகளை இழந்து பல்வேறு இன்னல்களுக்கு தங்களின் வாழ்க்கையை கொடுத்துவிடும் நிலைமை ஏற்படுகிறது.

தோழர்- பாலமுருகன்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *