கோட்டாவில் வந்த குஞ்சு-குத்தூசி
சமீபத்தில் home bound படம் பார்த்தேன், அதில் வரும் ஒரு கதாநாயகன் தலித் இன்னொரு கதாநாயகன் முஸ்லீம், அதில் வரும் தலித் கதாநாயகன் தான் தலித் என்றும் அடையாளத்தை மறைக்க SC கோட்டால apply செய்யாமல் OC இல் apply செய்வான்.
அவனை ஏன் தலித் என்கிறார்கள் என்பதை பற்றியான கட்டுரையா இது நிச்சயமாக இல்லை. பல தலைமுறை போராட்டத்திற்கு பிறகு கிடைத்த இட ஒதுக்கிடு என்ற வாய்ப்பை இந்த சமூகம் ஒரு கருத்து உருவாக்கம் செய்து அதை பயன்படுத்த வேண்டாம் என ஒருவனை முடிவெடுக்க கூடிய அளவுக்கு யோசிக்க செய்துள்ளதே அதை பற்றியான கட்டுரையா இது? இல்லவே இல்லை.
அப்போ எதை பற்றி தாங்க இந்த கட்டுரை என நீங்கள் கேட்டால் கோட்டால வந்த கோழி குஞ்சிகள் பத்தினது. இந்த சொல்லாடல் 70,80,90 இல் இருந்து இப்ப இருக்கும் சினிமா வரை சொல்லப்படும் வார்த்தை. So நம்ம இப்ப இந்த கோழி குஞ்சிகளை பற்றி பேச போகிறோமா? இல்லை. அது பற்றி பிறகு பேசுவோம்,. அந்த கோட்டா கோட்டான்னு சொல்றாங்களே அதை பற்றி பேசலாமே என்று தோன்றியது.
இந்தியாவில் இருக்கும் அனைவரும் கோட்டால வந்த கோழி குஞ்சிகள் தான் ஆனால் specific ஆக இந்திய சமூகம் SC/ST பிரிவில் இருக்கும் மக்களை மட்டும் சுற்றி வருகிறது. ஏன் அந்த சொல்லாடலை அவர்களை வித்து மட்டும் பயன்படுத்த படுகிறது ? ஏனென்றால் காலம் பூரா மறுக்கப்பட்ட உரிமைகளான கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை இட ஒதுக்கிடு பெற்று தருகிறது. அதை பொறுத்து கொள்ள முடியாத சாதி இந்துக்கள் தான் இந்த அம்மக்களை மட்டுமே குறிவைத்து இவ்வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் பொது சமூகமும் அதனை நம்பத்துவங்கி விட்டது.
சரி வாங்க இப்போது முதலில் எப்படி இந்த reservation system வேலை செய்து என்று பாப்போம்:
இடஒதுக்கீடு என்றால் என்ன?
▪️வரலாறு ரீதியாக பார்த்தால் சில சாதி / சமூகத்தை மட்டும் நூற்றாண்டுகளாக கல்வி, வேலை, செல்வம் எல்லாத்துலயும் பின்தங்க வைத்திருக்காங்க.
▪️இதை சமநிலையாக்க, அரசியலமைப்பு SC, ST, OBC, EWS மாதிரி குழுக்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதத்தை சீராக வச்சு பாதுகாப்பு கொடுக்கணும் சொல்லுவதே இடஒதுக்கீடு.
இந்திய அளவிலான சதவிகிதம் இதுதான்:
▪️SC – 15%
▪️ST – 7.5%
▪️OBC (இதுல BC + MBC மாதிரியான பல இடைநிலை சாதி குழுக்கள் அடங்கும்) – 27%
▪️EWS (பொருளாதார ரீதியா பலவீனமான, General/OC-ல வரும் சிலர்) – 10%
▪️மொத்தம் ரிசர்வேஷன் 59.5% (இதுல physically disabled, veterans போன்ற தனி ரிசர்வேஷனும் இன்னொரு கணக்கு).
இது டெல்லி, சென்ட்ரல் யூனிவர்சிட்டி, கேந்திரிய அரசு வேலைகள் மாதிரி இடங்களுக்கான முறை.
தமிழ்நாட்டில் எப்படி இருக்கு?
தமிழ்நாட்டுல நீங்க கிட்டத்தட்ட எல்லா வகைகளிலும் பாக்குற number-கள் இதுதான்:
▪️Open Competition (OC) – 31% (எல்லாருக்கும் இது பொருந்தும். அதாவது யார் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம் என்ற open category ; BC/MBC/SC/ST எல்லாரும் mark இருந்தா இங்கவும் வரலாம்)
▪️Backward Classes (BC) மற்ற மதங்களைச் சேர்ந்த BC– 26.5%
▪️BC (முஸ்லிம்) – 3.5%
▪️Most Backward Classes / Denotified Communities (MBC / DNC) – 20%
▪️Scheduled Castes (SC) – 18%
▪️Scheduled Tribes (ST) – 1%
இதன் மூலமா தமிழ்நாட்டுல மொத்த ரிசர்வேஷன் 69% ஆகுது.
SC / ST / MBC / BC / OC / EWS – யாருக்கு என்ன?
▪️SC (Scheduled Castes) – வரலாறாக மிக பெரிய ஒடுக்குமுறைக்கு உண்டான சமூகம்; கல்வி மற்றும் வேலைகளில் தனியா 18% (TN), 15% (Centre) இடங்கள் கொடுக்க பட்டு இருக்கிறது.
▪️ST (Scheduled Tribes) – பழங்குடியினர், காடு/மலைப் பகுதிகளில் வசிப்போர்; தமிழ்நாட்டுல சுமார் 1% ரிசர்வேஷன், இந்திய அளவுல 7.5%.
▪️BC (Backward Classes) – வரலாற்று ரீதியாக சமூகம், கல்வியில் பின்தங்கி இருக்கும் பல்வேறு சாதிகள். தமிழ் நாட்டில் BC + BC (முஸ்லிம்) சேர்ந்தா 30% ஆகுது.
▪️MBC (Most Backward Classes) – BC-வுடனேயே இருந்தாலும் இன்னும் அதிக பின்தங்கி இருப்பதுக்காக தனியா பிரிச்ச குழு; TN-ல 20%.
▪️OC / General – எந்த ரிசர்வேஷனும் இல்லாத பகுதி; தமிழ்நாட்டுல 31% சீட்டுகள் open; இதுலயும் BC/MBC/SC/ST எல்லாரும் cut-off வச்சுருந்தா fill பண்ணிக்கலாம்னு என்ற முறை.
▪️EWS (Economically Weaker Sections) – General/OC யில் வர்ற, ஆனா குறிப்பிட்ட வருமான வரம்புக்குள் இருக்கிற economically weak குடும்பங்களுக்கு சென்ட்ரல் லெவல் 10% ரிசர்வேஷன்; பல மாநிலங்களும் இதை ஏற்றுக்கிட்டிருக்காங்க.
“Seat” எப்படி fill ஆகுது?
இதை simple-ஆ ஒரு example-ஆ நெனச்சுக்கோங்க (சரியான சதவிகிதம் explain பண்ணுறதுக்கே):
▪️ஒரு கல்லூரில 100 சீடுனு இருக்குனு வைங்க.
Central system இருந்தா:
15 seat – SC
7 அல்லது 8 seat – ST
27 seat – OBC (இதுலே BC/MBC போன்றவங்க)
10 seat – EWS
மீதிஇருக்கும் சுமார் 41 seat – OC / General (எல்லாருக்கும்-open).
தமிழ்நாட்டுல 100 சீட்டுனு இருக்குன்னு வைங்க
31 சீட் – Open Competition
26.5 சீட் – BC
3.5 சீட் – BC (Muslim)
20 சீட் – MBC/DNC
18 சீட் – SC
1 சீட் – ST
இந்த “சீட்” லிஸ்டை ஒரு “Roster” னு சொல்லுறாங்க – 200 point roster, 100 point roster மாதிரி tables அரசு துறை ஒவ்வொன்றுக்கும் இருக்கு. எந்த எண்ணில இருக்கிற சீட் யாருக்கு reserve ன்னு அங்கலே fix பண்ணி வச்சிருப்பாங்க.
இதனை genZ தலைமுறை எப்படி புரிஞ்சிக்கணும்?
▪️இடஒதுக்கீடு என்பது “யாரோட சீட்டையும் இன்னொருவர் மற்றவரிடமிருந்து பறிக்கிற” system இல்ல; “நூறு பேர்ஓடும் போது அனைவரும் சமமாக வர chance குடுக்குற” system.
▪️OC / General-ல இருக்கும் ஒரு வலிமையான குடும்பம் EWS வரம்புக்கு கீழே இல்லனா, தனியா ரிசர்வேஷன் கிடையாது; ஆனா BC/MBC/SC/ST எல்லாரும் திறமையுடன் OC சீட்டுகளுக்குள்ளயும் போட்டியிடலாம்.
▪️மிக அதிகமாக தனியார்மயம் வரும் இந்த காலத்தில் பொது துறை நிறுவனங்கள் மத்திய மாநில அரசுகளால் இழுத்து மூடும் இக்காலத்தில், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற முழக்கத்தை நாம் வைக்க வேண்டும்.
▪️அமெரிக்கா மாதிரி ஒரு பிற்போக்கான நாட்டில் “Black Affirmation” என்று அங்கு இருக்கும் கம்பெனிகள் நடைமுறை படுத்துகிறார்கள். அரசு நினைத்தால் மிக கண்டிப்பாக தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வரலாம், அதற்கான போராட்டத்தை Gen Z தலைமுறையாகிய நம்மிடமே உள்ளது.
இட ஒதுக்கீடு சரியாக செயல்படுத்தப்படுகிறதா?▪️
- நாம் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும் data 1931 இல் பிரிட்டிஷ் அரசு எடுத்த சாதி வாரி கணக்கெடுப்பு அடிப்படையில் கொடுத்து கொண்டு இருக்கிறோம்.
▪️1931 பிறகு இந்தியா இன்னும் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை அல்லது எடுத்ததை வெளியிடவில்லை என்பது மிகவும் மோசமான ஒன்று.
▪️ 2011 எடுத்த SECC (Socio Economic Caste Census) வெளியிட படவில்லை. மறுபடியும் SECC எடுத்த பிறகு முதலில் இருந்து வகைப்படுத்தினால் தான் உண்மையான சமூக நீதி நிலை நாட்ட படும்.
▪️அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பல பண்ணையார் ஜாதிகளுக்கு மிக அதிகமாக இட ஒதுக்கீடு செல்கிறவாறு செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக சட்டனாதான் கமிஷன் கொடுக்கும் அறிக்கையில் பணக்கார பண்ணையார் ஜாதிகள் இட ஒதுக்கீடு மூலம் நிறைய பலன் பெறுகின்றன. நியாயமாக கிடைக்க வேண்டிய ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பது இல்லை என்று சொல்கிறது.
சட்டனாதான் அறிக்கையில் குறிப்பிட பட்ட சில விஷயங்கள்:
Vadugas, Thulluva Vellalas, Aghamudiyans, Gavaras, Veerakodi Vellalas, Sourashtrans, Sadhu Chettis, Kaikolan (Sengunthar and Sozhia) and Devangas போன்ற ஜாதிகள் பெற்ற பலன்களை பாப்போம்
⚫ மக்கள் தொகையில் 11.3% இருந்தாலும் அவர்கள் Non Gazetted posts (அரசிதழ் பதிவுபெறா ஆலுவுலர் பதவிகள்) இல் 37% பேர் இருக்கின்றனர்.
⚫ மக்கள் தொகையில் 11.3% இருந்தாலும் Gazetted posts(அதிகார பூர்வ அரசு பதவிகள்) இல் 48% வேலையில் இருக்கின்றனர்.
⚫ மக்கள் தொகையில் 11.3% இருந்தாலும் 44% சதவீதம் engineering படிப்புக்கு செல்கின்றனர்.
⚫ மக்கள் தொகையில் 11.3% இருந்தாலும் MBBS மருத்துவ துறையில் 34% இருக்கிறார்கள்.
இதனால் இதர சமூகங்கள் அந்த இட ஒதுக்கிடு வாய்ப்பை பெற முடியாமல் போகிறது அல்லது அந்த சமூக மக்கள் பங்கை பணக்கார பண்ணயார் சமூகங்கள் எடுத்து செல்கின்றன.
▪️ இதை தீர்க்க ஒரே வழி சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து அந்த சமூகங்களுக்கு உரிய சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும்.
இட ஒதுக்கீடும் இந்தியாவும்:
▪️ இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசியலைப் பொறுத்த வரை எப்போதும் பல பிரச்சனைகளை கிளப்பும் ஒரு அரசியல் நிகழ்வு தான். அதை இந்திய ஆளும் வர்கம் மிக மோசமாக தனக்கு ஏற்றார் போல சகட்டுமேனிக்கு கையாண்டுள்ளது.அதை சரி செய்ய வேண்டும்.
▪️ இடஒதுக்கீடு ஒரு சர்வரோக நிவாரணி கிடையாது என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும். அனைத்து பிரச்சனைகளுக்கும் அதை கொடுகத்து தீர்வு காண முடியாது. ஆனால் அது ஒரு பக்கம் உரிமையை நிலை நாட்டுகிறது.
▪️ இங்கு இருக்கும் வர்க-சாதி பேதங்களை கலைய நாம் மிக பெரிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
▪️இப்போது இருக்கும் வலது சாரி பாஜக அரசு இட ஒதுக்கீட்டை நீர்த்து போக தங்களால் என்ன முடியுமோ அதை அனைத்தையும் செய்கிறது. எனவே ஐடா ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதி வாரி கனக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியத்தை நாம் அனைவரும் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
இடஒதுக்கீட்டிற்காக பாடு பட்ட எண்ணற்ற தலைவர்கள் இயக்கங்களை நாம் இந்த கட்டுரையின் வாயிலாக நினைவு கூறுவோம் பெரியார், அம்பேத்கர், VP Singh, ஆணைமுத்து, கம்யூனிஸ்ட்கள் மற்றும் பலர்.
கட்டுரையாளர்: குத்தூசி.
உதவி: Common Man (@common_man_ak)