Tamil Marx

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம் அம்பானி அதானிகளுக்காக மட்டுமே வளர்கிறது.

இந்திய பொருளாதாரம் அம்பானி அதானிகளுக்காக மட்டுமே வளர்கிறது.
  • PublishedDecember 7, 2023

நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 7.6 GDP ஆக உயர்ந்துள்ளதாக மோடி அரசுக் பெருமிதம் பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால் அந்த வளர்ச்சியை பெரும் கோடீஸ்வரர்களுக்கான வளர்ச்சி என்பது உண்மை.

நம் நாட்டின் உண்மையான பொருளாதார நிலை என்ன என்பது தொடர்பாக சமீபத்தில் வெளியாகியுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையைக் பார்த்தால் மிகவும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். 2023 மார்ச் மாதத்துடன் முடியும் நிதியாண்டில் நம் நாட்டிலுள்ள குடும்பத்தினரின் வங்கி சேமிப்புகள்,ரொக்கம் மற்றும் முதலீடுகள் உட்பட நிதி சம்பந்தமான சொத்துக்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 விழுக்காடு அளவிற்குக் கூர்மையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

அதே சமயத்தில் குடும்பத்தினர் வாங்கும் கடன் தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. இது, நாடு சுதந்திரம் பெற்றபின்னர் இரண்டாவது உயர்ந்தபட்ச அதிகரிப்பாகும் (second highest annual increase). 

அதேபோன்றே நாட்டிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் வாங்கும் கடன்கள் வீழ்ச்சி அடைந்திருப்பதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் தனி நபர் கடன்கள் எனப்படும் ‘பர்சனல் லோன்கள்’ நடப்புக் காலாண்டில் அதி கரித்திருப்பது மக்களின் கடன்சுமை யும், அதனால் விளைந்திடும் வேத னைகளும் அதிகரித்து, பொருளாதார நிலைமை மேலும் மந்தமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கான தெளிவான சமிக்ஞைகளாகும்.

இத்தகைய தொழில்நுட்பப் பிரச்ச னைகளுடன், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் திசைவழி யைப் பற்றியும் விரிவான அளவில் நாம் பார்த்திட வேண்டும். பணக்காரர் களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் வரிச்சலுகைகள் வாரி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, இத்துடன் அவர்களுக்கு ஊக்கத்தொகைகளும் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இது நாட்டிலுள்ள பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளியை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

மோடி அரசாங்கத்தின் கூட்டுக் களவாணிகளாக விளங்கும் உச்சத்தில் இருக்கும் 1 விழுக்காடு கார்ப்பரேட்டு களின் உண்மையான வருமானம், 2019-இல் 7.9 லட்சம் கோடி ரூபாய்களாக இருந்ததில் இருந்து, 2022-இல் 10.2  லட்சம் கோடி ரூபாய்களாக உயர்ந்திருக் கிறது. ஆனால், அதே சமயத்தில்  கீழ்நிலையில் உள்ள 25 விழுக்காட்டி னரின் உண்மை ஊதியம் 11 விழுக்காடு குறைந்து 3.8 லட்சம் கோடி ரூபாயி லிருந்து 3.4 லட்சம் கோடி ரூபாய்களாகக் குறைந்திருக்கிறது. 

இத்தகு நிலையில்தான் இந்தியப் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற்றுக் கொண்டிருப்பதாக தொட ர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

உலகில் வல்லமை பொருந்திய பொருளாதார நாடாக இந்தியா தலை தூக்கிக் கொண்டிருக்கிறது என்று சமீபத்திய ஜி20 உச்சிமாநாட்டின்போது சித்தரிக்கப்பட்டது. ஆனால்  உண்மை என்னவென்றால், ‘ஜி20’ நாடுகளுக் கிடையே, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (per capita GDP) இந்தியா மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது என்பதாகும். இது மறைக்கப்பட்டது.

மனிதவள வளர்ச்சிக் குறியீடுகளி லும் இந்தியா மிகவும் அடிநிலை யில்தான் இருந்து வருகிறது. இங்கே  ப. சிதம்பரம் கூறியதைப் போன்று தொழிலாளர் படையின் பங்களிப்பு விகி தத்திலும் (Labour Force Participa tion Rate), மிகவும் கீழ்நிலையில்தான் இந்தியா இருந்து வருகிறது. இது, உயர் மட்ட அளவிலான வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பிரதிபலிக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி தொடர்ந்து வீழ்ந்துவருவது, பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகத் திகழ்கிறது. இது உள்நாட்டுத் தேவை அளவுகளையும் வீழ்ச்சியடையச் செய்து, அதன் தொடர்ச்சியாக முதலீடு களின் வீழ்ச்சிக்கும் இட்டுச்செல்கிறது.  இதன் பொருள் வேலை உத்தரவாதத் தின் அளவுகள் மேலும் வீழ்ச்சியடை யும் என்பதாகும்.

சென்ற ஆண்டு பொருளாதாரத்தில் முதலீடுகளுக்கான புதிய முன்மொ ழிவுகள் கடுமையாக வீழ்ச்சியடைந் தது. சுமார் 72.5 விழுக்காடு அள விற்கு அரசுத்துறைகளிலும், 79 விழுக்காடு அளவிற்கு தனியார் துறை களிலும் முதலீடுகள் வீழ்ச்சி அடைந்தன.

‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ (‘Make in India’) என்கிற முழக்கம் மிகப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த முழக்கம் 2014-லிலிருந்தே செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தித் துறை வளர்ச்சி (Manufacturing sector growth) இந்தப் பத்தாண்டு களில் 12-14 விழுக்காடு இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால், உண்மை நிலை என்னவென்றால், 2013-14இலிருந்து சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 5.9  விழுக்காடு அளவிற்குத்தான் வளர்ச்சி விகிதம் இருந்திருக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் வேலைகேட்டு கிராமப்புற விவசாயி கள் கோரிக்கை விடுத்து வருவதி லிருந்து கிராமப்புறத்திலும் பொருளா தாரம் மிகவும் மோசமான முறையில் ஆழமாகியிருப்பதைப் பிரதிபலிக் கிறது. ஆயினும் இத்திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு சென்ற பட்ஜெட்டில் கடுமை யாக வெட்டிக் குறைக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக அதானி குழுமத்தில் தில்லுமுல்லுகள் புதிய சாட்சியமாக உருவாகி இருக்கிறது. இந்தக் குழு மத்தின் பங்குச்சந்தை விலைகளில் தில்லுமுல்லுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக‘பைனான்சியல் டைம்ஸ்‘, ‘கார்டியன்‘ போன்ற இதழ்கள் குறிப்பிட்டிருக்கின்றன. இவற்றின் மீது ஆழமான விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டும்.

எளமரம் கரீம், எம்.பி

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *