Tamil Marx

21 ஆம் நூற்றாண்டில் சீன சோசலிசம்

கல்வியும்-தொழில்கல்வியும் பயங்கரவாதத்தை வீழ்த்திய பேராயுதம் – அ. பாக்கியம்

கல்வியும்-தொழில்கல்வியும் பயங்கரவாதத்தை வீழ்த்திய பேராயுதம் – அ. பாக்கியம்
  • PublishedJune 10, 2026

வறுமை வேலையின்மை மாற்று வேலை வாய்ப்புகள் இல்லாமல் குறைந்த அளவிலான கல்வி ஆகியவையே வன்முறை தீவிரவாதத்திற்கான பின்னணி காரணங்களாகும். அத்துடன் மத நம்பிக்கைகள் இன வேறுபாடுகள் மற்றும் அரசியல் சித்தாந்தங்களின் வன்முறை தீவிரவாத குழுக்களின் சிதைவு இவற்றுடன் இணைந்த சுரண்டல் ஆகியவைகளும் காரணங்களாகும்.(வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான முக்கிய நாடுகளின் திட்டத்திலிருந்து)

தீவிரவாதத்தின் செயல் வடிவமாக இருக்கக்கூடிய பயங்கரவாதம் மனித குலத்தின் பொதுவான எதிரிகள். இவை இரண்டையும் எதிர்த்து சர்வதேச சமூகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒழித்துக்கட்டி மக்கள் வாழ்விற்கான சூழலை உறுதி செய்வது ஒரு அரசின் கடமையாகும். 1990 முதல் உலகளாவிய தீவிரவாதமும், பயங்கரவாதமும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், ரஷ்யா, துருக்கி, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, இலங்கை போன்ற நாடுகளிலும் பல பிராந்தியங்களிலும் பெரும் உயிரிழப்பு களையும் உடமை சேதாரங்களையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை உலகம் அறியும்.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொண்ட நீண்ட வரலாற்றை உடையது. 20ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் அதாவது 1940 ஆம் ஆண்டுகளில் தீவிரவாதமும், பிரிவினைவாதமும் பான்-துருக்கியம், பான் இஸ்லாமியம் என்ற பெயரில் பரவ ஆரம்பித்தது. இதன் தொடர்ச்சியாக ஜின்ஜியாங் மாகாணத்தை பிரித்து கிழக்கு துருக்கிஸ்தான் என்ற தேவ ராஜ்ஜிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் முயன்றார்கள். சீனாவை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை முன்வைத்து பயங்கரவாத நடவடிக்கைகளில் இறங்கினார்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக புரட்சி நடைபெற்று சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட பிறகு தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி மக்களை வென்றெடுத்தார்கள்.

1990 ஆம் ஆண்டுகளில் சர்வதேச சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டது. சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு தேசிய இன பிரச்சனைகள் சோவியத் ஒன்றியத்தில் தலை தூக்கியது. இதனால் பல தனித்தனி நாடுகள் உருவாகியது. கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள் சிதைவுகளுக்கு உள்ளாகி பல நாடுகளாக மாறியது. இந்த மாற்றங்களில் அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் வலுவான தலையீடுகள் இருந்தது. இதே காலத்தில் சீனாவில் ஏற்பட்ட தியானன்மென் சதுக்கம் போராட்டங்களும், அமெரிக்கா ஈராக் மீது படையெடுப்பு போன்ற சங்கிலிதொடர் நிகழ்வுகள் பிரிவினை சக்திகளை ஊக்குவித்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கிழக்கு துர்கிஸ்தான் என்ற பிரிவினை கோஷங்கள் உயிர்பெற்றது.

1990 முதல் 2016 ஆம் ஆண்டுகளின் இறுதிவரை ஜின்ஜியாங் மாகாணத்தில் பிரிவினைவாதிகளும், மதத்தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் குண்டு வெடிப்புகளையும், படுகொலைகளையும், தீ வைப்புகள், தாக்குதல்கள், கலவரங்கள் ஆகியவற்றை விரிவான முறையில் செய்வதற்கான சதிகளில் இறங்கினார்கள். இவர்களின் இந்த நடவடிக்கைகளால் பல அப்பாவி மக்களும் நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகளும் மரணம் அடைந்தனர். மேலே குறிப்பிட்ட 20 ஆண்டு காலங்களில் ஜின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாத செயல்கள் அடிக்கடி நடைபெற்று கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. சீனாவின் வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறியது.

வளர்ச்சியின்மையை பயன்படுத்துவது

தீவிரவாதிகள் பலவீனமா கண்ணிகளை தங்களது செயலுக்க சாதகமாக பயன்படுத்தினர். அதிக மதநம்பிக்கை உள்ள மக்கள், இதர சமுகங்களுடன் அதிக தொடர்பில்லாத மக்களை குறிவைத்தனர். அது மட்டுமல்ல விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் போதுமான அளவுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாத நிலைமைகளையும், குறைவான நவீன அறிவியல் அறிவு இருக்கின்ற பகுதியிலும், குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்கள் தொகை குவியலாக இருக்கக்கூடிய இடங்களிலும் இந்த தீவிரவாத செயல்களை முன்னெடுத்தனர்.

மத கோட்பாடுகளையும் அதன் நியதிகளையும் வேண்டுமென்றே சிதைத்து பிற்போக்குத்தனமான கருத்துக்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். மதச்சார்பற்ற கருத்துக்களையும், அதன் சாதனைகளையும் மறுத்து சொர்க்கத்தில் நுழைவதற்கான ஒரு புனிதப் போரில் ஈடுபட்டு தங்களின் மத நம்பிக்கைகளுக்காக இறக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள். மதத்தின் நியதிகளை கடைபிடிக்கக்கூடிய உயர்ந்த மத தலைவர்களை இந்த தீவிரவாதிகள் ஒதுக்கி வைத்தது மட்டுமல்ல துன்புறுத்தி படுகொலை செய்தார்கள். சீனாவையும், சீன மொழியையும் நவீன அறிவியலையும் புறக்கணிக்க வேண்டும் என்று தூங்கிவிட்டது மட்டுமல்ல, அரசியல் சட்டத்தை மீற வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்கள். ஒவ்வொருவரின் தலைவிதி முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதன்படிதான் அனைத்தும் நடக்கும் என்று முலைச்சலவை செய்தனர்.

தீவிரவாதமும் பயங்கரவாதமும் உருவாவதற்கு அரசியல் பொருளாதாரம் மற்றும் கலாச்சார காரணிகள் அடிப்படையாக அமைகின்றது உலகளாவிய பல நாடுகளில் அல்லது பிராந்தியங்களில் இது போன்ற தீவிரவாத செயல்கள் தலைதூக்குகின்றன. ஒவ்வொரு நாடும் தீவிரவாதத்தை தடுப்பதற்கு அவர்கள் ஏற்றுக் கொண்டபாநடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். இந்த நடவடிக்கை அந்தந்த நாட்டின் வரலாற்று அம்சங்களையும் கலாச்சார மரபுகளையும் சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலைமைகளையும் கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றை சார்ந்தும் அமைந்திருக்கிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் தீவிரவாதத்தையும் பிரிவினைவாக பயங்கரவாதத்தையும் ஊற்றிக் கொள்வதற்கு சீன சூழலுக்கு ஏற்ற நடைமுறைகளை கடைபிடித்தார்கள்..

சட்டம் சார்ந்த கல்வியும் பயிற்சியும்

சீனாவில் சட்டத்தின் ஆட்சி என்ற உணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது முதல் தேவியாக இருந்தது. எனவே சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்புச் சட்டம் குற்றவியல் சட்டம் அறிவியல் நடைமுறைச் சட்டம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் மத விவகாரங்களுக்கான மாகாணத்தின் உள்ளூர் விதிமுறை சட்டங்கள் ஆகியவற்றை பற்றி விரிவான முறையில் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது. கல்விச்சாலைகள் இந்த கருத்துக்களின் வாகனமாக அமைந்தது.

இதன் அடிப்படையில் சட்ட விரோத செயல்களையும் குற்றச் செயல்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். குற்றச் செயல்கள் பொது பாதுகாப்பு என்ற அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு குற்றம் நடைபெறுவதற்கான சூழல்கள் என்ன என்பதையும் இச்செயலில் ஈடுபட்டவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து கொண்ட பொழுது அவர்கள் மீதான வழக்குகள் தொடுவதில்லை என்று கைவிடப்படும் முறை கடைபிடிக்கப்பட்டது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு கட்டாயமாகவோ அல்லது தூண்டுதல் பேரில்லையோ தங்களை அறியாமல் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தனியான பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு சட்டத்தின் ஆட்சி பற்றியும் சமூக வளர்ச்சி பற்றியும் போதிக்கப்பட்டது. மூன்றாவதாக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலை பெற்றவர்களுக்கான பிரத்தியேகமான திட்டங்களை உருவாக்கி அவர்களை பொது சமூகத்தில் இணைப்பதற்கான முயற்சிகள் திட்டமிடப்பட்டது.

மேற்கண்ட 3 பகுதி இளைஞர்களையும் இணைப்பதற்கு அவர்களுக்கு கல்வி அளிப்பது தொழிற்கல்வி அளித்து வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கக் கூடிய பணிகளை செய்தார்கள். இந்தக் கல்வியும் தொழிற்கல்வியும் அனைத்தும் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டது.

பயிற்சியின் உள்ளடக்கம் பாதையை மாற்றியது.

மதத் தீவிரவாதத்தையும் அடிக்கடி நிகழும் பயங்கரவாத சம்பவங்களின் வரவழை கட்டுப்படுத்துவதற்கும் இந்த மாகாணத்தில் தொழிற்கல்விக்கான அதை உருவாக்கியது மட்டுமல்ல பயிற்சி மையங்களையும் உருவாக்கினார்கள். கல்வி அறிவை வளர்ப்பது தொழில் திறன்களை இந்த இளைஞர்களிடம் உருவாக்குவது தீவிரவாத கொள்கைகளில் இருந்து அரசியல் ரீதியாக வென்றெடுப்பதற்கான பாடத்திட்டத்தை செயல்படுத்தினார்கள்.

பயிற்சி பெறக்கூடியவர்களுக்கு அவர்களின் படிப்புக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் வழங்குகிறார்கள் இவர்களுக்கு என்று உருவாக்கப்பட்ட பாட புத்தகங்களை பயன்படுத்தி அதற்கான ஆசிரியர்கள் பணி அமர்த்த படுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் கல்வியும் வேலைவாய்ப்பையும் பெறுவதற்கான தொழில்கல்வித் திறனை வளர்க்க முடிகிறது. தரமான சீன மொழியை பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயிற்சி கொடுப்பது மூலமாக சீன நாடு முழுவதும் செல்வதற்கும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்கும் தொழில் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும் பிற இன குழுக்கள் உடன் தங்குதடையின்றி தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த பயிற்சி மையங்கள் அடிப்படை காரணமாக அமைந்தது.

அதே நேரத்தில் இனச் சிறுபான்மை இளைஞர்களின் மொழிகளை பயன்படுத்துவதற்கும் படிப்பதற்குமான உரிமைகளும் வழங்கப் பட்டன. அதற்கான எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் உரிமைகள் இருந்தது. கல்வி மற்றும் பயிற்சி என்பது ஒரு நபரின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தவும் அல்லது கட்டுப்படுத்தவோ இருக்கக்கூடிய ஒரு நடவடிக்கை அல்ல அதற்கு மாறாக பயங்கரவாதம் மற்றும் மத தீவிரவாத கருத்துக்களில் இருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக மட்டுமே இந்த பள்ளிகளும் கல்வி நிலையங்களும் பயிற்சி நிலையங்களும் செயல்பட்டது. இந்த மையங்களில் இணைவதற்கான ஒரே அளவுகோல் பயிற்சி பெற வரக்கூடியவர் பயங்கரவாத செயல்களிலோ தீவிரவாதம் சம்பந்தப்பட்ட சட்டவிரோத செயல்களிலோ ஈடுபட்டாரா என்பது மட்டும்தான் அளவுகோலாக இருந்தது. இந்த பயிற்சி மையங்களில் அவர்களின் பிராந்தியம் இனம் அல்லது மதத்துடன் எந்த விதமான தலையிடும் செய்யாமல் செயல்படுத்தப்பட்டது

அனைத்து இனக்குழுக்களின் பழக்கவழக்கங்களும், அவர்களின் பேச்சு மற்றும் எழுத்து மொழிகளைப் பயன்படுத்தும் உரிமையும் மையங்களில் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன. மையங்களில் உள்ள விதிமுறைகள், பாடத்திட்டங்கள் மற்றும் மெனுக்கள் அனைத்தும் உள்ளூர் இன மொழிகளையும் நிலையான சீன மொழியையும் பயன்படுத்துகின்றன. அனைத்து இனக்குழுக்களின் பழக்கவழக்கங்களும் முழுமையாக மதிக்கப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன, மேலும் பல்வேறு வகையான சத்தான உணவுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கல்வி மற்றும் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவர்களின் மத நம்பிக்கை சுதந்திரத்தை பாதுகாக்கின்ற அதே நேரத்தில் மத விவகாரங்கள் தொடர்பான விதிமுறைகளும் கண்டிப்பான முறையில் கடைபிடிக்கப்படுகிறது. மதப் பிரச்சாரம் மத நடவடிக்கைகள் மத அமைப்புகளை நிறுவுதல் போன்றவற்றை பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முழுமையாக தடை செய்யப்படுகிறது. அதாவது கல்வி மற்றும் மதத்தை பிரித்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் இது ஒன்றாகும். பயிற்சி பெறக்கூடியவர்கள் பயிற்சி நிலையங்களில் மத நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவோ அதாவது நடத்துவதற்கோ பங்கேற்பதற்கோ அனுமதி இல்லை அவர்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட இடங்களிலோ மத நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

அனைத்து பயிற்சி பெறுபவர்களும் பொது ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர், மேலும் இலவச சுகாதார பரிசோதனைக்கு உரிமை உண்டு. குடும்பக் கவலைகளிலிருந்து அவர்களை விடுவிக்க, ஜின்ஜியாங்கின் அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள், சமூகப் பாதுகாப்பு, கல்வி, மருத்துவ சேவை மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் முன்னுரிமை கொள்கைகளின் அடிப்படையில் பயிற்சி பெறுபவர்களின் குடும்பங்களை சமமாக நடத்துகிறார்கள். மேலும் அவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் வேலை, அன்றாட வாழ்க்கை, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் மருத்துவ சேவைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க உதவுகிறார்கள்,

கல்வியும் பயிற்சியும் பலனை கொடுத்தது

பயங்கரவாதமும் மத தீவிரவாதமும் சட்ட விரோத நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கல்வியும் பயிற்சியும் அதற்குரிய பலனை கொடுத்துள்ளனர். சட்டத்தின் ஆட்சி பற்றிய மக்களின் புரிதல் பல மட்டம் உயர்ந்துள்ளது குடிமக்கள் அரசியல் அமைப்பிற்கும் பிற சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற ஒரு பொதுவான அங்கீகாரத்தை நோக்கி முன்னேறி உள்ளார்கள். தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட இளைஞர்கள் தங்களது கல்வி அறிவையும் சீன மொழி பேசும் திறனையும் தொழில் திறனையும் அதிகமாக பெற்றிருப்பது நாள் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மத தீவிரவாதம் மதத்தை சிதைவு படுத்தக்கூடியவர்களின் செயல் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள் மத தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கக்கூடிய அளவிற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

சமூக சூழலில் சீன மக்கள் குடியரசு எடுத்த முயற்சிகள் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கல்வியும் பயிற்சியும் மனநிலையை மாற்றியது மட்டுமல்ல இனக்குழுக்கள் இடையே பரஸ்பரம் மரியாதையை உயர்த்தி உள்ளது. அதே நேரத்தில் உணவு உடை வீட்டு வசதி போக்குவரத்து திருமணங்கள் இறுதிச் சடங்குகள் மற்ற பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நவீன சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் தங்களது தகவமைப்பு திறன்களை மக்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கல்வியும் பயிற்சியும் பெற்றவர்கள் காலாவதியான மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் கைவிட்டு உள்ளனர். நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை நோக்கியும் பண்பட்ட வாழ்வை நோக்கியும் விரும்பிச் செல்லுகின்றனர். சீன மக்கள் குடியரசின் இந்த முயற்சிகள் ஜின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாதத்தையும் மத தீவிரவாதத்தையும் குறைத்து உள்ளது மட்டுமல்ல இக்காலத்தில் எதுவும் நடைபெறவும் இல்லை.

சமூகச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களும் அமைதியான அதே நேரத்தில் இயல்பான நிலைமைகள் திரும்பிய பிறகு 2018 ஆம் ஆண்டு முதல் சுற்றுலா தொழில் பிரமாண்டமான வளர்ச்சியை கண்டுள்ளது. ஜின்ஜியாங் மாகாணத்திற்கு சீனாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 150 மில்லியனுக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இது ஆண்டுக்கு 40 சதவீதம் உயர்வாகும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டும் 2.6 மில்லியன் பேர் அதாவது 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

சர்வதேச சமூகம் ஜின்ஜியாங்கின் முயற்சிகள் குறித்து நேர்மறையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. கல்வி மற்றும் பயிற்சி சர்வதேச சமூகத்தின் பொதுவான ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. டிசம்பர் 2018 இறுதியிலிருந்து, கிட்டத்தட்ட 1,000 பேர் ஜின்ஜியாங்கிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் சீனாவிற்கான வெளிநாட்டு இராஜதந்திர தூதர்கள், ஐ.நா. அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் ஜெனீவாவை தளமாகக் கொண்ட மூத்த இராஜதந்திரிகள், அத்துடன் பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், செய்தி ஊடகங்கள் மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குழுக்கள் (அல்லது பிரதிநிதிகள்) உள்ளனர். களப்பயணங்கள் மூலம், பலர் உண்மையை உணர்ந்து, கல்வி மற்றும் பயிற்சியை மேற்கொள்வதன் அவசரம், அவசியம், சட்டபூர்வமான தன்மை மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றைப் புரிந்துகொண்டுள்ளனர்.

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் அனுபவம்

சில நாடுகள் தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மையங்களை நிறுவி கல்வி கற்கும் போதனைகளை செய்கிறார்கள். சில நாடுகள் கல்வி மற்றும் மன மாற்ற மையங்களை அமைத்துள்ளார்கள். மேலும் சில நாடுகள் சிறைச்சாலைகள் சமூக நலக்கூடங்கள் இரண்டிலும் பயங்கரவாதிகளை வயிற்றுவித்து மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். சில நாடுகள் தீவிரவாதிகள் இஸ்லாமிய கோட்பாட்டை தவறாக சித்தரிப்பதை கண்டிக்கிறார்கள் ஆனால் மதத்தின் உள்ளடக்கத்தை ஊக்குவித்து மிதமான இஸ்லாத்தை ஆதரிக்கின்றார்கள். வேறு சில நாடுகள் அவர்களை தனிமைப்படுத்தி பயிற்சியில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

ஆனால் சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாதத் தாலும் மத தீவிர போதனைகளாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழிற்கல்வியும் பயிற்சி மையங்களையும் வேலைவாய்ப்பையும் உருவாக்குவதன் மூலம் மற்ற நாடுகளின் முயற்சியில் இருந்து வேறுபட்டு இருக்கிறார்கள். தீவிரவாதம் உருவாகக்கூடிய மூலத்தை கண்டுபிடித்து அவற்றை தீர்ப்பதற்கான முயற்சி தான் இது இந்த குறிக்கோள்கள் வெற்றி கண்டுள்ளது. சின்ஜியாங்கின் தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்கள் குறிப்பிடத்தக்க முடிவுகளை அடைந்துள்ளன, மேலும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளுக்கு அனுபவத்தை பங்களித்துள்ளன. சட்டத்தின் ஆட்சியை ஊக்குவித்தல். சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு சோசலிச நாட்டைக் கட்டியெழுப்ப சீன பண்புகளுடன் கூடிய சோசலிசத்தை வளர்ப்பது அவசியமான தேவையாகும்

அரசாங்கம் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உறுதியான முடிவுகளை அடைய வேண்டும். மக்களின் உயிர்கள், சுகாதாரம், சொத்துக்கள் மற்றும் பிற அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும், பாதுகாப்பான, நிலையான மற்றும் இணக்கமான வாழ்க்கைச் சூழலை வழங்குவதும் ஒரு பொறுப்பான அரசாங்கத்தின் கட்டாயக் கடமையாகும். ஜின்ஜியாங்கில் உள்ள அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசாங்கங்கள், மக்களுக்கு தங்கள் பொறுப்பை மனதில் கொண்டு, பயங்கரவாத மற்றும் மத தீவிரவாத போதனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கும் மறுவாழ்வு அளிப்பதற்கும் பொறுமையான, கவனமான மற்றும் மிகவும் கடினமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. தொழிற்கல்வி மற்றும் பயிற்சியில் வெற்றி பெறுவது நீதியை ஊக்குவிக்கிறது, மக்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கிறது மற்றும் அரசாங்கத்தின் நேர்மறையான பிம்பத்தை அளிக்கிறது.

ஜின்ஜியாங்கில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி பயங்கரவாதம் மற்றும் மத தீவிரவாதம் இனப்பெருக்கம் செய்து பரவ உதவும் நிலைமைகளை திறம்பட ஒழிக்க முடியும் என்பதை நடைமுறை நிரூபித்துள்ளது. தொழிற்கல்வி மற்றும் பயிற்சியில் ஜின்ஜியாங்கின் முயற்சிகளின் குறிக்கோள் பயங்கரவாதம் மற்றும் மத தீவிரவாதத்தின் மூலங்களை அகற்றுவதாகும். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜின்ஜியாங் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளத. முன்னேற்றங்களைச் செய்ய முடியும்.

அ.பாக்கியம்

அடுத்த தொடர் ஜூன் 17 புதனன்று வெளியாகும்

 

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *