Tamil Marx

வேலையின்மை

வேலையின்மை தரவுகளில் குழப்பம் ஏற்படுவது ஏன்?

  • PublishedAugust 3, 2024
  1. வேலையின்மை அதிகரித்துள்ளது எனவும் அதிக வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் மாறி மாறி தரவுகள் வெளிவந்து மக்களை குழப்புகிறது.

 

இதற்கு காரணம் என்ன?

 

இந்திய பொருளாதாரத்தின் சிக்கலான கட்டமைப்பு குறித்து நம்பகமான தரவுகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.

இந்தியாவில் அமைப்புசாரா மற்றும் அமைப்பு சார்ந்த துறைகளைக் கொண்டது.

ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளின் தரவுகளை சட்டப்பூர்வமாக வெளியிடப்படும் வருடாந்திர அறிக்கை மூலம் நம்மால் பெற முடியும்.

94 சதவீதம் தொழிலாளர்களை பிரதிநிதித் துவப்படுத்தும் அமைப்புசாராத துறைக்கு அப்படி ஒரு ஏற்பாடு இல்லை.

வேறு எந்த நாட்டிலும் இந்தத் துறை இவ்வளவு பிரமாண்டமானதாக இல்லை.

ஆனாலும் இங்கே அது பற்றிய விவரங்களை சேகரிப்பதில் அரசு ஆர்வம் காட்டுவதில்லை.

11 கோடி விவசாயப் பண்ணைகளும் 6.5 கோடி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் இங்கே உள்ளன.

ஆண்டுதோறும் இவற்றை கணக்கெடுப்பது கடினம்.

10 வருடத்திற்கு ஒருமுறை மக்கள் கணக்கெடுப்பும், ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நிறுவனமல்லா தொழிலகங்களின் ஆண்டு சர்வே (ASUSE) மூலம் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த ஆய்வை ஆண்டுதோறும் வெளியிட அரசு உறுதியளிக்கிறது.

ஆனால் கடைசியாக 2012 -17 ஆண்டுதான் வெளியிடப்பட்டது.

எனவே இப்போது அரசு தரப்பில் சேகரிக்கும் விவரங்கள் காலாவதியான தரவுகளின் அடிப்படையில் தரப்படுபவை.

வேலையில் இருப்பவர்கள் குறித்து முன்வைக்கு வரையே #PLFS #CMIE ஆகிய இரண்டும் வேலையின்மை குறித்து வெளியிடும் தரவுகளில் பெரிய வேறுபாடுகள் இருப்பதற்கு அடிப்படை காரணமாகும்.

 

அவர்கள் வரையறை என்ன?

 

CMIE சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ( #ILO ) வரையறையை ஏற்கிறது.

அதாவது ஒரு நிறுவனத்தில் செய்யும் வேலை மூலம் வருமானம் பெறுபவர்களை மட்டுமே வேலையில் இருப்பவர்களாக கணக்கிடுகிறது.

ஆனால் PLFS சம்பளம் வாங்காத வேலைகள் அதாவது பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகள், விவசாய பணி செய்வோரையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

சம்பளம் பெறதா இந்த வேலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் கடந்த சில ஆண்டுகளில் 50 முதல் 55 சதவீதம் பேர் வேலை வாய்ப்பை பெற்றதாக ஒரு போலி பிம்பத்தை அரசாங்கம் உருவாக்குகிறது.

அதே நேரத்தில் CMIE இந்த எண்ணிக்கை 40 – 45% எனக் கூறுகிறது. இரண்டிற்கும் இடையே சுமார் ஒன்பது கோடிப் பேர் வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *