லாபத்திற்காக 29 ஆயிரம் மக்களை வெட்டும் அரசாங்கம்
அடுத்த 20 ஆண்டுகளில் அரசிற்கு ரூ.9000 கோடி லாபம் எனவே 29,400 மரங்கள், இரும்பு சுரங்கம் அமைப்பதற்காக வெட்டப்படவுள்ளது !
கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் சந்தூரில் உள்ள வனப்பகுதியில், இரும்புத்தாது சுரங்கங்கள் அமைப்பதற்காக 150 ஏக்கரில் பரவியுள்ள 29,400 மரங்களை வெட்ட ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே 800 ஏக்கரில் சுரங்கம் வெட்டி எடுக்கப்பட்ட இப்பகுதியில் தற்போது 393 ஏக்கரில் சுமார் 600 லட்சம் டன் இரும்பு தாதுக்களை வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் அரசு பொதுத்துறை நிறுவனங்களான SAIL மற்றும் VISL ரூ.9000 கோடி லாபம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
அரசு பொது நிறுவனமாகவே இருந்தாலும் கூட ஏற்கனவே அமைக்கப்பட்ட சுரங்கத்தால் அடைந்த பாதிப்புகளை கொண்டு ஒன்றிய அரசின் இந்த முடிவை கர்நாடகவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், கர்நாடக வனத்துறையும் எதிர்க்கின்றனர்.
இச்சுரங்கம் அமைந்தால் சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் சில கி.மி தொலைவிலேயே உள்ள பாரம்பரிய தொல்லியல் சின்னமான 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரசாமி கோவிலும் பாதிக்கப்படும் என எச்சரிக்கிறது கர்நாடக வனத்துறை.
இம்மாதம் 01ம் தேதி உத்திரப்பிரதேசத்தில் யாத்திரிகர்களுக்கு சாலை அமைக்க 33,776 மரங்கள் வெட்டப்படவுள்ள செய்தி வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
பருவநிலை மாற்றத்தையும் அதன் பாதிப்புகளையும் நேரடியாக மனித சமுதாயம் எதிர்கொண்டு வரும் இந்த காலகட்டத்திலும் இது மாதிரியான சுற்றுச்சூழல் விரோத திட்டங்களை அரசு கண்மூடித்தனமாக கொண்டுவருவது கண்டிக்கத்தக்கது அரசு இத்திட்டங்களை வை விடவேண்டும்.