Tamil Marx

ஆப்பிரிக்கா சர்வதேசம்

30 ஆண்டு கால பெரும்பாண்மையை இழந்தது நெல்சன் மண்டேலாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 

30 ஆண்டு கால பெரும்பாண்மையை இழந்தது நெல்சன் மண்டேலாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 
  • PublishedJune 3, 2024


தென்னாப்பிரிக்க நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த 30 ஆண்டுகால பெரும்பாண்மையை இழந்துள்ளது ஆப்பிரிக்க  தேசிய காங்கிரஸ் கட்சி.


ஆப்பிரிக்க கறுப்பின மக்களின் போராளியான நெல்சன் மண்டேலாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்  கட்சி கடந்த 30 ஆண்டுகளாக பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்று திருப்பு முனையாக 40 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று பெரும்பானமையை இழந்துள்ளது.

அக்கட்சி 2019  ஆம் ஆண்டு  நடந்த பொதுத் தேர்தலில் 57.5 சதவீத வாக்குகள் பெற்றிருந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஆட்சி அமைப்பதற்காக கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது.


வறுமை, வேலையின்மை, பொருளாதார நெருக்கடி ,பொருளாதார சமத்துவமின்மை, அதிக மின்வெட்டு , வன்முறைகள், குடிநீர் பிரச்சனைகள் உள்ளிட்டவைகளுக்கு முறையான தீர்வு கொடுக்காத காரணங்களால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.

அதேவேளையில் நிலச்சீர்திருத்தம், மாற்று பொருளாதாரக்கொள்கை, தனியார்மய எதிர்ப்பு நடவடிக்கை ஆகியவற்றை தீவிரமாக முன்னெடுத்தன் காரணமாக தென்னாப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமாவின் ஸ்பியர் ஆப்  தி நேஷன் கட்சி 12.6 சதவீத வாக்குகள் பெற்று  மூன்றாவது இடத்திலும், 9.4 சதவீத வாக்குகள் பெற்று தென்னாப்பிரிக்க இடதுசாரிகளான பொருளாதார விடுதலை போராளிகள் ( the Economic Freedom Fighters) கட்சி நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர்.


இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கூட்டணி கட்சியின்   தலைவர் ஜான் ஸ்டீன்ஹுய்சென் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும் தென்னாப்பிரிக்காவை மீட்பதற்கான வழி ஆப்பிரிக்கா தேசிய காங்கிரஸ் கட்சியின்  பெரும்பான்மையை உடைப்பதே அதனை நாங்கள் அதைச் செய்துள்ளோம் என்றும்  தெரிவித்துள்ளார். 
இத்தேர்தலில் ஜனநாயக கூட்டணிக்  கட்சி 21.71 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.இது கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போதுத் தேர்தலில் பெற்ற  வாக்குகளை  விட 0.33 சதவீதம் அதிகமாகும்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *