சீனாவில் இருந்து அதிகத்துள்ள இந்திய இறக்குமதி
இந்திய தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு தேவையான தொலைத்தொடர்பு, இயந்திரங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருட்களுக்காக சீனாவையே அதிகம் சார்ந்திருக்கிறது இந்திய அரசு.
பொருளாதார சிந்தனைக் குழுவான Global trade research initiative வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் சீனாவில் இருந்து இந்தியாவின் தொழில்துறைகளுக்கு தேவையான பொருட்கள் இறக்குமதி 21% லிருந்து 30% ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சீனாவிற்கு செய்த ஏற்றுமதியில் பெரிய தேக்கம் ஏற்பட்டுள்ளது என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.
2019 முதல் 2024 வரை, சீனாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி ஆண்டுதோறும் சுமார் $16 பில்லியன் டாலர்களாக தேக்கமடைந்துள்ளது.
அதே நேரத்தில் சீனாவிலிருந்து இறக்குமதியானது 2018-19 ஆம் ஆண்டு இருந்த $70.3 பில்லியன் டாலர்களில் இருந்து 2023-24 இல் $101 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக இந்தியாவிற்கான ஒட்டுமொத்த வர்த்தக பற்றாக்குறை $387 பில்லியனைத் தாண்டியுள்ளது.
மற்ற அனைத்து நாடுகளிலிருந்து இந்தியா செய்யும் மொத்த இறக்குமதியை விட சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதி 2.3 மடங்கு வேகமாக வளர்ந்து வருகிறது.
கடந்த நிதியாண்டில் ( 2023-24 )இந்தியாவின் மொத்த இறக்குமதிகள் $677.2 பில்லியன்களாக இருந்தது, அதில் $101.8 பில்லியன் டாலர்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்தவை.
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சீனாவின் பங்கு 15% ஆகும்.
சீனாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதிகளில் $100 பில்லியன் அல்லது 98.5% முக்கிய தொழில்துறை களுக்கு தேவையான பொருட்கள் ஆகும்.
அதாவது எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் , இயந்திரங்கள், இரசாயனங்கள் ,மருந்துகள்,இரும்பு, எஃகு பிற அடிப்படை உலோகப் பொருட்கள், பிளாஸ்டிக்,ஜவுளி மற்றும் ஆடை, வாகனங்கள், தோல், காகிதம், கண்ணாடி, கப்பல்கள், விமானம் பாகங்கள் ஆகியவை அதிகமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
2023- 2024 காலகட்டத்தில் இந்தியாவின் இரசாயன மற்றும் மருந்து இறக்குமதி 54.1 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில் 15.8 பில்லியன் டாலர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
அதேபோல இந்தியா இறக்குமதி செய்த 18.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களில் 4.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் சீனாவில் இருந்துஇறக்குமதி செய்யப்பட்டது.
அதாவது இந்திய பிளாஸ்டிக் உற்பத்தி துறையின் மொத்த இறக்குமதியில் 25.8% ஆகும்.
இதில் நாம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்ன வென்றால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜவுளி, ஆடைகள், கண்ணாடிப் பொருட்கள், காகிதம், காலணிகள் மற்றும் பொம்மைகள் போன்ற பல பொருட்களால் இந்தியாவில் ஏற்கனவே இந்த பொருட்களை உற்பத்தி செய்து வரும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றை முடக்கும் செயலாகவும். இந்த பொருட்களை எல்லாம் இராகு மதி செய்வதற்கு பதிலாக இந்தியாவிலேயே மிக தரமாக உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.