Tamil Marx

தமிழ் நாடு

ஆணவப் படுகொலை செய்தவர்களை திமுக பாதுகாக்கிறதா?

ஆணவப் படுகொலை செய்தவர்களை திமுக பாதுகாக்கிறதா?
  • PublishedMay 12, 2024

சென்னையில் தலித் இளைஞர் பிரவீன் சாதி ஆணவப்படுகொலை  செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் 2 மாதங்களிளேயே தற்கொலை செய்து கொண்டார்.

அப்பெண்ணின் சார்பில் வழக்காடும்  இடதுசாரியும் மூத்த வழக்கறிஞருமான பவானி பி மோகன், பிரவீன் ஆணவக்கொலையில் இருந்து குற்றவாளிகளை  திமுக தலைவர்கள் பாதுகாப்பதாக தெரிவித்துள்ளார் என தி நியூஸ் மினிட் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது.

சென்னை பள்ளிக்கரணையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஷர்மிளாவை திருமணம் செய்ததற்காக பிப்ரவரி 24 அன்று  22 வயதான தலித் இளைஞரான பிரவீன் அப்பெண் வீட்டினரால் ஆவணப்படுகொலை செய்யப்பட்டார்.  இந்த  கொலை வழக்கில் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மே 11 சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பவானி, பள்ளிக்கரணை காவல்துறை மற்றும் சில அரசு வழக்கறிஞர்களே சர்மிளாவின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே சிபி-சிஐடி அல்லது சிபிஐ மூலம் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

“சர்மிளாவின் தந்தை துரைகுமார் சோழிங்கநல்லூர் திமுக கட்டுமானப் பிரிவின் துணை அமைப்புச் செயலாளராக உள்ளார்‌.  அவருக்கு பல கட்சி தொண்டர்கள் மற்றும் திமுகவில் உள்ள பெரும் தலைவர்களின் ஆதரவும்  உள்ளது. ஒரு சில அரசு வழக்கறிஞர்கள் கூட கொலை செய்தவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக உள்ளனர். மேலும் பள்ளிக்கரணை போலீசாரே ஷர்மிளாவின் குடும்பத்திற்கு சாதகமாக உள்ளனர்.எனவே போலீஸ் விசாரணை பாதிக்கப்படுகிறது என வழக்கறிஞர் மோகன்  தெரிவித்துள்ளார்.


2023 அக்டோபரில் பிரவீன் ஷர்மிளா திருமணம் ஆன பிறகு ஷர்மிளாவின்  தந்தை துரை குமார், தனது மூத்த சகோதரர் நரேஷ் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக ஏற்கனவே தி நியூஸ் மினிட் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.அப்போதே ஷர்மிளா  எழுத்துப்பூர்வ புகாரை கொடுத்ததாகவும் காவல்துறை புகாரை  ஏற்க மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து பேசிய வழக்கறிஞர் மோகன் எழுந்து பூர்வ  புகார் கொடுக்காவிட்டாலும், காதல் ஜோடிகளை பாதுகாப்பது அரசின் கடமை. மேலும் அவர்கள் சாதி மறுப்பு காதல் ஜோடி என்பதால் பள்ளிக்கரணை போலீசார் பாதுகாப்பு அளிக்க கடமைப்பட்டுள்ளனர்.மேலும் மிரட்டல் குறித்து போலீசாருக்கு வாய்மொழியாக தகவல் தெரிவிக்கப்பட்டது இது அவர்களது கடமை என்றார்.


பள்ளிக்கரணை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் (எஸ்ஐ) யோகலட்சுமி, குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆர்பிசி) பிரிவு 164ன் கீழ் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் பதிவு செய்யும் போது, குற்றம் சாட்டப்பட்ட 5 பேரின் பெயரை மட்டுமே குறிப்பிட வேண்டும் என்று ஷர்மிளாவிடம் அழுத்தி கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.  “சர்மிளா தனது 164 அறிக்கையிலேயே இந்த மிரட்டலைக் குறிப்பிட்டுள்ளார்.


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதாக பிரவீனின் குடும்பத்தினருக்கு போலீசார் உறுதியளித்தனர், ஆனால் அதை செயல்படுத்த தவறிவிட்டனர் .  காவல்துறையின் விசாரணை வேகம் குறைந்துள்ளதாகவும், 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் இருந்தும், காவல்துறை இன்னும் ஒரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்‌.


பிரவீனை ஆணவக் கொலை செய்ததாக ஸ்ரீராம் (18), விஷ்ணு (23), தினேஷ் (24), ஜோதி லிங்கம் (25), ஸ்டீபன் குமார் (24) ஆகிய 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) மற்றும் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் பிரிவு 3(2) (v) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


ஷர்மிளாவின் மரணத்தைத் தொடர்ந்து, CrPC இன் பிரிவு 174 இன் கீழ் (தற்கொலை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும் காவல்துறை) காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது.  “சர்மிளாவின் மரணத்தை IPC பிரிவு 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) கீழ் போலீசார் பதிவு செய்ய வேண்டும்” என்று  பி மோகன் கூறினார்.


ஷர்மிளா அவரது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர் நரேஷ் ஆகியோர் பிரவீனின் கொலைக்கும், அவரது தற்கொலைக்கும் காரணமாக இருந்ததாக குறிப்பிட்டு அவரது முந்தைய குற்றச்சாட்டுகளை மீண்டும் வலியுறுத்தும் வகையில் தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியுள்ளார்.

நன்றி

The news minute

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *