Tamil Marx

உக்ரைன்-ரஷ்யா போர் சர்வதேசம்

உக்ரைன் ரஷ்யா போர் இரண்டு ஆண்டுகள்

உக்ரைன் ரஷ்யா போர்   இரண்டு ஆண்டுகள்
  • PublishedFebruary 25, 2024

24 பிப் 2024 அன்று உக்ரைன் ரஷ்யா போர் துவங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.இந்த இரு ஆண்டுகளில் உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு எங்கும் இடம் கொடுக்கவில்லை.

தற்போது வரை இப்போரில் சுமார் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் உக்ரைன் எந்த ஒரு அமைதிப் பேச்சு வார்த்தைக்கும் தான் தயாராக இல்லை என்றே கூறிவருகிறது.குறிப்பாக உக்ரைனின் கூட்டாளி நடுகள் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்து விடாமல் முடக்கி வருகின்றன.


சில தினங்களுக்கு முன் ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற வருடாந்திர முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போது கூட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமைதிப் பேச்சு வார்த்தை பற்றிய யோசனையை ஏற்க மறுத்து விட்டார். அதற்கு பதிலாக போரை தீவிரமாக்க அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட கூட்டாளி நாடுகளிடம் இருந்து அதிக ஆயுதங்களையும் நிதி உதவியையும் கேட்டுள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு செயற்கையான ஆயுத பற்றாக்குறையை தனது கூட்டாளி நாடுகள் உருவாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக பீரங்கி, நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஆயுதங்களை கூட்டாளி நாடுகள் தர மாறுகின்றன. இது போர் சூழலை ரஷ்யாவிற்கு சாதகமாக மாற்றும் நிலையை உருவாக்கி வருகிறது என கடுமையான குற்றசாட்டை முன்வைத்தார்.

அந்நாடுகள் ஏற்கனவே உக்ரைனுக்கு போர் விமானங்கள் உட்பட பல ஆயுதங்களை வழங்கியுள்ளன இந்நிலையில் தான் ஜெலன்ஸ்கியின் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அமைதி பேச்சுவார்த்தைக்கு சீனா முயற்சி

முனிச் மாநாட்டின் போது, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோவை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு தனது நாட்டின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு போர் துவங்கியதில் இருந்து அமைதிக்கான பேச்சுவார்த்தையில் இருந்து உக்ரைனை விலகுமாறு அதன் கூட்டாளி நாடுகள் வற்புறுத்தி வந்ததன் காரணமாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் எந்தப் பேச்சுவார்த்தையும் தற்போது வரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளின் ஆயுத விநியோகத்தை நிறுத்துவதற்கும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெறுவதற்கும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தும் வகையில் 12 அம்ச சமாதான முன்மொழிவை 2023 பிப்ரவரி மாதம் சீன அரசு சமர்ப்பித்தது.

எனினும் உக்ரைனை விட்டு ரஷ்ய ராணுவம் வெளியேறி போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் வரை ரஷ்யாவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என உக்ரைன் கூறி வருகிறது. ஆப்பிரிக்க ஒன்றியம் உட்பட பல நாடுகள் முன்மொழிந்த பல சமாதான திட்டங்களையும் உக்ரைன் நிராகரித்துள்ளது.

இது குறித்து ரஷ்யா கருத்து தெரிவித்தபோது அமைதிக்காக உக்ரைன் முன் வைக்கும் நிபந்தனைகள் உண்மைக்கு மாறானவை என்று தெரிவித்துள்ளது.

உக்ரைனை தூண்டிவிட்டு….


இதற்கிடையே உக்ரைனின் கூட்டாளி நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா ஆகியவை போரை நிறுத்தி அமைதியை கொண்டுவர எந்த அழுத்தத்தையும் கொடுக்காமல் ரஷ்யாவை தோற்கடிக்க வேண்டும் என்ற உக்ரைனின் நோக்கத்தில் தாங்கள் உறுதியுடன் இருப்பதாக காட்டிக்கொண்டு ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனை தூண்டிவிட்டு வருகின்றன.

உதாணரமாக ஹங்கேரி போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை 2025 வரை நீடிக்கவும், புதிய தடைகளை விதிக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் முடிவுக்கு வந்தது. உக்ரைனுக்கு எதிரான தங்கள் அரசு எடுத்து வரும் முடிவுகளுக்கு எதிராக பல ஐரோப்பிய நாடுகளில் மக்களும் விவசாயிகளும் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

உக்ரைன்-ரஷ்யா போரால் உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகள் உருவாகியுள்ளன எனினும் அதன் கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகிறது.இது பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரமாக்கி வருகிறது என ஐரோப்பிய நாடுகளில் போராடி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனினும் போர்நிறுத்தம் அமைதியை நோக்கி செல்ல மறுத்து உக்ரைனில் ஜெலன்ஸி தலைமையிலான பொம்மை ஆட்சியை பயன்படுத்தி போரை தீவிரப்படுத்துவதிலேயே ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் கவனம் செலுத்தி வருகின்றன.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *