Tamil Marx

புத்தக விமர்சனம்

அவதூறுக்கு எதிரான ஆயுதமாக ஒரு நூல்

அவதூறுக்கு எதிரான ஆயுதமாக ஒரு நூல்
  • PublishedJanuary 3, 2024


‘மரிச்ஜாப்பி: உண்மையில் நடந்தது என்ன?’ எனும் நூல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான அவதூறை அம்பலப்படுத்தும் ஆயுதம் என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.


மேற்கு வங்கத்தில் தோழர் ஜோதிபாசு அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 1978-79ஆம் ஆண்டுகளில் 17 ஆயிரம் பேர் இனப்படுகொலை செய்த தாக நெடுங்காலமாக தொடர்ந்து அவதூறு பரப்பப் பட்டு வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில், ஹரிலால் எழுதி ஞா.சத்தீஸ்வரன் மொழிபெயர்ப்பில், தமிழ் மார்க்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயம் இணை ந்து ‘மரிச்ஜாப்பி’: உண்மையில் என்ன நடந்தது?’ என்ற நூலை கொண்டு வந்துள்ளன.


இந்த நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று (டிச.31) சென்னையில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு ஜி.ராமகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு:

வங்கதேச அகதிகளுக்காக

1960களில் கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) இருந்து நாமசூத்திரர்கள் (தலித் மக்கள்) மேற்கு வங்கத்திற்கு அகதிகளாக வந்தனர். அவர்களை மேற்கு வங்கத்திலேயே குடியமர்த்த வேண்டும் என்று அன்றைக்கு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியி லிருந்த காங்கிரஸ் கட்சியிடம் கம்யூனிஸ்ட் கட்சி கோரியது. ஆனால், காங்கிரஸ் அரசு தண்டகாருண் யத்திற்கு கொண்டு சென்று குடியமர்த்தியது. அங்கு வாழ்வாதாரம் ஏதுமில்லாத அந்த மக்களுக்காக கம்யூனிஸ்ட் கட்சி ‘யுனைடெட் சென்ட்ரல் ரெபியூஜி (அகதி) கவுன்சில்’ என்ற அமைப்பை உருவாக்கி போராடி அடிப்படை வசதிகளை பெற்றுத்தந்தது.


1977ஆம் ஆண்டு மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஜோதிபாசுவை முதல் வராக கொண்ட இடது முன்னணி அரசு அமைந்தது. மாநில காங்கிரஸ், ஜனதா கட்சி, அகதிகளுக்கான சமிதி ஆகிய அமைப்புகள் இணைந்து, தண்டகாருண் யத்தில் உள்ள மக்களை மரிச்ஜாப்பி எனும் தீவில் குடியேற்றக் கோரி இயக்கம் நடத்தினர். 20 ஆண்டுக ளில் தண்டகாருண்யத்தில் அகதிகளுக்கு ஓரளவுக்கு வாழ்வாதாரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது; மரிச்ஜாப்பி தீவு மக்கள் வாழ்வதற்கு போதுமான தகுதியில்லாத இடம் என்பதாலும் இடது முன்னணி அரசு அகதிகள் தண்டகாருண்யத்திலேயே வசிக்கலாம்; மரிச்ஜாப்பி தீவுக்கு வரவேண்டிய அவசியமில்லை என்று கூறியது. அதனையும் மீறி காங்கிரஸ், ஜனதா, அகதிகள் சமிதி ஆகியோரின் தூண்டுதலால் 1978-79களில் அகதிகள் தண்டகாருண்யத்திலிருந்து மரிச்ஜாப்பி தீவுக்கு புறப்பட்டுச் சென்றனர். காசிப்பூர் – நவாப்பூர் பகுதி களில் பல முகாம்களில் அகதிகளை தங்க வைக்க அரசு ஏற்பாடு செய்தது. அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளையும் அரசு அளித்தது.


ஆனந்த பஜார் பத்திரிகை பொய்ச்செய்தி


1978 ஜூலை 21 அன்று பர்தமான் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தண்டகாருண்யத்திற்கு திரும்பிச் செல்ல இருப்பவர்களை இம்முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அகதிகளை லாரிகளில் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது அகதிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது, தலையிட்ட காவல்துறையினரை அகதிகள் தாக்கிய போது காவல்துறையை சார்ந்த ஒருவர் உயிரிழந் தார். 20 பேர் காயமடைந்தனர். இப்பின்னணியில் நிலை மையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் யாருக்கும் உயிரிழப்பு இல்லை.

உயிரிழந்த காவல்துறையை சார்ந்தவ ருக்கு மாநில அரசு இழப்பீடு வழங்கியது. ஆனால், ஆனந்த பஜார் பத்திரிகை காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டதாக பெயர் பட்டியலோடு செய்தி வெளியிட்டது.
ஆனால், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட நால்வர் பத்திரிகையாளர்களிடம் தாங்கள் உயிரோடு இருப்ப தாக பேட்டி அளித்தனர்.

இதன் மூலம் ஆனந்த பஜார் இதழின் பொய் செய்தி அம்பலமானது. அடுத்ததாக, 1979 ஜனவரி 31 அன்று தண்டகாருண் யத்திலிருந்து வந்த அகதிகளுடன் காவல்துறையின் கடுமையான மோதலின் காரணமாக இரண்டாவது முறையாக மரிப்ஜாப்பிக்கு வடக்கில் குமிர்மாரி தீவில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதிலும் அகதிகள் யாரும் கொல்லப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருவரும் குமிர் மாரியை சார்ந்த பழங்குடியினர். மொத்தத்தில் இரண்டு முறை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் 2 பேர் அகதிகள் அல்ல. ஆனால், ஆனந்த பஜார் பத்திரிகை இரண்டாவது முறையாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் பல நூறு பேர் இறந்துவிட்டதாக பொய்யான செய்தியை வெளியிட்டது.

கனடாவில் வசிக்கும் ரோஸ்மல்லிக் என்பவர், பல நூறு அகதிகளை இடது முன்னணி காவல்துறை சுட்டுக் கொன்றதாக பொய்த் தகவலை தனது கட்டுரை மூலம் பரப்பினார். இந்த பொய்த் தகவலை வைத்து தமிழ கத்தில் சிலர் நாமசூத்திரர் என்ற தலித் மக்களை பல்லாயிரக்கணக்கில் இடது முன்னணி அரசு இனப் படுகொலை செய்ததாக பிரசுரம் வெளியிட்டிருந்தனர்.


ரோஸ்மல்லிக் தனது கட்டுரையில் 1979 மே மாதம் 14 லிருந்து 16 தேதி வரையிலான நாட்களில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலநூறு அகதிகள் கொல்லப்பட்டதாககூறுகிறார். ஆனால், ரோஸ் மல்லிக் 1979 பிப்ரவரி 8 ஆம் தேதியிட்ட அமிர்தபஜார் பத்திரிக்கையை மேற்கோள் காட்டியிருக்கிறார்.


மே மாதம் நடந்த சம்பவத்தை எப்படி பிப்ரவரி மாத நாளே ட்டில் செய்தியாக வெளியிட்டிருக்க முடியும்? இதி லிருந்தே இது பொய் செய்தி, அவதூறு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு மேற்வங்க இடது முன்னணி அரசு மீது செய்யப்பட்ட அவதூறுகளை நூலாசிரியர் ஹரிலால்நாத் பல ஆதாரங்களோடு அம்ப லப்படுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள ஊடகங்கள் பெரும்பா லும் இடது முன்னணிக்கு எதிராகவே அன்றிலிருந்து இன்றுவரை உள்ளன. இவை அனைத்தும் கட்டுக் கதை கள் என்பது மேற்கு வங்க மக்களுக்கு தெரியும். தமிழ கத்தில் செய்யப்படும் அவதூறை அம்பலப்படுத்தும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.


கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான நீண்ட நெடிய அவதூறுகள்இன்று நேற்று அல்ல, கார்ல் மார்க்ஸ், லெனின் காலத்திலிருந்தே கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக அவ தூறு செய்வது, கம்யூனிஸ்ட்டுகளை அழித்தொழிப் பது, கம்யூனிச கருத்தியலை சிதைப்பது தொடர் கதையாக உள்ளது.

இந்தோனேசியாவில் எண்ணிலடங்கா கம்யூனிஸ்ட்டுகளை அமெரிக்க அரசின் சிஐஏ அமைப்பின் தூண்டுதலால் கொல்லப்பட்டது பற்றி இங்கு யாரும் பேசமாட்டார்கள். 1957 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் வெற்றி பெற்ற தோழர் இ.எம்.எஸ் தலைமையிலான அரசை அன்றைய மத்திய அரசு பொய்யான கார ணத்தைச் சொல்லி கலைத்தது.

1973 ஆம் ஆண்டு சிலி நாட்டில் தேர்தல் மூலம் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சால்வடார் அலெண்டே தலைமை யிலான ஆட்சியை அமெரிக்க தலையீட்டால் கவிழ்த்த தோடு அலெண்டேவும் கொல்லப்பட்டார் என்பது பற்றியும் பேசமாட்டார்கள்.


சுதந்திரப் போராட்ட காலம் தொடங்கி மேற்கு வங்கத் தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப் பிற்காகவும், பட்டியலின மக்கள் உரிமைகளுக்காகவும் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான போராட்டத்தை நடத்தி வருகிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது சுமத்தப் படும் அவதூறுகளை அம்பலப்படுத்திட மரிச்ஜாப்பி என்ற நூல் ஆயுதமாக பயன்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


வரையறுக்கப்பட்ட அரசியல் அவதூறு

நூலை பெற்றுக் கொண்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் பேசுகையில், “கொடூரமான, கற்பனையான அவதூறுகளுக்கு இந்த நூல் ஆதாரத்துடன் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தலித் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியை உருவாக்கியது. மார்க்சிஸ்ட்டுகளும் தலித்துக ளும் இணையக் கூடாது என்று வரையறுக்கப்பட்ட அர சியல் அவதூறாக மரிச்ஜாப்பி குறித்த நூல்களை கொண்டு வந்தனர்.

அந்த நூல்கள், தலித் இயக்கங்களிடையே கடுகளவு கூட சலனத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் களத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பதித்துள்ள முத்திரை. சாதிவெறி நிரம்பிய ஒருவரால் சாதி ஒழிப்பை பற்றி உணர்ச்சிப்பூர்வமாக பேச முடியும். தீண்டாமைக்கு எதிராக களத்தில் நாம் நடத்து கிற ஒரு போராட்டத்திற்கு அது ஈடாகாது” என்றார்.
“பாசிச அபாயத்தை எதிர்க்க எந்தப் புள்ளியில் இணைய வேண்டும் என்பதை தலித் அமைப்புகள் புரிந்து கொண்டுள்ளன. தலித், தலித் அரசியல், இடது சாரி அரசியலை துண்டாட நினைக்கிறவர்களின் அரசி யலை வீழ்த்தும் வகையில் இந்த நூல் உள்ளது” என்றும் அவர் கூறினார்.


அவதூறுக்கு – நாக்அவுட்


“இடதுசாரி அரசுகளை சீர்குலைக்க எப்படியெல் லாம் செயல்படுவார்கள் என்பதற்கு உதாரணமாக ‘மரிச் ஜாப்பி: சி.பி.எம். அரசின் தலித் இனப் படுகொலை கள்’ எனும் நூல் வந்தது. சாதிய உணர்வு சற்றும் இல்லாத வர்கள் ஒன்றுபட்டு செயல்படும் இடமாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. எனவே, அவதூறுகளை நாக்அவுட் செய்யும் வகையில் இந்த நூல் வந்துள்ளது.
இந்த நூலை முன்வைத்து ஜனநாயக சக்திகள் உரையாட வேண்டும். அவதூறு நூலை வெளியிட்ட தலித் முரசு, கருப்பு பிரதிகள் இந்த நூலையும் விற்பனை செய்ய வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா குறிப்பிட்டார். இந்நிகழ்வில், சிபிஎம் வடசென்னை மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, எழுத்தாளர் வீ.பா.கணேசன், தமிழ் மார்க்ஸ் குழுவை சேர்ந்த சிலம்பரசன், சைலஸ் அருள்ராஜ், சேதுசிவன் உள் ளிட்டோர் பேசினர்.

நன்றி, தீக்கதிர்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *