Tamil Marx

புத்தக விமர்சனம்

நீலத்தங்கம் நூல் அறிமுகம்.

நீலத்தங்கம் நூல் அறிமுகம்.
  • PublishedDecember 15, 2021

நூல்: நீலத்தங்கம்

ஆசிரியர்:இரா. முருகவேள்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்.


ஜவஹர்லால் நேரு தேசிய நகர் புனரமைப்பு திட்டம் என்ற பெயரில் நீர் என்பது அரசுகள் மக்களுக்கு தரும் சேவை அல்ல, நீர் என்பது விற்று வாங்கும் ”’பொருள்”’ என கூறும் உலக வங்கியின் முதலாளித்துவ நடைமுறையை விளக்குகிறது.


நாம் எதையெல்லாம் ஆதரிக்கிறோமே எதையெல்லாம் புனிதம் என கருதுகிறோமோ, அதையெல்லாம் நீர்த்து போக செய்வதும், தனக்கு ஏற்றார்போல மாற்றுவதும் உலக வங்கிக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் கை வந்த கலை. (உதாரணமாக நாம் தொலைகாட்சியில் பார்க்கும் எப்பா, போப்பா என்ற விளம்பரத்தை கூறலாம். இந்த விளம்பரம் மறைமுகமாக இந்திய கலாச்சாரத்தில் உள்ள மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தை குறைக்கிறது) அரசுகள் மின்சாரம், மருத்துவம், போக்குவரத்து மற்றும் நீர் விநியோகம் போன்ற சேவை துறையில் இருந்து விலகும் போது அந்த வெற்றிடத்தை நிரப்ப இந்த முதலாளித்துவ கார்ப்பரேட் கம்பெனிகள் லாபம் அடைய எப்படி துடிக்கின்றன என்பதையும்,
அர்ஜென்டினா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நடந்த தனியார் நீர் விநியோகத்தில் நடைபெற்ற குளறுபடிகள் எப்படி அந்த நாடுகளில் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியது என்பதையும், காலரா, மலேரியா, உயிர் பலிகள் ஆகியவற்றை கடந்து மக்கள் உழைப்பில் உருவான நாட்டில் உள்ள அணைகள், நீர் தேக்கங்கள் ஆகியவற்றை எப்படி எளிதாக சட்டபூர்வமாக தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்ற போகிறார்கள் என்பதையும், தமிழகத்திலும் முக்கியமாக கோவையில் சூயஸ் கம்பெனியின் நடவடிக்கைகளையும், இதற்கான தீர்வு என்ன என்பதையும் இந்நூல் விவரிக்கிறது..


மணிகண்டன்..

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *