செங்கொடி உயர செங்குருதி சிந்திய வீரத்தியாகி சிக்கல் பக்கிரிசாமி…
நிலப்பிரபுத்துவத்தின் ஆதிக் கக் கோட்டையாக நிகழ்ந்த தஞ்சை மண்ணில் 1940 இல் தென்பரை கிராமத்தில் உரு வான விவசாயிகள் இயக்கம், விவ சாயக் கூலிகளாய், குத்தகை விவ சாயிகளாய், மனித உரிமையற்று பண்ணை அடிமைகளாய் கூனிக்குறுகி வாழ்ந்து, பண்ணை யார்களின் செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு அடித்தளமாய் இருந்தவர்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்தியது செங் கொடி இயக்கம். சாணிப்பால் கொடுத்தது துன்புறுத்தி அச்சு றுத்தியது, சவுக்கால் அடித்தது, கைகட்டி வாய்பொத்திதான் பண்ணையாரிடம் பேச வேண்டும் என்ற நிர்பந்தம், சூரியஉதயத்தின் போது வயல்வெளிக்கு வேலை க்குச் சென்றால் மறையும்வரை வேலை பார்ப்பது பண்ணை அடி மைகளின் பிள்ளைகள் பள்ளிக் கூடம் போகக்கூடாது, பண்ணை யார் வீட்டில் மாடுதான் மேய்க்க வேண்டும், குடியிருக்கும் குடிசை கூட அவர்களுக்குச் சொந்த மில்லை, பெண்கள் இழிவாக நடத் தப்படுவது, இப்படிப்பட்ட சொல்லமுடியாத துன்பங்களை யும், துயரங்களையும் அனுப வித்த அந்த மக்களிடம் கூலி கேள் ,அடித்தால் திருப்பி அடி , ஏண்டி என்று கேட்டால் ஏண்டா என்று கேள், மனித உரிமை பெறு, குருடாக இருக்காதே, கூனிக்குறு காதே, நிமிர்ந்து நட, தோளில் துண்டு போடு, காலில் செருப்பு அணி என்று பண்ணையார்க ளால் அடிமைப்படுத்தப்பட்ட மக்க ளிடம் கூறி கிராமப்புற உழைக்கும் மக்களின் விடிவெள்ளியாய் விவ சாயிகள் இயக்கத்தின் தலைவ ராய் தஞ்சை மண்ணிற்கு வந்த தோழர் பி.சீனிவாசராவ் அவர்க ளின் உணர்வுப்பூர்வ எழுச்சி உரை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதனால் செங் கொடி இயக்கம் எழுச்சி பெற்றது. மாவட்டம் முழுவதும் விரிந்து பரந்து வளர்ந்தது, துடிப்புமிக்க இளைஞர்கள் செங்கொடி இயக்கத்தின் தளபதிகள் ஆனார் கள், அடிமை விலங்கொடிக்க புறப்பட்ட போர்ப்படையாய் விவசா யிகளும், விவசாயத் தொழிலா ளர்களும் திரட்டப்பட்டார்கள்.
வேலை நேரத்திற்காக, கூலிக்காக, குத்தகை வாரத்திற் காக வாழ்வுரிமைக்காகப் போரா டினார்கள். இதனால் பண்ணை யாள் பாதுகாப்புச் சட்டம், குத்தகை தாரர் பாதுகாப்புச் சட்டம், மனித உரிமைகள் மீட்பு போன்ற பாது காப்பை பெற்றார்கள். நிலைமை மாறியது. ஆதிக்கக் கோட்டையும் தகர்ந்தது. மாற்றியது செங்கொடி. அதற்காக அது கொடுத்த விலை, செய்த தியாகம் வரலாற்றில் பதி யப்பட்டது. இதன் தொடர்ச்சிதான் கீழவெண்மணியில் 44 பேர் உயி ரோடு எரிக்கப்பட்டது. வெண்மணி யின் கண்மணிகள் தியாகத்தின் வீரகாவியம். செங்கொடி இயக்கத்தின் போராட்டங்களையும் வெற்றிக ளையும் பொறுத்துக்கொள்ள முடி யாத நிலப்பிரபுக்கள் விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினர். இவர்களுக்கு பக்க பலமாக காவல்துறை மற்றும் திராவிட இயக்கத்தை, காங்கிரஸ் கட்சியை சார்ந்த மிராசுதார்கள் இருந்தனர், நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற பெயரில் தலித் அல்லாதவர்களை சாதியின் பெயராலும் அணி சேர்த்தனர். ஏராளமான பணம் வசூல்செய்து பணபலத்தை பயன்படுத்தி அடி யாட்களை ரவுடிகளை கொண்டு விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்கி செங்கொடியை அழித்து ஒழிக்க களம் இறங்கினார்கள். வெளியூர்களிலிருந்து அரிசிபடி கூலிக்கு ஆட்களை கொண்டு வந்து விவசாய வேலைகளை செய்தனர். ஒரே வேலைக்கு பல விதமான கூலியை கொடுத்தனர். உள்ளூர் விவசாயத் தொழிலா ளர்களை பட்டினி போட்டார்கள்.
உள்ளூர் தொழிலாளிகளு க்கு வேலை கொடு, ஒரே வேலை க்கு ஒரே கூலி கொடு, அறுவடை கூலி 9,1-கலத்திற்கு 6லிட்டர் கொடு என்று கோரிக்கை வைத்து போராடினார்கள். கோரிக்கை ஏற்க மறுத்த நெல் உற்பத்தியா ளர்கள் சங்கம், செங்கொடி ஏற்றப்பட்ட கிராமங்களில் விவசா யத் தொழிலாளர்களை ரவுடிக ளையும் அடியாட்களையும் கொண்டு காவல்துறை துணை யோடு தாக்கினார்கள். தெருக்களி லே ஏற்றப்பட்டிருக்கும் கொடியை இறக்கச் சொல்லி துன்புறுத்தி னார்கள். வீடுகளை தீயிட்டுக் கொளுத்தினர். இக்கொடிய தாக்கு தல்களை விவசாயத் தொழிலா ளர்கள் வீரத்துடன் உறுதியாக நின்று எதிர்கொண்டார்கள். இப்படிப்பட்ட களப் போராட் டங்கள் இன்றைய நாகை, திருவா ரூர் மாவட்ட கிராமங்கள் முழுவ தும் நடைபெற்றன. ஆவராணி, புதுச்சேரி, சிக்கல், நாரியங்குடி, இருக்கை, கிள்ளுக்குடி, ஆதமங்க லம், தேவங்குடி போன்ற கிரா மங்கள் குறிப்பிடத்தக்கவை யாகும். இப்போராட்டங்களில் முன் களப்போராளியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிக்கல் கிளைச் செயலாளராக விவசா யத் தொழிலாளர்களின் நம்பிக் கைக்குரிய செங்கொடி இயக் கத்தின் தலைவராக செயல்பட்ட வர் தான் தோழர் சிக்கல் பக்கிரி சாமி.
விவசாயத் தொழிலாளர்க ளின் மீது காவல்துறை (கிசான் போலீஸ்) உதவியோடு நடத்தப் படும் கொடிய தாக்குதல்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் சார்பில் 1968 நவம்பர்-15 அன்று நாகையில் மாபெரும் கண்டன பேரணி நடத்தப்பட்டது. பல்லாயிரக்க ணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் அணி திரண்ட னர். அதே நாளில் நாகை வட்டம் நெல் உற்பத்தியாளர் சங்க நிர்வாகக்குழு கூட்டம் கொடியவன் இருஞ்சூர் கோபால கிருஷ்ணன் தலைமையில் சிக்கல் கிராமத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் தலைவர்களை கொலை செய்து கம்யூனிஸ்ட் கட்சியை அழித்துவிடலாம் என கொலை வெறியுடன் பலகொலைகளை செய்தகூட்டம் சிக்கலில் கூடிய கூட்டத்திலும் திட்டமிட்டு இருக் கிறது. அதே நாளன்று விவசாயத் தொழிலாளர்களின் கண்டன பேர ணிக்குச் சென்று திரும்பி பேருந்தில் வந்து சிக்கல் கடை வீதியில் இறங்கும்போது கொலை வெறிக்கூட்டம் தோழர்பக்கிரிசாமி அவர்களின் கைகளை துண்டாக வெட்டி, கொடூரமாகத் தாக்கி படு கொலை செய்தது.
தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து இளம் வயதி லேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அப்பகுதியில் நடந்த களப்போராட் டங்களில் ஈடுபட்டவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிக்கல் கட்சிக் கிளைச் செயலாளராக விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக விவசாயத் தொழி லாளர்களின் வாழ்வுரிமைக்காக செங்கொடி இயக்க வளர்ச்சிக்காக செங்குருதி சிந்திஉயிர்நீத்த வீரத் தியாகி சிக்கல் பக்கிரிசாமியின் தியாகத்தைப் போற்றுவோம். சிரம் தாழ்த்தி செவ்வணக்கம் செய் வோம். அவர் விட்டுச் சென்ற புரட்சிப்பணியை முன்னெடுப் போம்!..
தஞ்சை ஆர். மனோகரன்..
நன்றி தீக்கதிர்..