Tamil Marx

கட்டுரைகள்

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் ஒரு பார்வை

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் ஒரு பார்வை
  • PublishedAugust 21, 2023

பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தின் மூலம் இந்த  ஆண்டின் முதல் 7 மாதத்தில் சீனாவின் வர்த்தகம் 7.4 சதவிகிதம் அதிகரித்து 8.06  டிரில்லியன் யுவான் (1.12 டிரில்லியன் அமெரிக்க டாலர்)  அளவிற்கு உயர்ந்துள்ளது என அந்நாட்டின் சுங்க பொது நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் சீனாவின்  ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 1.5 சதவீதம் அதிகரித்து 13.47 டிரில்லியன் யுவானாக உயர்ந்து வருகிறது ; இறக்குமதி 1.1 சதவீதமாக குறைந்து 10.08 டிரில்லியன் யுவானாக குறைந்துள்ளது. ‘பெல்ட் அண்டு ரோடு’ என்பது, முன்பொரு காலத்தில் சீனா வணிகம் செய்து வந்த உலக  நாடுகளையெல்லாம் தற்போது வர்த்தக வலைப்பின்னல் மூலம் இணைக்கும் நவீன,  தொழில்நுட்ப ஏற்றுமதியுடன் கூடிய வளர்ச்சித்திட்டம் ஆகும். இத்திட்டத்தின் பத்தாவது ஆண்டு நடந்துவரும் நிலையில்  உள்கட்டமைப்பு வசதிகள் முதல் புதிய ஆற்றல் மற்றும் பசுமை மேம்பாட்டில் சிறப்பான ஒத்துழைப்புடன்  இத்திட்டத்தின் மூலம் இணைத்துள்ள நாடுகள் பெரும் பலன் அடைந்து வருகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு  திட்டம் பட்டுப்பாதை என்றும் குறிப்பிடப்படுகிறது.  2013 இல் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கால் தொடங்கப் பட்ட இந்த திட்டம்,  வளர்ச்சி மற்றும் முதலீட்டு  முயற்சிகளின் காரணமாக கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவை உள்கட்டமைப்புகள் வளர்ச்சி  திட்டங்கள் மூலம் இணைக்க  வடிவமைக்கப் பட்டது. பிறகு ஆப்பிரிக்கா, ஓசியானியா மற்றும் லத்தீன் அமெரிக்கா வரை விரிவடைந்து, சீனா வின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கை கணிசமாக விரிவுபடுத்தி உள்ளது. இத்திட்ட மானது சீனா உதவியில், உலக நாடுகளின்  உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்  விரிவடைந்த நோக்கத்தை கொண்டது. ஆனால் அமெரிக்க உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகளோ உலக நாடுகள் மீதான தங்களின் ஆதிக்கம் இந்த திட்டத்தின் மூலம் சரிந்துவருவதால், சீனா பிற நாடுகளுக்கு கடன் கொடுத்து பொறியில் சிக்கவைப்பதாகவும், அந்த நாடுகளில் ராணுவதளங்களை நிறுவுவதாகவும்  பொய்க்கதைகளையும், அவதூறுகளையும்  கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஆனால் உண்மையில் இந்தத்திட்டத்தின் சிறந்த வளர்ச்சியின் காரணமாக சீனாவின் நட்பு  நாடுகளின் பட்டியல் நீண்டு வருகிறது.இந்த வர்த்தகம் மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது எனவும்; குறிப்பாக டிஜிட்டல் பொருளாதாரம், உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் இது அதிகரிக்கும் என்றும் இத்திட்ட ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மையர் லியாங் ஹேமிங் கூறியுள்ளார்.

சீனா முதல் ஐரோப்பா வரை பயணிக்கும் உலகின் மிக பெரிய ரயில் சேவையே இந்த திட்டத்தின் தூணாக உள்ளது. 2023 ஜூலை 29   நிலவரப்படி கடந்த ஆண்டை விட 22 நாட்களுக்கு முன்னதாகவே இந்த ரயில்கள் பத்தாயிரம் முறை  பயணம் செய்துள்ளன. 20 அடி அகலமான கொள் கலனில் 1.08 மில்லியன் டன் அளவிற்கு சரக்குகள் இந்த ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன என வும் இது கடந்தகாலத்தை விட 27 சதவீதம் அதிகம் எனவும் சீன ரயில்வே தரவுகள் கூறுகின்றன. மேலும் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு   அதிகளவில் மின்னணு சாதனங்கள்-மின்னணு வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன என்று எரின்ஹோட் பகுதியில் உள்ள  எல்லை தாண்டிய போக்குவரத்திற்கான  மெங் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த ஆண்டின் முதல் பாதியில், எல்லை கடந்த  ரயில்-கடல்  போக்குவரத்தை கடந்த ஆண்டுகளுடன்  ஒப்பிடுகையில், 9 சதவீதம் அதி கரித்து 4,510 என்ற  எண்ணிக்கையை எட்டியுள்ளது. சின்ஹுவா செய்தி நிறுவனத் தகவலின் படி, சர்வதேச ரயில்கள் எண்ணிக்கை 18.51 சதவீதமாக (மொத்தம் 4,091) அதிகரித்துள்ளது. இது நிலம் மற்றும் கடல் வழியே  ஆக்கப்பூர்வ சர்வதேச வர்த்தகத்தை கட்டமைப்பது என்ற பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடே என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த சர்வதேச சரக்கு ரயில் போக்குவரத்தின்   மூலம்  தென்கிழக்கு ஆசிய நாடுகளின்  சிறப்பு  உணவுப் பொருட்கள் எளிதாகவும் விரைவாக வும் சீன சந்தையில் நுழைகின்றன.மேலும், சீனா  வளர்ச்சியின் பங்கு அந்த திட்டத்துடன் இணைந்து ள்ள நட்பு நாடுகளுடன் பகிரப்படுகிறது என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. இத்திட்டத்தோடு இணைந்த  பல நாடுகள் சீரற்ற  மின் விநியோகம்  அல்லது நீண்ட கால மின் பற்றாக்குறையில்  இருந்தன;  இதனால்  அவர்களின் பொருளா தார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டை  ஈர்ப்பதில் பின்னடைவை சந்தித்து வந்தன. இந்த நேரத்தில்  புதிய எரிசக்தி துறையில் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தியதன்  மூலமும்,  சீனாவின் தொழில்நுட்பம், அறிவு, உபகரணங்கள் மற்றும் முதலீட்டைப் பயன்படுத்தி தங்களுடைய  பொருளாதார வளர்ச்சியை அந்நாடுகளால் திட்டமிடமுடிந்துள்ளது.

மேலும் 2022 ஆம் ஆண்டின் இறுதியில், சீன  நிறுவனங்களால் பெல்ட் அண்ட் ரோடு  சங்கிலி யின் வழித்தடத்தில் உள்ள நாடுகளில் கட்டப்பட்ட வெளிநாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மண்டலங்களில் 57.13 பில்லியன் டாலர்கள் ( 1 பில்லியன் = 100 கோடி) முதலீடு செய்து 4 லட்சத்து 21 ஆயிரம் உள்ளூர் வேலை  வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. உலக வங்கியின் அறிக்கையின்படி இந்த திட்டத்தில் பயனடைவதால், வளர்ந்து வரும் மற்றும் வளரும் பொருளாதாரங்களின் ஜிடிபி-யின் பங்கு 2012 முதல் 2021 வரை 3.6 சதவீதப் புள்ளிகளை அதிகரித்துள்ளது எனவும் இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவிகிதம் என்றும் கூறியுள்ளது. மேலும் 2015-2030 ஆம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் மொத்தம் 7.6 மில்லியன் மக்கள் முழுமையான வறுமையிலிருந்தும் 32 மில்லியன் மக்கள் மிதமான வறுமையிலிருந்தும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் மூலம் மீட்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *