ஜெனிவா அமைதி மாநாட்டில் தோழர்.மார்க்ஸ் ஆற்றிய உரை
அமைதி மாநாட்டில் பல பிரதிநிதிகள் தங்களின் தனிப்பட்ட திறனின் அடிப்படையில் பங்கு கொள்வது பொருத்தமானதாக இருக்கும்; ஆனால் சர்வதேச சங்கத்தின் பிரதிநிதிகளாக தங்களை முன்வைப்பது என்பது நியாயமற்றது.
உலக உழைக்கும் மக்களின் மாநாடே ஒரு அமைதி மாநாடுதான். வெவ்வேறு நாடுகளில் உள்ள உழைக்கும் வர்க்க ஒற்றுமை உலப்போர்களை இல்லாமல் செய்துவிடும். ஜெனிவா அமைதி மாநாட்டை ஊக்குவிப்பவர்கள் பிரச்சினையில் உள்ள கேள்வியை உண்மையில் புரிந்து கொண்டால் அவர்கள் சர்வதேச சங்கத்தில் இணைந்திருக்க வேண்டும்.
ஐரோப்பாவில் பெரிய படைகளின் தற்போதைய அதிகரிப்பு 1848 புரட்சியால் கொண்டுவரப்பட்டது; பெரிய நிலையான படைகள் சமூகத்தின் தற்போதைய நிலைக்கு அவசியமான விளைவாகும். இந்த படைகள் சர்வ தேச போருக்காக தக்கவைக்கப் படுவதில்லை; உழைக்கும் வர்க்கத்தை அடக்குவதற்கே தக்க வைக்கப்படுகிறது.
இருப்பினும், குண்டுகளை வீசுவதற்கு எப்போதும் தடுப்புகள் இல்லாததாலும், சுடுவதற்கு உழைக்கும் ஆட்கள் இல்லாததாலும், சில சமயங்களில் சிப்பாய்களை சீரமைக்க சர்வதேச சண்டைகள் தூண்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எந்த விலையானாலும் அமைதி காக்கும் கட்சி மாநாட்டில் வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஐரோப்பாவின் மற்ற நாடுகள் மீது போர்த்தொடுக்க தயாராக உள்ள நிலையில் உள்ள ரஷ்யாவை அமைதி காக்கும் கட்சி விட்டுவிட்டால், ரஷ்யாவின் நிலையை காரணம் காட்டி தங்களின் படைகளை மற்ற நாடுகளும் அப்படியே வைத்திருக்க, பெருக்க முயலும்.
இங்கு சில பிரஞ்சு தீவிரவாதிகள் தங்கள் சொந்த அரசாங்கத்திற்கு எதிராக பிரகடன உரைகளை நிகழ்த்த வாய்ப்பு அதிகம்; ஆனால் அவர்கள் அந்த உரையை பாரிஸ் ல் நிகழ்த்தினால் இன்னும் அதிக விளைவுகளை அவர்கள் பெறக்கூடும்.
யாரெல்லாம் கூலி உழைப்புக்கும் மூலதனத்துக்கும் உள்ள உறவுகளில் மாற்றத்தை கொண்டுவருதை தவிர்க்கிறார்களோ அவர்கள் அனைவரும் உலக அமைதியையும் தவிர்க்கிறார்கள் என்றே அர்த்தம்.
(1) 1867 செப்டம்பரில் நடந்த ஜெனிவாவில் முதலாளித்துவ – அகிம்சாவாதிகள் லீக்கின் துவக்க மாநாடில் சர்வதேச தொழிலாளி வர்க்கம் பிரதிநிதியாக தோழர். கார்ல் மார்க்ஸ் அவர்கள் ஆற்றிய உரை. அம்மாநாட்டில் தீவிர மற்றும் ஜனநாயகவாதிகளும் கலந்துகொண்டனர்.
(2) 19ம் நூற்றாண்டின் இருந்த இராணுவ நிலை படைகள் குறித்த மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் ன் முழு பார்வையும் இங்கு வைக்கப்படவில்லை; மேலும் அவர்களின் விரிவான ஆய்வு தோழர் ஏங்கெல்ஸ் எழுதிய “The Prussian Military Question and the German Workers” என்ற நூலில் உள்ளது.
[இந்த தமிழாக்க உரை என்பது அரைமணி நேரத்திற்கும் மேலாக அமைதி மாநாட்டில் தோழர் காரல் மார்க்ஸ் அவர்கள் ஆற்றிய உரையில் பதிவு செய்யப்பட்ட தோராய உரையே ஆகும், 1867 ஆகஸ்ட் 17 The Bee-Hive Newspaper என்ற வார இதழில் முதன்முதலில் வெளிவந்தது]