2025-இல் அமெரிக்கா நேரடியாக குண்டு வீசிய நாடுகளின் பட்டியல்
இந்தியா பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை நான் தான் நிறுத்தினேன். நான் அமைதியின் ஜனாதிபதி என பேசியதுடன் அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என டிரம்ப் கேட்டார்.
ஆனால் கடந்த ஒரு ஆண்டு டிரம்ப் நேரடியாக 7 நாடுகளின் மீது குண்டு வீசி மக்களை படுகொலை செய்துள்ளார்
1.) நைஜீரியா
பணம் மற்றும் ஆயுதம் கொடுத்து அமெரிக்கா வளர்த்து வரும் போது ஐஎஸ்ஐஎஸ் (#ISIS) பயங்கரவாத குழு ஆப்பிரிக்க நாடுகளில் பல தாக்குதல்கள் நடத்தி அமைதியை கொடுத்து வருகிறது. குறிப்பாக நைஜீரியாவில் சமீப காலமாக அதன் தாக்குதல்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி செல்லும் செயல் அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் அந்த பயங்கரவாத அமைப்பு ஒரு சர்ச்சில் தாக்குதல் நடத்தியது. இதனை காரணமாக வைத்து கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல் நடந்தால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம் என அமெரிக்கா அந்நாட்டின் மீது குண்டு வீசியது.
ஆனால், இந்த வன்முறை மதம் சார்ந்தது அல்ல என்று நைஜீரிய அரசு கூறியுள்ளது.
2.) சோமாலியா
நைஜீரியா போலவே சோமாலியாவில் செயல்படும் அல்-ஷபாப் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளைக் தாக்குவதாக கூறி நீண்ட காலமாக அந்நாட்டின் மீது அமெரிக்கா குண்டு வீசி வருகிறது.
எனினும் டிரம்ப் பதவிக்கு வந்த பிறகு அங்கு நடைபெறும் வான்வழித் தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. 2025 இல் மட்டும் 111 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
3.) சிரியா
2025 இல் சிரியாவில் அமெரிக்கா இஸ்ரேல் இங்கிலாந்து ஜோர்டான் ஆகிய நாடுகளின் உதவியுடன் பயங்கரவாத அமைப்புகள் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தின. அதன் பிறகு டிசம்பர் 19-ஆம் தேதி சிரியாவில் உள்ள ஐஎஸ் முகாம்கள் மீது அமெரிக்கா 70 முறை குண்டு வீசியது.
4.) ஈரான்
ஈரான் உள்நாட்டு எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய யுரேனியம் செறிவூட்டலை மேம்படுத்தி வருகிறது. இந்த வளர்ச்சியை முடக்க அந்நாட்டின் மீது இஸ்ரேல் குண்டு வீசியது. இதனைத் தொடர்ந்து 2025 ஜூன் 22 அன்று ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசியது.
5.) ஏமன்
இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் மீது நடத்தும் இனப்படுகொலைகளை நிறுத்த வலியுறுத்தி செங்கடல் பகுதிகளில் இஸ்ரேல் மற்றும் அதன் தொடர்புடைய சரக்கு கப்பல்களை ஏமனில் உள்ள ஹவுதி படை சிறைப்பிடித்து வருகிறது.
இந்த சூழலில் 2025 ஜனவரி முதல் ஏமன் மீது அமெரிக்கா Operation Rough Rider என்ற பெயரில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் அமெரிக்க ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
6.) ஈராக்
2025 மார்ச் 13-ஆம் தேதி ஈராக்கின் அல்-அன்பார் மாகாணத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கியத் தலைவரை கொலை செய்வதாக கூறி குண்டு வீசியது.
இத்தாக்குதலுக்கு ஈராக்கில் அள்ள அமெரிக்க ஆதரவு அரசும் உதவி செய்தது.
2025 செப்டம்பர் மாதம் முதல் கரீபியன் கடல் பகுதியில் வெனிசுலா கப்பல்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்கி 110 பேரை படுகொலை செய்துள்ளது. 2 எண்ணெய் கப்பல்களை கடத்தியுள்ளது . அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை கடத்தியுள்ளது.
7.) வெனிசுலா #Venezula
வெனிசுலா “போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவுகிறது என ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை பரப்பி தனது குண்டு வீசியதை நியாயப்படுத்தி வருகிறார்.
அரசியல் சார்பற்ற மோதல் கண்காணிப்பு அமைப்பான #ACLED (Armed Conflict Location & Event Data), டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற 2025 ஜனவரி 20, முதல் இதுவரை 622 முறை பிற நாடுகளின் மீது வான்வழித் தாக்குதல்களை (ட்ரோன் அல்லது விமானங்கள் மூலம்) நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டிரம்ப் பிரச்சாரம்
தேர்தல் பிரச்சாரத்தின் போது “அமெரிக்கா தான் முதன்மை” (America First) என்ற கொள்கையை முன் வைத்ததுடன், தேவையற்ற வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா தலையிடாது என்று கூறி டிரம்ப் மக்களின் ஆதரவைப் பெற்றார். ஈராக் போர் ஒரு மிகப்பெரிய தவறு என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
ஆனால், இந்த 7 நாடுகளில் குண்டு வீசியது அவர்தான். இந்த தாக்குதல்கள் அமெரிக்கா நேரடியாக நடத்தியவை.
இது மட்டுமின்றி உக்ரைன் இஸ்ரேலுக்கு ஆயுதம் கொடுத்து நடத்தி வரும் போர்களும் நடந்து வருகின்றன.