Tamil Marx

இந்திய பொருளாதாரம்

இளைஞர்களை ஏமாற்றிய பாஜக வேலையின்மையை திட்டமிட்டு அதிகரித்த சூழ்ச்சி

இளைஞர்களை ஏமாற்றிய பாஜக வேலையின்மையை திட்டமிட்டு அதிகரித்த சூழ்ச்சி
  • PublishedFebruary 18, 2024



2014 தேர்தல் பிரச்சாரத்தில் வேலை வாய்ப்பின் மையை பாஜக பிரதான தேர்தல் பிரச்சனையாக எடுத்து ஆண்டுக்கு 2 கோடி தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பொதுத் துறைகளின் மீதான பாரபட்சம், காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யாமல் விட்டது என வேலையின்மை அளவை ஆண்டு தோறும் தீவிரமாக அதிகரிக்க விட்டு, இந்திய இளைஞர்களை வேலையின்மையால் வஞ்சித்துள்ளது. அதிகரித்து வரும் வேலையின்மையின் தீவிரத்தை மறைக்கவும் பல வடிவங்களில் புதிய புதிய ஏமாற்று வேலைகளை பாஜக செய்துள் ளது. 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2.1 சதவீதமாக இருந்த வேலையின்மை அளவு 2018 ஆம் ஆண்டு மூன்று மடங்காக 6.1 சதவீதமாக அதிகரித்தது. (2012 ஆம் ஆண்டு வேலையின்றி இருந்த 1 கோடி இளைஞர்களின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டு 3 கோடியாக அதிகரித்தது) என காலமுறை வேலையில்லா பட்டாளம் கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

உயர் கல்வி படித்த 50 சதவீத இளைஞர்களுக்கு வேலையில்லை

2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய திறன் அறிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமான உயர்கல்வி பெற்ற இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. கல்வி அடிப்படையில் பார்த்தால் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் மத்தியில் வேலையின்மை 19.2 சதவீதம் முதல் 35.8 சதவீதமும், முதுகலை பட்டம் பெற்றவர்க ளிடம் 21.3 சதவீதம் முதல் 36.2 சதவீதம் வரை வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. இதே போல தொழிற்பயிற்சி கல்வி கற்றவர் கள் மத்தியில் 2012 ஆம் ஆண்டு 18.5 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை 2018 ஆம் ஆண்டு 33 சதவீதமாக அமைந்தது. மற்றொரு புறம் தொழில்நுட்பக் கல்வியில் பட்டம் பெற்ற இளைஞர்களிடம் இதே கால கட்டத்தில் 18.8 சதவீதத்தில் இருந்து 37.3 சத வீதமாக வேலையின்மை அதிகரித்தது.

உண்மையை மறைத்து வாக்கு சேகரிப்பு

இவ்வாறு தீவிரமான வேலையின்மை இருந்த போதிலும் 2019 ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றது.இந்த வெற்றிக்கு 2014 ஆம் ஆண்டு தேர்தலை விட 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அதிக இளைஞர்கள் பாஜகவிற்கு வாக்களித்ததாக சிடிஎஸ் ஆய்வுகள் தெரிவித் தன. வேலையின்மையை இளைஞர்கள் உண ரத் துவங்கிய பொழுது அவர்களின் வாக்குக ளை பெறுவதற்காக பல திசை திருப்பல்களும் திரை மறைவு வேலைகளையும் பாஜக அரசு செய்தது.அந்த திரை மறைவு வேலையில் ஒன்று தான் 2017-2018 ஆம் ஆண்டுக்கான காலமுறை வேலையில்லா பட்டாளம் கணக் கெடுப்பு புள்ளி விவரங்களை 2019 தேர்தலுக்கு முன்பு வெளியாவதை தடுத்து விட்டது. 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தான் வெளியிட அனுமதித்தது. மற்றொன்று புல்வாமா தாக்குதலை அப்பட்டமாக அரசிய லாக்கி தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்தியது. பாஜக இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த பிறகு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத தகவலின் படி இளைஞர்கள் வேலையின்மை யால் பாதிக்கப்படுவது அதிகரித்தது. சிஇஎம்ஐ தரவுகளின்படி 10 சதவீதம் (4.2 கோடி) இளை ஞர்கள். மேலும் வேலை செய்யும் வயதை (15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்) அடைந்து வரும் 80 லட்சம் இளைஞர்கள் இந்த பட்டா ளத்தில் இணைந்துள்ளார்கள் (இந்த எண் ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது.) இதில் அதிகம் பேர் பெண்கள் என்பது முக்கிய தகவலாகும். வேலையின்மையின் காரணமாக 2023 ஆம் ஆண்டு விவசாயத்துறையில் 46 சத வீதம் இளைஞர்கள் இணைந்துள்ளனர். அவர்க ளும் விவசாயத்துறை சார்ந்த பாரபட்சங்களால் பாஜக அரசால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி உள்ளனர். இந்த மூன்று விதத்தில் வேலை வாய்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களை பிரித்து விடலாம்.

வேலையின்மை ஒரு திட்டமிட்ட முடக்கம்

வேலையின்மை அதிகரிப்பு மற்றும் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யாதது ஆகிய இரண்டுமே பாஜகவின் திட்டமிட்ட முடக்கம் தான். எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி 2016 ஆம் ஆண்டு சிலமணி நேரங்களில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பு நீக்கம் முறைசாரா தொழில்களை கடுமையாக முடக்கியது. சிறுகுறு நிறுவனங்கள் பணச்சுழற்சி இன்றி இயங்க முடியாமல் முடங்கி அதிகளவிலான வேலை இழப்பு ஏற்பட்டது. பாஜக கொண்டு வந்த இந்த பொருளாதாரப் பேரிடரில் இருந்து மீள்வதற்கு எந்தவித நிவாரண உதவிகளையும் செய்யாமல் அதற்கு அடுத்து 2017-ம் ஆண்டே ஜிஎஸ்டி வரியை திணித்தது. இதனால் இந்தியப் பொரு ளாதாரமே முடங்கியது.

முடக்கப்பட்ட சிறு குறு நிறுவனங்கள்

இந்த இரு அறிவிப்புகளை பாஜக அறி வித்த பிறகு 2018 ஆம் ஆண்டு 35 லட்சம் தொழி லாளர்கள் சிறு, குறு, நடுத்தர மற்றும் வணிக நிறு வனங்களில் பணி இழந்துள்ளனர். இதற்கு ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகியவையே பிரதான காரணம் என்று அகில இந்திய உற் பத்தியாளர்கள் அமைப்பு (AMIO) அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது. பாஜக 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு முதல் 4.5 ஆண்டு களில் இந்த வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. துறை வாரியாக பார்த்தால் வர்த்தகத் துறை யில் 43 சதவீதமும், சிறு நிறுவனங்களில் 32 சதவீதமும்,குறு நிறுவனங்களில் 35 சதவீதமும், நடுத்தர நிறுவனங்களில் 24 சதவீதமும் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதே போல் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை வெளி யிட்ட தகவலின்படி ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் ஆகியவற்றால் 2019-2020 ஆம் ஆண்டு 40, 2020-2021 ஆம் ஆண்டு 175, 2021-2022 ஆம் ஆண்டு 6,222 சிறு குறு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. 2022-2023 மொத்தமாக 10,655 சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்க அறிவிப்புகள், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்பு வழங்கக் நிரப்பப்படாமல் உள்ள ஒன்றிய அரசின் பணியிடங்கள் கூடிய சிறு குறு நிறு வனங்களை முடக்கி வேலையின்மையை அதி கப்படுத்தி மக்களை வறுமையில் தள்ளியது. மேலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் மாற்றுத் திட்டங்களோ பாதுகாப்பு முன்னறிவிப்பு நடவடிக்கைகளோ இல்லாத பொது முடக்கம், தொடர் பணவீக்கம் ஆகியவையும் வேலை யின்மை மற்றும் பொருளாதாரத்தில் கடுமை யான தாக்கத்தை ஏற்படுத்தியது.

வேலையின்மையால் இஸ்ரேல் செல்லத் தயாராகும் கொடுமை

இந்த முட்டாள்தனமான அறிவிப்புகளால் உற்பத்தித் துறை முடங்கி வேலைவாய்ப்புகள் குறைந்து இந்திய இளைஞர்கள் வேலை தேடி உள்நாட்டில் இடம் பெயர்ந்தது போல வெளி நாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்லும் நிலை க்கு தள்ளப்பட்டுள்ளனர். வேலையின்மை மற்றும் வறுமையால் இந்திய இளைஞர்கள் தீவிரமாக பாதிக்கப்பட்டு வருவதன் நிகழ்கால உதாரணம் தான் கடுமை யான போரும் கொலைகளும் நடந்து கொண்டுள்ள இஸ்ரேலுக்கு கட்டுமானப் பணிக்காக இந்திய இளைஞர்கள் செல்லத் தயா ராகி வரும் செய்தி.பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி நடக்கும் ஹரியானாவில் 37.4 சதவீத மாக வேலையின்மை உச்சத்தில் உள்ளது. வேலை இல்லாமல் பசியில் சாவதை விட நாங்கள் வேலையோடு செத்து போகிறோம் என தொழிலாளர்கள் தெரிவித்ததை டைம்ஸ் ஆப் இந்தியா பதிவு செய்துள்ளது. இது வேலை யின்மையின் தீவிரத்தை உணர்த்தும்.

நிரப்பப்படாமல் உள்ள ஒன்றிய அரசின் பணியிடங்கள்

வேலையின்மை தீவிரமாக இருந்தாலும் பாதுகாப்புத் துறை உட்பட கிட்டத்தட்ட 9.64 லட்சத் திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தகவல் 2023 மழைக்கால கூட்டத்தொடரின் போது மாநிலங்களவை மற்றும் மக்களவையில் வெளியிடப்பட்டது. இந்திய நிர்வாகப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வனப் பணி (ஐஎப்எஸ்) உள்ளிட்ட குடிமைப் பணிகளில் மட்டும் 3,000 க்கும் அதிகமான பணியிடங்கள் காலி யாக உள்ளன என ஒன்றிய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித் துள்ளார். உள்துறை அமைச்சகத்தில் சிஆர்பி எஃப், பிஎஸ்எஃப், தில்லி போலீஸ் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புத் துறைகளில் 1,14,245 பணியிடங்கள் காலியாக உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வே துறையில் பயணிகளின் உயிர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் மட்டும் 53,178 பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தமாக அத்துறையில் 2.63 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை முறையாக நிரப்பாததன் விளைவாக நூற்றுக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர் கள் ஒடிசா பாலசோர் மாவட்ட ரயில் விபத்தில் உயி ரிழந்தனர். எனினும் பாஜக அரசு வேலையின்மை குறித் தான கேள்விகள் எழும் போதெல்லாம் அதை திசை திருப்ப மேலும் மேலும் அதிக பொய்களை யும் மதக்கலவரங்களையும் தூண்டி விட்டு உண்மையான பிரச்சனையின் மீதான பொது விவாதங்கள் உருவாகாமல் திசை திருப்பி வருகிறது.

சேது சிவன்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *