மலேரியா பரவலை கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு தோல்வி
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட மலேரியா தொற்றுக்களில் 66% இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவன அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய மலேரியா பரவல் குறித்தான 2022 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை நவம்பர் 30 அன்று வெளியிட்டது.
இந்த அறிக்கையின் மூலம் இந்தியாவில் மலேரியாவை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள மோசமான தோல்வி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, உலகளவில் 24.9 கோடி மக்களுக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது. இது 2019 க்கு முந்தைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் 1.6 கோடி அதிகமாகும்.
உலகளவில் கோவிட் தொற்று ஏற்பட்ட போது உருவான தடைகள் மற்றும் பிற பிரச்சனைகளால் சுகாதாரப் பாதுகாப்பு , பூச்சிக்கொல்லி எதிர்ப்பு, வளக் கட்டுப்பாடுகள் , காலநிலை மாற்றம் மற்றும் மலேரியா தொற்று பரவல் தடுப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதமும் முடக்கமும் ஏற்பட்டது.அதேவேலையில் பல நாடுகள் மலேரியா பரவலை கட்டுப்படுத்தவும் தவறியுள்ளன.
இதனால் அதிக பொருளாதார பிரச்சினைகள் உள்ள நாடுகளில், அதிக எண்ணிக்கையிலான மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கை காலநிலை மாற்றத்திற்கும் மலேரியா பரவலுக்கும் இடையே உள்ள தொடர்பை சுட்டிக்காட்டுகிறது.
வெப்பநிலை, ஈரப்பதம் அல்லது மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்களால் மலேரியா பரவலுக்கு காரணமான அனோபிலிஸ் கொசுவின் பெருக்கமும் அதிகரித்துள்ளது .
உண்மையில், இந்த காரணிகள் அந்த கொசு இனத்தின் நடத்தை மற்றும் உயிர் வாழும் சூழலை மாற்றலாம் (அதிகரிக்கலாம்). காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தீவிர வானிலை நிகழ்வுகள், வெப்ப அலைகள், வெள்ளம் போன்றவை, மலேரியா பரவலை மேலும் மேலும் அதிகரிக்கலாம்.
இதற்கு உதாரணமாக 2022 இல் பாகிஸ்தானில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தை தொடர்ந்து அந்நாட்டில் மலேரியா பரவல் ஐந்து மடங்கு அதிகரித்தது.