Tamil Marx

சர்வதேசம் தொழிலாளர் பிரச்சனைகள்

டெஸ்லா,பிஎம்டபிள்யு வில் தொழிற்சங்கம் அமைக்க போகிறது UAW

டெஸ்லா,பிஎம்டபிள்யு வில் தொழிற்சங்கம் அமைக்க போகிறது UAW
  • PublishedDecember 1, 2023

அமெரிக்காவில் ஃபோர்டு,ஜெனரல் மோட்டார்ஸ் ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய தொழிற்சாலைகளில் ஒருங்கிணைந்த வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் ( UAW )போராட்டம் வெற்றிபெற்றதை தொடர்ந்து. தொழிற்சங்கம் இல்லாத 13 முன்னணி வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் உள்ள 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களை சங்கத்தில் இணைக்கும் பணியை மேற்கொள்ளப் போவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.


டெஸ்லா,பிஎம்டபிள்யு, வால்க்ஸ்வோகன், மெர்சிடிஸ்,வோல்வோ, டொயோட்டா, ஹோண்டா, நிசான், ஹுண்டாய் , சுபாரு, ரிவியன், லூசிட் ஆகிய தொழிற்சங்கம் இல்லாத 13 வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்க இந்த தொழிற்சங்கம் தற்போது முயற்சித்து வருகிறது.


தொழிற்சங்கம் இல்லாத சில உற்பத்தி நிறுவனங்களிடம் குறிப்பாக பிக் த்ரீ எனப்படும் சர்வதேச நிறுவனங்களில் ஒருங்கிணைந்த வாகன தொழிலாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை மூலம் ஊதியத்தை ஒரு மணிநேரத்திற்கு 1,950.29 ரூபாயாக உயர்த்தியது.அதிகபட்சமாக 2,700.33 ஆக உள்ளது.

இருப்பினும், ஊதியம் சலுகைகள் மற்றும் வேலை உரிமைகளில் சங்கம் அமைத்துள்ள தொழிலாளர்களை விட தொழிற்சங்கங்கள் இல்லாத தொழிலாளர்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர் என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


மேலும் பணிபுரியும் இடத்தில் எல்லாவிதமான பாதுகாப்புச் சிக்கல்களும் உள்ள நிலையில் நிறுவனங்களின் வருமானம் மட்டும் பல கோடிகளாக உள்ளது. தொழிற்சங்கம் இல்லாத ஒவ்வொரு நிறுவனத்திலும் பாதிக்கப்பட்டுக் கொண்டுள்ள தொழிலாளி பற்றிய பல கதை உள்ளது, பாதுகாப்பின்மை, குறைந்த ஊதியம், கட்டாயமான முறையில் அதிகப்படியான வேலைநேரம் என பல காரணங்கள் எதிர்கொள்ள நாம் தொழிற்சங்கமாக இருக்க வேண்டும்.


எனவே இந்த 13 தொழிற்சாலைகளிலும் உள்ள தொழிலாளர்களை தொழிற்சங்கத்தின் கீழ் அணி திரட்ட திட்டமிட்டு வருவதாகவும். ஃபோர்டு,ஜெனரல் மோட்டார்ஸ், ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய பெரு நிறுவனங்களோடு நடத்திய பேச்சுவார்த்தையின் வெற்றி எங்களுக்கு அனுபவமாகவும் பலமாகவும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *