அரசுத் திட்டங்களின் பெயரில் கட்சிக்கு நன்கொடை வசூல்:பாஜகவின் மெகாமோசடி அம்பலம்
வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது எனக் கூறி டிசம்பர 8 அன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்திய பாஜக, அதற்கு மறுதினமே அரசுத் திட்டங்களின் பெயரில் மக்கள் காசை கொள்ளையடித்து இருப்பது அம்பலமாகியுள்ளது.
நாங்கள் தான் தேசப்பற்றுக்கு உதாரணம் என பேசும் பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல் சுதந்திரப் போராட்டத்தில் எப்படி நாட்டைக் காட்டிக்கொடுத்ததோ அதே போலத் தான் இன்றும் நம்மை ஏமாற்றி நமது பணத்தை கொள்ளையடித்துக் கொண்டுள்ளது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
ஆம், ‘ஸ்வச் பாரத்’, ‘பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ’, ‘கிசான் சேவா’ என ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள திட்டங்களின் பெயரில் எந்த அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் பணத்தை நன்கொடையாக பாஜக கட்சியின் தலைமை வாரிச் சுருட்டியுள்ளது.
பத்திரிகையாளர் பி.ஆர். அரவிந்தாக்ஷன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் எழுப்பிய கேள்விகளில் இந்தத் திருட்டு அம்பலமாகியுள்ளது.
2021 டிசம்பர் மாதம் முதல் 2022 பிப்ரவரி மாதம் வரை பாஜக கட்சி சார்பில் narendramodi.in மற்றும் NaMo செயலிகள் மூலம் நன்கொடைகளை வசூலிக்க பெரும் நிகழ்வுகளை நடத்தியது. இதற்காக பாஜகவின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டா 2021 டிசம்பர் 25 வாஜ்பாய் பிறந்த தினத்தன்று micro donation என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் கட்சியையும் அதன் “வெகுஜன இயக்கத்தையும்” வலுப்படுத்த இத்திட்டம் மூலம் நன்கொடைகள் சேகரிக்கப்படும் என அவர் பாஜகவின் வளர்ச்சிக்கு நிதி கொடுக்க விரும்பவில்லை என்றால், ஸ்வச் பாரத்’, ‘பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ’, ‘கிசான் சேவா உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்கு இந்த தளங்களின் மூலமாக பங்களியுங்கள் எனவும் நன்கொடையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்களும் அரசு திட்டங்களுக்கே நன்கொடையளிப்போம் என நம்பி அளித்த நன்கொடைகள் அனைத்தும் பாஜகவின் தனிப்பட்ட கஜானாவில் தற்போது குவிந்துள்ளது. ஒவ்வொருவரும் நிதி கொடுத்த பிறகு பாஜக கட்சியின் தலைமை அலுவலத்தில் இருந்து ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நன்கொடை பணம் அனைத்தும் பாஜகவிற்கே சென்றுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சதித்திட்டத்திற்கு உதவும் வகையில் பிரதமர் மோடி 2021 டிச 25 அன்று இந்த கணக்கில் 1000 ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார். இவ்வாறு தான் பலகோடி ரூபாய் மக்கள் பணத்தை பாஜக ஏமாற்றி கொள்ளை அடித்துள்ளது.
அரசின் நலத்திட்டங்களுக்காக தனிப்பட்ட முறையில் நிதி திரட்ட ஒன்றிய அமைச்சகமோ அல்லது பிரதமர் அலுவலகத்திடம் இருந்து எந்தச் சிறப்பான அனுமதியோ அங்கீகாரத்தையோ பாஜக பெறவில்லை என தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக அம்பலமாகியுள்ளது. ஜல் சக்தி அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்தத் திட்டங்களுக்குத் தனி நபர்கள் அல்லது செயலிகள் மூலமாக நிதி திரட்டுவதற்கு எந்த விதியும் இல்லை என்று தெளிவாகக் கூறியுள்ளன.
அதுமட்டுமல்ல NaMo செயலிக்கும் பிரதமரோ, அல்லது அரசின் திட்டங்களுக்கோ எந்த தொடர்பும் இல்லை. அரசு திட்டங்களின் பெயரில் சட்டவிரோதமாக கட்சிக்கு பணம் வசூலித்தது குறித்து பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பதில் சொல்ல வேண்டும் என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
தகவல் ஆதாரம்