Tamil Marx

சர்வதேசம்

சீனாவின் K விசா: சவாலா? வாய்ப்பா?

சீனாவின் K விசா: சவாலா? வாய்ப்பா?
  • PublishedNovember 17, 2025

உலகம் இன்று புதிய புவிசார் மோதல்களிலும், தொழில்நுட்பம்–அரசியல் போட்டிகளிலும் சிக்கியுள்ளது. அமெரிக்கா தனது H-1B விசா முறையை தொடர்ந்து கடுமையாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், சீனா உலகளாவிய பட்டதாரிகள், திறமையாளர்கள், ஆராய்ச்சியாளர்களை நோக்கி K விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு இளம் அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்கள் சீனாவிற்கு வருவதை எளிமையாக்கவும், இளம் அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கிடையேயான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அவர்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை ஊக்குவிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பத்திரிகையாளர் சந்திப்பில் சீன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து K விசா விண்ணப்பிப்பதற்கு சீன நாட்டு நிறுவனகளின் அழைப்பு (invitation) தேவைப்படாது. K விசா வழங்கும் வசதிகள் என்னென்ன? பல-முறை நுழைவு (multiple entries) அனுமதி உள்ளது. விசா செல்லுபடியாகும் கால அவகாசம் (validity period) மற்றும் Extension-காலம் (duration of stay) அதிகமாக இருக்கும். இந்த விதிகள் எப்போது அமலுக்கு வரும்? இவை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 1-இல் நடைமுறையடையும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய K விசா சர்வதேச அளவில் என்ன விளைவுகள் ஏற்படும்? சீனாவுக்கு வெளிநாட்டு இளம் அறிவியல்-தொழில்நுட்ப நிபுணர்கள் செல்வது அதிகரிக்கும். பிற நாடுகளில் விசா கட்டண உயர்வு (அமெரிக்காவின் H-1B விசா கட்டண உயர்வு) காரணமாக இது இந்திய இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும்

முன்பு “உலகின் கனவு இலக்கு” எனக் கருதப்பட்ட அமெரிக்காவை விட, இன்று சீனா அதே நிலையை நோக்கி தன்னம்பிக்கையுடன் நகர்கிறது.

சீனா தற்போது 160க்கும் மேற்பட்ட நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லா நுழைவுத் திட்டத்தை வழங்குகிறது. மேலும் அதன் உயர் திறமையாளர்கள் (skilled labours) விசா முறையின் மூலம் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் வெளிநாட்டு பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சீன கல்வி, அறிவியல், தொழில்நுட்ப மையங்களில் பணிபுரிகின்றனர்.

K விசா இந்த இணைப்பை மேலும் வேகப்படுத்தும் வகையில் 2025 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. Multiple entry, செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு (validity) , நீண்ட நாட்கள் தாங்கும் வாய்ப்பு (stay) —இவை அனைத்தும் திறமைகளை கவரும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டவை.

அமெரிக்காவில் H-1B கட்டணத்தை டிரம்ப் அதிகளவு உயர்த்தியுள்ளதால் இந்த கொள்கை இந்திய இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பாக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

USSR எடுத்த பாதை: ஒத்துழைப்பின் சரித்திரம்

இந்த சூழலை வரலாற்றின் ஒளியில் பார்க்கும்போது, USSR எடுத்த அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டது. 1940 முதல் 1970 கள் வரை, மூன்றாம் தொழில்துறை புரட்சிக் காலத்தில், சோவியத் ஒன்றியம்: ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா நாடுகளுடன் கூட்டு ஆராய்ச்சி மையங்கள் அமைத்தது. தொழில்நுட்ப பரிமாற்றம், பொறியியல் கல்வி, உற்பத்தித் தொழிற்சாலைகள் தொடங்க உதவியது. மருத்துவம், அணுசக்தி, இராணுவ திறன், தொழில்துறை அமைப்புகள் போன்ற துறைகளில் இந்தியா மற்றும் சீனாவிற்கே மிகப் பெரிய உதவி செய்தது. மேற்கத்திய தொழில்நுட்ப காலனித்துவத்தை முறியடிக்கும் மாற்று சக்தியை உருவாக்கியது

USSR இன் நோக்கம் “உலகின் திறமையைச் சுரண்டுவது” அல்ல; அறிவைப் பகிர்ந்து, நாடுகளை காலனித்துவ பின்தங்கிய நிலையிலிருந்து விடுவிப்பதே. இதனால் மூன்றாம் உலக நாடுகள் பல துறைகளில் சுயமுன்னேற்றம் அடைந்தன.

சீனா எந்த திசையில்?

இந்த வரலாற்றை முன்னிறுத்தி பார்க்கும் போது, ஒரு முக்கியக் கேள்வி எழுகிறது—சீனாவின் K விசா உண்மையான கூட்டாண்மை நோக்கமா, அல்லது திறமைகளை மையப்படுத்தும் புதிய மாடலா?

மார்க்சிய விமர்சகர்கள் சொல்லுவது தெளிவாக இருக்கிறது: உலக திறமையை ஈர்ப்பது பொருளாதார ரீதியாக புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் அதனால் உருவாகும் அறிவு உலக மக்களிடமும், குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்திடமும் சென்றடைய வேண்டியது அவசியம்

K விசா ஒரு ஆரம்பம் மட்டுமே. அதை அறிவியல்–தொழில்நுட்பத்தை எல்லோருக்கும் சமமாக பகிரும் சர்வதேச பாலம் ஆக மாற்றினால்தான், இது உண்மையான கூட்டு வளர்ச்சி, சமூக நீதி, மற்றும் உலக தெற்கின் விடுதலை நோக்கங்களுக்குப் பயனாகும்.

 

தோழர் ஹரி

Written By
tamilmarxorg

1 Comment

  • cannabis honey sticks infused with thc for natural sweetness

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *