Tamil Marx

ஆப்பிரிக்கா சர்வதேசம்

பிரான்ஸ் ராணுவத்தை தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றும் சாட், செனகல்

பிரான்ஸ் ராணுவத்தை தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றும் சாட், செனகல்
  • PublishedNovember 30, 2024

ஆப்பிரிக்க நாடுகளான சாட் மற்றும் செனகள் தங்கள் நாட்டில் உள்ள பிரான்ஸ் ராணுவத்தை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளன.

சாட், செனகல், நைஜர், மாலி, புர்கினோ பாசோ உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் பிரான்ஸ் தங்கள் ராணுவத்தை நிலைநிறுத்தி அந்நாடுகளில் உள்ள மிக அதிக மதிப்பு வாய்ந்த யூரேனியம், தங்கம், வைரம், கோக்கோ உள்ளிட்ட இயற்கை வளத்தை கொள்ளையடித்தன.

பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகள் ஆப்பிரிக்காவின் இயற்க்கை வளங்களை பயன்படுத்தி தங்கள் நாட்டை வளர்சிக்கு கொண்டு சென்றன.

இந்த வளங்களை கொள்ளையடிபதற்காக இந்த நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரவாதத்தை வளர்த்து விட்டும் அந்நாடுகளுடன் ராணுவ ஒப்பந்தங்களை உருவாக்கிக்கொண்டும் தங்கள் ராணுவத்தை அங்கு நிலை நிறுத்தின. குறிப்பாக பிரான்ஸ் பல ஆப்பிரிக்க நாடுகளில் தங்கள் ராணுவத்தை நிலைநாட்டிக்கொண்டும் தங்கள் நாட்டு தொழில் நிறுவனங்களை உருவாக்கி அங்கிருந்து இயற்கை வளங்களை கொள்ளையடிக்க துவங்கியது.

இதற்காக அந்நாடுகளில் ஆட்சிக்கவிழ்ப்புகள், பொம்மை ஆட்சிகள் ஆகியவற்றையும் உருவாக்கியது. கடந்த சில ஆண்டுகளாக நைஜர், மாலி, புர்கினோ பாசோ ஆகிய மூன்று நாடுகளும் பிரான்ஸ்க்கு ஆதரவான தங்கள் நாட்டின் பொம்மை ஆட்சியை அகற்றிவிட்டு ராணுவ ஆட்சியை நிலை நாட்டி பிரான்ஸ் ராணுவத்தை நாட்டை விட்டு துரத்தின.

பிரான்ஸ் உடனான ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தன.

இந்நிலையில் சாட் மற்றும் செனகல் ஆகிய இரண்டு நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள பிரான்ஸ் ராணுவத்தை வெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

சாட் சுதந்திரம் அடைந்த 66 ஆண்டுகளாக தற்போது வரை பிரான்ஸ் தன்னுடைய படைகளை அங்கு நிறுத்தி வைத்திருந்தது. அந்நாட்டு ஜனாதிபதியின் இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட 1000 பிரான்ஸ் ராணுவ வீரர்கள் மற்றும் போர் விமானங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட உள்ளனர்.

சாட் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்டெராமன் கௌலமல்லா கொடுத்த பேட்டியில் பிரான்ஸ் எங்கள் நாட்டின் மிக முக்கியமான பங்குதாரராக உள்ளது. எனினும் எங்கள் நாடு (சாட்) வளர்ந்து விட்டது முதிர்ச்சியடைந்துள்ளது, எங்களின் இறையாண்மையின் மீது அதிக அக்கறை கொண்ட ஒரு இறையாண்மை நாடாக உள்ளது என்பதையும் பிரான்ஸ் இப்போது கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் தங்களது நாட்டின் சுய நிர்ணய அடிப்படையில் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் சாட் நாட்டிற்கு சென்ற போது நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகே ராணுவத்தை வெளியேற்றுவதாக சாட் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாட் கடந்த காலங்களில் மேற்கு நாடுகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வந்தது. ஆனால் சமீபத்தில் இவர்கள் ரஷ்யாவுடனான உறவுகளை அதிகரித்து வருகின்றனர்.

இதே போல செனகலில் 1960 முதல் பிரான்ஸ் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள 350 பிரான்ஸ் ராணுவ வீரர்களை வெளியேற்றுவதாகவும் எங்கள் நாட்டில் பிரான்ஸ் ராணுவம் இருப்பது பொருத்தமற்றது எனவும் செனகல் ஜனாதிபதி பஸ்ஸிரோ டியோமயே ஃபயே தெரிவித்துள்ளார்.

2024 மே மாதமே அந்நாட்டு பிரதமர் உஸ்மான் சோன்கோ பிரான்ஸ் ராணுவம் அந்நாட்டில் இருப்பதை விமர்சித்திருந்தார், இறையாண்மை கொண்ட தேசத்தில் அவர்களின் தேவை எதற்கு என கேள்வி எழுப்பினார்.

பிரான்ஸ் 2 என்ற செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டியில் அந்நாட்டு ஜனாதிபதி, பிரான்சில் செனகல் ராணுவ வீர்ர்கள் ராணுவ உடையுடன் ராணுவ டாங்கிகள் அல்லது ராணுவ வாகனங்களுடன் இருப்பதை நீங்கள் கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா ? என கேள்வி எழுப்பினார். மேலும் வரலாற்று ரீதியாக, பிரான்ஸ் அடிமையாக, காலனித்துவப்படுத்தப்பட்ட நாடக இருந்ததில்லை.
சிறிது மாற்று யோசித்து பாருங்கள் சீனா, ரஷ்யா, செனகல் அல்லது வேறு எந்த நாட்டின் ராணுவமாவது பிரான்சில் ஒரு ராணுவ தளத்தை வைத்திருக்க முடியுமா? அது கற்பனை செய்வதற்கே கடினமாக உள்ளது. செனகல் ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு. இறையாண்மை கொண்ட ஒரு நாடு தனது நட்டு எல்லைக்குள் வேறொரு நாட்டின் ராணுவ தளங்கள் இருப்பதற்கு இடமளிக்காது என பேசியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் ராணுவத்தை தங்கள் நாட்டி இருந்து வெளியேற்றிய ஆப்பிரிக்க நாடுகள் சர்வதேச அளவில் ராணுவ கூலிப்படையாக செயல்படுகிற ரஷ்யாவின் வாக்னர் ராணுவக்குழுவை தங்கள் நாட்டில் நிலை நிறுத்தி வருகின்றன. லிபியா, சூடான், நைஜர் ஆகியன நாடுகள் வாக்னர் ராணுவக்குழுவை ஏற்கனவே தங்கள் நாட்டில் அனுமதித்துள்ளன. 2023 இல் சாட் நாட்டில் தங்கள் படையை நிலைநிறுத்த வாக்னர் திட்டமிட்டிருந்த நிலையில் வரும் நாட்களில் சாட் மற்றும் செனகளிலும் வாக்னர் படை நிலைநிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *